Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

தலையெழுத்தை மாற்ற முடியுமா

தலையெழுத்தை மாற்ற முடியுமா

2 mins
240


தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா? இறைவனாலும் முடியாதே என்று சொல்பவர்கள் இனி உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். 

சரபேசுவரர், அறுபத்து நான்கு சிவ உருவத்திரு மேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.

உத்திர காமிகாகமம் இந்த வடிவத்தினை ஆகாச பைரவர் என்று கூறுகிறது. 

தத்வநிதி சிற்பநூல் இவ்வடிவத்திற்கு 32 கைகள் இருப்பதாக கூறுகிறது. இக்கால்களில் ஒன்று துர்க்கையமம்னை அனைத்தவாறு இருக்கும். இந்த வடிவத்தின் சக்தி தேவி அரிப்ரணாசினி.

வியாசர் இந்த மூர்த்தியை பரிகாரமற்ற துன்பத்திற்கும், நோய்களுக்கும், விஷபயம் மற்றும் பூத பிரேத உபாதைகள் ஆகியவற்றுக்கு வணங்கலாம் என்று கூறுகிறார்.

சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.

வடிவங்கள்

லிங்க சரபேஸ்வரர்

காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் நகரில் லிங்க உருவத்தில் சரபேஸ்வரர் உள்ளார். வேறு எங்கும் இவ்வாறு லிங்க சரபேஸ்வர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உருவக் காரணம்

இரணியன் எனும் அசுரனைக் கொன்ற பின் நரசிம்மருக்குக் கோபம் தணியாமல் இருந்தது. அதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டிக் கொண்டார்கள். அவர்களை காக்க சிவன் எடுத்த அவதாரமே சரேபேஸ்வர வடிவமாகும்.

மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவையே சரபேஸ்ரர். தங்க நிற பறவையின் உடலும், இறக்கை இரண்டும் மேல் தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், 4 கால்கள் மேல் தூக்கியபடியும், வால் மேல் தூக்கியபடியும், தெய்வத் தன்மை கொண்ட மனிதத் தலையும் சிங்கமுகமும் கொண்டு விசித்திரமாக அருள்பாலிக்கிறார். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி தேவி.

சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவி தோன்றி நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. 

லிங்க புராண குறிப்புகளும் சரபேஸ்வரரின் சக்தியைக் குறிப்பிட்டுள்ளது. இவர் நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

கோவில்கள்

உங்கள் தலையெழுத்தை மாற்றி உங்களை சிக்கலிலிருந்து விடுவித்து அருள் புரிகிறார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருபுவனம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சரபேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் கம்பகரேசுவரர் கோவிலில் சரப மூர்த்திக்கென தனிசந்நிதி உள்ளது. இங்குள்ள மூலவர் கம்பகரேஸ்வர சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இதற்கு நடுக்கம் தீர்த்த சுவாமி என்று பொருளாகும்.

திரிபுவனச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிறப்பு மிக்க கோயில் திரிபுவனம் கம்பேசுவரர் கோயில். கம்பேசுவரனைத் தேவர்களின் நடுக்கம் தீர்த்த பெருமான் என்று போற்றுவர். இக் கோயிலின் முதன்மையான மூர்த்தி சிலை சரபேசுவரர் ஆகும் 

இவன் கட்டிய துர்க்காச்சி கோயில், தில்லையில் அமைத்த அம்பலம் ஆகிய இடங்களிலும் சரபேசுவரர் திருவுருவங்கள் உள்ளன. இராசராசன் தேவி கட்டிய திரைலோக்கிய சுந்தர கோயிலிலும் ஒரு சரபேசுவரரை அமைத்தான். 

இந்த இடங்களிலெல்லாம் சரபேசுவரரைப் போற்றும் பாடல்களைப் பாடவும், பூசனை வழிபாடுகள் நிகழ்த்தவும் கி. பி. 13ஆம் நூற்றாண்டில் வழிவகை செய்தான். திருமலைநாதர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் சரபேஸ்வரர் குறித்து சரப புராணம் என்னும் தமிழ்நூலைப் பாடியுள்ளார்.

பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு மத்தியில் பக்தர்களின் நம்பிக்கையை அதிகம் பெற்றிருக்கிறது ஸ்ரீ சரபேஸ்வரர். கலியுகத்தின் மனிதன் தன்னுடைய துன்பங்களைப் போக்கிகொள்ளவும் எல்லா ஆபத்துகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் நாம் சரணடைய வேண்டிய ஒரே தெய்வம் சரபேஸ்வரரே.

விதியால் வலிய வரும் துன்பங்களை விரட்டி அடிக்கும் சக்தி சரபேஸ்வரருக்கு உண்டு. மன வியாதி, தீராத பிணி, தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபடுங்கள். வளமாய் வாழுங்கள்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational