Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.5  

anuradha nazeer

Classics

1008 வகையான காய்கள்

1008 வகையான காய்கள்

2 mins
385


ஸ்ராத்தம் 1008 வகையான காய்கறிகளுடன் செய்யவேண்டும்

காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்

பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं

पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते

காரணமில்லாமல் எந்த வழிபாட்டையும் நம் முன்னோர் உருவாக்கவில்லை. இதில் ஒன்றுதான் சிரார்த்தம் என்பது.

சிரார்த்தம் என்ற வார்த்தைக்கு சிரத்தையுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் காரியம் என்பது பொருளாகும். சிரார்த்தம் என்பது முன்னொர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், வம்சத்திற்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் — இதுவே சிரார்த்தம் என்பதற்கான வெளிப்படையான பொருள்.


தந்தையை நினைவுகூர்ந்து ஒரு மகன் இதைச் செய்கிறான். இதை அவனுடைய மகன் பார்க்கிறான். ஓ… நம் தந்தை அவரது தந்தையை இறந்த பிறகும் மதிக்கிறார். அப்படியானால் உயிரோடிருக்கும் இவரை எந்த அளவுக்கு மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றும். இதனால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.

ஆர்வமில்லாமல் செய்யப்படும் எதுவும் – அது தவமாக இருந்தாலும் கூட – எந்தப் பயனும் இல்லை என்று கீதை சொல்லுவதும் சிரார்த்ததின் முக்கியதுவத்தை உணர்ந்தேயாகும்….” பெரியவா.

ஒருமுறை தன் முன்னோர் ஸ்ராத்தத்துக்கு (திவஸம்) தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.


அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்” என்றார். உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்? விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச்செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத் தெரியாதா என்ன ?. இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், “ஆஹா! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்” என்றார்.

வஸிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு ஹிந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நக்ஷத்ரத்தை பார்க்கவேண்டும். வஸிஷ்டரும் அருந்ததியும் இணைபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று புரோகிதர்களும் வாழ்த்துவர்.


ஸ்ராத்தச் சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன.1008 காய்கறிகள் இல்லை.

விஸ்வாமித்திரர் கோபத்துடன் “என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே?” என்று வஸிஷ்டரை வினவினார். அவரோ “நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார்.

இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த உலகம்போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு, “இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே!” என்றாள்.


விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப்போனார்.

அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம்:

காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்

பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं

पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते

“ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் காய்கள் ஆயிற்றா?


மீதி இலையில் எண்ணிப்பாருங்கள், எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008, ” என்றாள். சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் ஞாயம் தானே? ஸமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்!


ReplyForward


Rate this content
Log in

Similar tamil story from Classics