Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

anuradha nazeer

Action Classics Inspirational

4.8  

anuradha nazeer

Action Classics Inspirational

தமிழர் மகரிஷி தந்தை பெரியார்

தமிழர் மகரிஷி தந்தை பெரியார்

2 mins
217


சினிமா உலகில் சிவாஜி கணேசனுக்கு என்று சிம்மாசனம் என்றைக்கும் உண்டு. ஆனால் அவர் அதை எப்படி அடைந்தார் என்று தெரியுமா..?! பேரறிஞர் அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்று ஒரு நாடகம் எழுதி இருந்தார். தி.மு.க மாநாட்டில் அது நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக, மராட்டிய மாமன்னன் சிவாஜியாக நடிக்க வேண்டும். மாநாட்டுக்கு ஒரு வாரம் இருக்கும் போது நடிக்க மறுத்துவிட்டார். இனிப் போய் யாரைத் தேடுவது? அறிஞர் அண்ணாவிடம் இதைத் தெரிவித்ததும் மூக்கும் முழியுமா ஒரு பயலைப் பிடிங்கப்பா… என்று சொல்லிவிட்டுத் திரும்பியபோது கணேசன் (பிற்கால சிவாஜிகணேசன்!) கண்ணில் பட்டார். அவருக்கு முழியும் பெரிசு… மூக்கும் பெரிசு “கணேசா நீ நடிக்கிறியா?” என்றார் அண்ணா. “அண்ணா அது எவ்வளவு பெரிய வேஷம்… அண்ணன் நடிக்கிறதா இருந்தது… நான் எப்படி… நான் ரொம்ப சின்னவன்” என்று பணிவு காட்டியிருக்கிறார் கணேசன். “இனிமேல் போய் யாரைத் தேடறது… இந்தா இதுதான் சிவாஜி பாடம் (வசனம்) நீ படிச்சு வை. நான் சாப்பிட்டிட்டு வந்து கேக்கறேன்” என்று முடிவு சொல்லிவிட்டு நகர்ந்தார் அண்ணா.


சாப்பிட்டு விட்டு, சின்ன தூக்கம் போட்டு விட்டு அண்ணா திரும்பியதும் ஆச்சர்யம் காத்திருந்தது. “அண்ணா இப்பிடி நாற்காலில உட்காருங்க” என்று அழுத்தி உட்கார வைத்துவிட்டு கணேசன் சிவாஜியாக வசனம் சொல்ல ஆரம்பித்தார். கொடுத்த பாடத்தை (நஸ்ரீழ்ண்ல்ற்)ப் பார்த்து படிக்கப் போகிறார் என்று எண்ணிய அண்ணா திகைத்துப் போனார். மொத்த நாடகத்தில் சிவாஜி வேடத்துக்குரிய வசனம் முழுவதையும் (பலப்பல பக்கங்கள்) கிடுகிடுவென்று மனப் பாடத்துடன் நடித்துக் காட்டினார் கணேசன். முழுவசனமும் மனப்பாடம்…! நம்ப முடிகிறதா? “அப்புறம் படிக்கறேனே! கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேனே…!” என்ற சோம்பல் அவரிடம் இல்லை. ஒரே மூச்சில் மனப்பாடம்… கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தும் கடின உழைப்பு… அதனால் தான் நாடகத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக மேடை ஏறி வந்த தந்தை பெரியார். “யாருப்பா அந்தப் பையன்… என்னமா நடிக்கிறான்” என்று புகழ்ந்தபோது “கணேசன்” என்று அறிமுகப்படுத்தினார்கள். “கணேசனா… இல்ல… இல்ல… இவன் சிவாஜிகணேசன்” என்று பட்டாபிஷேகம் செய்தார். திராவிட வசிட்டர் தமிழர் மகரிஷி தந்தை பெரியார். எட்டு மணிக்கு ஷூட்டிங் என்றால் எட்டு மணிக்கு வந்து தயாராகும் இக்கால நடிகர்கள் போல அல்லர் அவர். எட்டு மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதனால்தான் எட்டாத இடங்களை எட்ட முடிந்தது அவரால்!



Rate this content
Log in

Similar tamil story from Action