Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics Others

4.7  

anuradha nazeer

Classics Others

தை அமாவாசை

தை அமாவாசை

1 min
221


இன்று சிறப்பு மிகுந்த தை அமாவாசை... முன்னோர்களின் ஆசியை பெற்று... சிறப்பான வாழ்வை பெற்றிடுங்கள்...!!தை அமாவாசை...!!

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி மரியாதை செய்யக்கூடிய விரத நாளாகும். அமாவாசை தினம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக்கூடிய மிகச் சிறந்த நாள். அமாவாசை அன்று நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் அந்த வழிபாட்டின் பலன் மும்மடங்காகக் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

அமாவாசைதோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.


ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை என 12 அமாவாசைகள் ஒரு மாதத்தில் வருகின்றன. அந்த அமாவாசைகளில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை மிக மிக விசேஷமாக விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.

*ஏன் முன்னோர்களை வணங்க வேண்டும்?*ஒருவன் தன் பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்காவிட்டால், மற்ற தெய்வங்களை வணங்கி பலனில்லை.

அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த நம் முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசை தினங்களில் மிக சிறப்பாக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.


இந்த அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

தானம் அளித்தல் :

இந்த தை அமாவாசை தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிட்டும்.

தை அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.


அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம்.

தை அமாவாசையில் முன்னோரை வணங்குவோம்...அவர்களின் ஆசியைப் பெறுவோம்...!!


Rate this content
Log in

Similar tamil story from Classics