Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Madhu Vanthi

Drama Classics Others

4  

Madhu Vanthi

Drama Classics Others

2k kids - 14

2k kids - 14

6 mins
377


எப்படியோ காலாண்டு தேர்வு சிறப்பாகவே முடிந்தது... தேர்வுத் தாள்களும் திருத்த பட்டு சிறப்பு மரியாதைகளுடன் கொடுக்க பட்டது... அடுத்து அப்படியே ரேங்க் கார்டு...

அதில் வீட்டில் சைன் வாங்க வேண்டும்... மார்கை பார்த்தால் காரி துப்பும் அளவிற்கு இருந்தாலும் ஐஸ் வைத்து ஐஸ்.... சில பல அடிகள் அவமானங்கள் வாங்கி கொண்டு, அதையும் வாங்கி விட்டார்கள்... ஒரு பரிட்சை முடிந்ததற்கே பாதி மலையை கடந்த நிம்மதியில் அனைவரும் மூழ்கி போய் இருக்க.... இது வெறும் டிரைலர் தா.. மெயின் பிச்சர் பின்னாடியே வருது பாரு.. என்பது போல வந்தது அந்த சர்குலர்...

தேர்வு முடிந்து மூன்று வாரம் தான் கடந்து இருந்தது... கொரோனாவால் அதிக நாட்கள் விடுமுறைக்கு பின்னதாக பள்ளி தொடங்கியதால் இந்த கல்வியாண்டு மிகவும் குறுகியதே.. அதனால் தேர்வுகள் எப்போதும் போல் இல்லாமல் வேகமாகவே நடைபெறும்... இன்னும் நான்கு நாட்களில் அறையாண்டு தேர்வுகள் தொடங்கவிருக்கிறது... என குறிப்பிட்டிருந்த அந்த சர்குலரால் அனைவருக்கும் தலைசுற்றல் எடுக்காத குறை தான்... ஏனென்றால் அனைவருக்கும் தெரியும்.. அரையாண்டு தேர்வு வந்தால் நாட்கள் எப்படி ஓடுகிறது என்பதே தெரியாமல் ஓடும்.. அரையாண்டு.. ஃபர்ஸ்ட் மாடல்.. செகண்ட் மாடெல்.. ஃபர்ஸ்ட் ரிவிஷன் செகண்ட் ரிவிஷன்... அனைத்தையும் முடித்து விட்டு அடுத்து என்ன? என்று முன்னால் நோக்கினால் ஐ அம் யுவர் லைஃப் என பல்லை காட்டி கோண்டு பப்ளிக் டைம் டேபிள் நிற்க்கும்...

அதை நினைத்து மாணவர்கள் ஒரு நீண்ட பெருமூச்சு தான் விட்டார்கள்... அடுத்து என்ன... வழக்கம் போல் மரத்தடி ஸ்டடி.. மொட்டைமாடி ஸ்டடி... என மூலை முடுக்கெல்லாம் கும்பல் ஸ்டடி தான்... படிக்கிரார்களா? என்றால் வழக்கம் போல இல்லை தான்...

இப்படியே அனைத்து தேர்வுகளும் நடந்தது ... நாட்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடியது.... ஒரு தேர்வு முடிய.. அடுத்த தேர்வு வந்து அட்டேன்ஷனில் நின்றது.... இடையில் நியூ இயர்.... அதற்கு அடுத்து வந்த தேர்வு தாளையெல்லம் திருத்துவதற்கு ஆசிரியர்களுக்கு நேரம் சுத்தமாக இல்லை...

இடையில் பப்ளிக் டைம் டேபிள் வந்து விட... அதற்கு நாமினல் ரோல் சரி பார்க்க ஏகபட்ட ஜெராக்ஸ்... ஜெராக்ஸ் எடுக்க மறந்து விட்டு வந்தால் இப்போவே வீட்டுக்கு போய் எடுத்துட்டு வா.. இல்லனா வீட்டுல இருந்து யாரையாசும் எடுத்துட்டு வர சொல்லு... என மாணவர்களை பத்தி விடுவதும்... கையில் ஒரிஜினல் வைத்திருப்பவர்கள் ஜெராக்ஸ எடுக்க வெளியில் செல்வதற்கு பீட்டி ஸாரிடம் கெஞ்சுவதும்... அதற்கு அவர், "கிரவுண்ட்ல இருக்குற நாலு மரத்துக்கு தண்ணி ஊத்திட்டு வெளிய பொங்க", என கூறுவதும் சகஜமாகி விட்டது... (மறதிக்கு... தண்ணி ஊத்துற எக்ஸஸைஸ் பன்னா இனி மறக்காது... அதா இப்டி 😁😁)

அதையும் செய்து முடித்து ஜெராக்ஸ் எடுத்து வந்து கொடுத்தால் அடுத்த வாரமே மீண்டும் ஒரு முறை அதே நாமினல் ரோல் சரிபார்ப்புக்கு வரும்....

அதையும் செய்து முடித்து... ஹால் டிக்கெட்க்கு போட்டோ எடுக்கும் நாளில் மட்டும் அந்த கருப்பு வெள்ளை படத்திர்க்கும் கலர் கலராக மேக் அப் போட்டு கொண்டு போஸ் கொடுத்து... ஒரு நல்ல நாளில் அந்த ஹால் டிக்கெட்டும் வந்து... அதில் இருப்பது தங்கள் முகம் தான் என அனைவரும் ஒருவழியாக கன்பார்ம் செய்து விட்டு.....

(ஷப்பா... எனக்கே மூச்சு வாங்குதே.......)

அடுத்து இந்த ரணகளத்திலும் குதுகலம் என பெப்ரவரி மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் வந்தது பன்னிரெண்டாம் வகுப்பு ஃபேர்வெல்... அருமையான கொண்டாட்டம் மாலை வரையில் நடக்க... பலர் பிரிவின் துயரால் அழுது விட்டார்கள்... அப்போதும் மொபைல் இருக்க கவலை எதற்கு... கடைசி வர காண்டெக்ட்ல இருப்போம் என ஒவ்வொரு நட்புகளும் சக நட்புகளுக்கு ஆறுதல் அளிக்க... அன்றில் இருந்து மூன்று நாள் விடுமுறை.... மார்ச் 1 பப்ளிக் முதல் தேர்வு...

மாலை ஒரு பெரிய கேக் வெட்டிக் முகத்தை அலங்கோல படுத்தாமல் அழகாக உண்டு முடித்தார்கள்... கேக்கை ஆடர் செய்யும்போதே வைத்த சட்டம் இது..., "யாராச்சும் கேக்க மூஞ்சில அப்புனா அப்புரம் சாப்பிட கிடைக்காது...", என கூறி விட... அதை ஒப்புக்கொண்டு நாசுக்காக உண்டு முடித்தார்கள்.... அத்துடன் அனைவருக்கும் சிம்பில் அட்வைஸ் ஆசிரியர்கள் கொடுத்தார்கள்... வரவிருக்கும் தேர்வுக்கும்... இனி எதிர்கொள்ள வேண்டிய வாழ்க்கைக்கும்... இத்தனை நாளும் மதிப்பெண் சரியாக இல்லை என கூறி அடித்து திட்டி இருந்தவர்கள் இன்று, "மார்க்ஸ் நம்ம வாழக்கைய ஜட்ஜ் பன்ன போறது இல்ல.. உன் குணம்... உன் திறம... அது எதுவோ அத தேடி போ... ஒரு சின்ன சான்ஸ கூட மிஸ் பண்ணாத... பிரீ கே. ஜி ல அப்பாம்மா சேத்து விட்டுருப்பங்க... அடுத்து அடுத்து என்னன்னு கேக்காமலே அடுத்த கிளாஸ் வந்தாச்சு... இப்பொ இங்க வந்து நிக்குறீங்க... இனி எங்க போகனுமன்னு வீட்டுல சஜ்ஜஷன் கேளுங்க.. தப்பில்ல.. ஆனா முடிவ நீங்க எடுங்க.... ஏன்னா உனக்கு என்ன வரும்.. எது புடிக்கும்ன்னு உனக்கு தா முழுசா தெரியும்... அதனால நல்லா லைஃப பாத்துக்கோ... நல்லா சாப்புடு... படிக்கிரெண்ணு தூக்கத்த கெடுத்துக்காத...." என கடைசி வார்த்தை கூறும் போது ஆசிரியர்களின்பார்வை மிட் நைட் படிப்பாளிகளை மட்டும் தான் நோக்கி இருந்தது... அவர்களுக்கு தான் தெரியுமே.. எந்த பிள்ளை எப்படி என்று... மற்றவர்கள் பிரளயமே வந்தாலும் தூக்கத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள்...

இனி பள்ளிக்கு வந்து படிப்பதும், வராமல் வீட்டில் இருந்தே படிப்பதும் உங்கள் இஷ்ட்டம் என்று தேர்வுக்கு தயாராகும் அனைவரிடமும் கூறி விட்டார்கள்...

சிலர் தேர்வுக்கு மட்டும் வந்து பள்ளியை எட்டி பார்த்தால் போதும் என்று முடிவெடுத்து இருக்க.. பலர் வாரத்தில் ஞாயிறு முதற்கொண்டு ஏழு நாளும் வர திட்டமிட்டு விட்டார்கள்.... படிக்கும் ஆர்வமெல்லம் கிடையாது., இனி ஆசிரியர்களும் வர மாட்டார்கள் அவர்களுக்கு வெரு பள்ளிகளில் சூப்பர்வைசிங் டியூட்டி இருக்கும் என்பதால் தன்னந்தனியாக மாணவர்கள் மட்டும் இந்த அழகான இறுதி நாட்களின் நினைவுகளை சேகரிக்க இந்த திட்டம் எடுத்து இருந்தார்கள்...

            ************

பள்ளியில் பரபரப்பாக நாட்கள் ஓட... இங்கு கல்லூரியிலோ ஆர அமர நிதானமாக ஓடியது... அவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடக்கும் போதே இங்கு செமஸ்டர் தொடங்கி இருந்தது.. அடுத்த செமஸ்டருக்கு இன்னும் முழுதாக ஒன்றரை மாதம் இருக்கிறது... பாடங்களும் விரைவாகவே முடிந்தது.... அதனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் வகுப்புக்கு ஆசிரியர்கள் வருவதே இல்லை.. அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு கிளம்பி விடுவார்கள்... மாணவர்களின் வேலை ரெஃபரன்ஸ் புத்தகங்களை புரட்டுவது... அதை தேடி பக்கத்து பிளாக்கிற்கு செல்ல வலித்து கொண்டு பெரும்பாலும் தத்தம் மொபைல் புத்தகங்களை தான் புரட்டுவார்கள்... அதில் பெரும்பாலும் அவஸ்தைக்கு உள்ளாவது நம் கூகுள் ஐயா தான்... அதிலும் வாய்ஸ் சர்ச் வந்ததும் தான் வந்தது.... இவர்களின் உச்சரிப்பு புரியாமல் அவரே ஒரு வார்த்தையை போட்டு பதிலை தேடி கொடுக்க... அந்த கேள்வியை கேட்டவரிடம் கண்டபடி திட்டு வாங்கி கொள்வர் அவர்....

இப்படியே ஓடியது இவர்களின் நாட்கள்...

அன்று அப்படி தான்..., அர்ஜூன் மயூ தீரா ரக்ஷவ் நால்வரும் பள்ளியில் எடுக்கும் புகை படங்களை ஸ்டேட்டசில் வைத்து சிலதை மித்ராவிற்கும் அனுப்பி இருக்க.... ஒரு கூட்டத்தை கூட்டி அதை காட்டி கொண்டிருந்தாள் அவள்... அந்த பக்கம் மாணவர்கள் மும்முரமாக ஃப்ரீ ஃபயரில் மூழ்கி இருந்தார்கள்... அதுவும் முழு வால்யூமில் வைத்து கொண்டு... எதார்த்தமாக அவ்வழியாக வந்த இவர்களின் ஆங்கில ஆசிரியர் அதை பார்த்து விட... நேராக வகுப்பினுள் புகுந்து விட்டார்...

அதை கண்டு அனைவரும் கப்சிப் என அமர்ந்து விட... ஒருவனிடம் புத்தகத்தை வாங்கி அதை புரட்ட தொடங்கினார்...

"பாடம் தா முடிஞ்சுதே... இனி எத நடத்த போராரு... இது இவரு கிளாஸ் கூட இல்லையே... ", என அனைவரும் மைண்ட் வாய்ஸ் ஓடவிட்டவாரு ரெப்ரெசன்டேட்டிவை ஒரு கோப பார்வை பார்க்க... அவர்களில் பார்வை புரிந்த நம் மித்ரா எழுந்து, "ஸார்.. உங்க ஹவர் இல்ல ஸார்.. மாத்தி வந்துடீங்களா??", என அமைதியாக கேட்க..., "அப்போ யாரு ஹவர்??..", என அவளிடம் கேள்வி கேட்டு பார்வையை வகுப்பு முழுவதும் சுழல விட்டார்... அனைவரும், "இவரு எப்ப டா கெலம்புவாரு நம்ம எப்ப டா நம்ம வேலைய தொடங்க... ", என்பது போல் ஒரு ரியக்ஷனில் இருந்தார்கள்...

இப்போது யாரின் வகுப்போ அதை மித்ரா கூற..., "அவரு கிட்ட நா பேசிக்குறேன்... இப்போ எல்லாரும் செமினாருக்கு ரெடியா....", என கேட்க... அனைவருக்கும் ஹார்ட் அட்டாக் வராத குறை தான்... போன வாரம் பாடங்களை முடித்து விட்டு, இறுதியாக கூறியது... இனி இவர் வகுப்பிற்கு வர மாட்டார் என்ற தைரியத்தில் அனைவரும் அசால்ட்டாக இருக்க.. "ஹான் ரெடி ஸார்", என மித்ரா கூறிட.. அனைவரும் அவளை கொலை வெறியுடன் ஒரு லுக்கு விட்டார்கள்...

"நா பாத்துக்கிறேன்... ", என கண்களாலேயே அனைவரையும் அமைதியாக கூறியவள் அவளே எழுந்து முன்னே சென்றாள்....

வகுப்பு மொத்தம் 40 நிமிடம்... துவங்கி பத்து நிமிடம் ஆகியுள்ளது... இன்னும் அரை மணி நேரத்தை ஓட்டுவது போல ஒரு பாடத்தை தேடி பிடித்தாள்... ஷேக்ஸ்பியரின் ஒரு நாவல்.. அது குட்டி தான்... பத்து நிமிடத்தில் முடிந்து விடும்... அதை எப்படி அரைமணி நேரம் ஓட்ட என யோசித்தவள் முதலில் கதையை இன்ட்ரோ கொடுக்கையில் அவரின் வாழ்க்கை வரலாறை சேர்த்து கொண்டாள்... அப்போது தானே மற்றவர்கள் தப்பிக்க முடியும்.. இல்லையென்றால் அவரும் விட மாட்டார்... தங்கள் ஹச்.ஓ.டி யிடம் சென்று ஒன்றுக்கு இரண்டாக மாட்டி விட்டால் பிறகு அனைவருக்கும் பதிப்பு... மேலும் அவர் அமைதியாக சென்று விட்டால் வகுப்பில் இப்பொழுது இருக்கும் அமைதி எங்கோ தொலைந்து போகும்.. அதனால் தான் இந்த முடிவு... அவள் கணக்கு படி கதையும் முடிந்தது... நேரமும் முடிந்தது... ஆனால் ஆசிரியரோ பத்து நிமிடம் முன்பாகவே கிளம்பி இருந்தார்...

பின் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தவர் அப்படியே எழுந்து பின் வாசல் வழியாக சென்றிருக்க.. இதை முன்னால் இருந்த மித்ராவை தவிர யாரும் கவனிக்கவில்லை... கதையை முடித்தவள், "சரி எல்லாரும் கெலம்புங்க...", என சாதாரணமாகவே கூறி விட.. அப்போது தான் அனைவரும் பின்னால் இருந்து ஆசிரியரை தேட... மித்ரா சிரித்து கொண்டே வெளியே ஓடி விட்டாள்... அடி பாவி.. என்ற மைண்ட் வாய்சுடன் அனைவரும் அவளை நோக்கினார்கள்.

           **********

பள்ளியில்,

அனைவரும் சீக்கிரமாகவே கிளம்பி இருந்தார்கள்... ஆனால் மயூ மட்டும் எனக்கு ஒரு பதில் தெரிஞ்சு ஆகனும்", என விக்ரம் வருகைக்காக காத்திருந்தாள்.. உடன் ஜீனத் கூட அதே பதிலுக்காக அமர்ந்திருந்தாள்... கீர்த்தி தன் சகோதரனை இன்று விரைவாகவே வர கூறி இருக்க அவனும் விரைவாகவே வந்தான்...

பின், மயூவும் ஜீனத்தும் அவன் முன் சென்று கேட்ட கேள்வியில் அவன் ஒரு நொடி ஆச்சரியமாக இருவரையும் பார்த்தான்

"இப்போ அது எதுக்கு உங்களுக்கு??...", என ஆச்சரியம் கலந்த புன்னகையுடன் அவன் கேட்க...., பதிலுக்கு, "அது எதுக்கு உங்களுக்கு... இப்போ நாங்க போலீஸ் ஆக.. என்ன படிக்கணும்.. என்னென்ன எக்ஸம் எழுதனும்... என்னென்ன க்வாலிஃபிகேஷன் வேனும்... அத மட்டும் சொல்லுங்க...", என முடிவாக கூறினாள் மயூ..., "அடியே.. இத கேக்கவா இவ்வளவு நேரம் நின்ன... இத முகில் மாமா கிட்ட கேட்டா கூட சொல்லிருப்பரே..", என அர்ஜுன் கேட்டதற்கு, "அதனால என்ன யார்ட்ட கேட்டாலும் ஒன்னு தானே... நீங்க சொல்லுங்க...", என சீரியஸாக விக்ரமிடம் கேட்டாள் அவள்....

அவனும் சிரித்து கொண்டே, "அப்போ வருங்கால கிரண் பேடி ஆகணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க ரெண்டு பேரும்..?", என மயூ மற்றும் ஜீனத்தை பார்த்தது கேட்க... இருவரும் வேகமாக தலையை ஆட்டினார்கள்.... அவனும் சொல்ல தொடங்கினான்...

அதன் பின் அர்ஜுனை நோக்கி, "நீ என்ன டா பன்ன போற... என்று கேட்க... மார்க்க பொருத்து தா முடிவு.. எது பண்ணுனாலும் புடிச்சு பண்ணனும்.. அவ்ளோ தா...", என்று விட... தீராவோ, "நா .. ஜாலியா காலேஜ் போய்ட்டு... எனக்கு புடிச்ச கதைய எழுதிட்டு வீட்டுலயே இருப்பேன்... எனக்கும் சேத்து என் அண்ணனுங்க பாத்துப்பங்க என்று விட்டாள்..... ரக்ஷவிடம் கேட்டதற்கு சைபர் செக்யூரிட்டி என கூறினான்.

"வாவ்... செம்ம டா... இப்போ இருக்குற சொசைட்டிக்கு சைபர் செக்யூரிட்டி தா ரொம்ப தேவ...", என தொள் தட்டி கூரிய விக்ரம் அப்போது தான் ஒருத்தியை கவனித்தான்... ஹாஸ்டலுக்கு டைம் ஆச்சு... வா போகலாம்... என ஜீனத்தை பிடித்து மதி இழுத்து கொண்டிருக்க... அவளிடம் ஏற்கனவே பேசி பழகி இருந்ததால், "நீ என்ன மா ஆக போற..." என விக்ரம் கேட்க.. அதற்க்கு அவள் பதிலளிக்கும் முன்பாக முந்தி கொண்ட ஜீனத், "அவ புருசனுக்கு பொண்டாட்டி ஆக போரா...", என கூறிவிட்டு ஓட்டம் பிடிக்க... ஓடி சேன்று அவள் முதுகிலேயே ஒரு போடு போட்டு இழுத்து வந்தாள் மதி..., "அண்ணா... இவ சொல்லுறத கேட்காதீங்க.. அண்ணா... நானு ஐ.ஏ.எஸ்...", என கூற... "ஆமா ஆமா.. உன் உயரத்துக்கு ஐ.பீ.எஸ் ஆக முடியாது.. அதனால தானே இந்த முடிவு...", என மதியை. மீண்டும் சீண்டி மறுபடியும் ஒரு அடியை வாங்கி கொண்டாள்... இப்படியே தங்களின் கனவுகளை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர். வீட்டை நோக்கி கிளம்பினார்கள்...

😜😈GALAATTAS ON THE WAY 😈🤪


Rate this content
Log in

Similar tamil story from Drama