Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

வங்கிவாரி சங்கங்கள்

வங்கிவாரி சங்கங்கள்

1 min
219


நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு சங்க நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார் பிரபாத்கர்.

 வங்கிவாரி சங்கங்கள் தங்கள் மாநாடுகளில் பங்கேற்க பிரபாத்கரை அழைத்து மகிழ்வார்கள். 

அப்படி நிஜாமாபாத்தில் நடைபெற்ற ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத்தின் பணியாளர் சங்க மாநாட்டில் பங்கேற்க பிரபாத்கர் அழைக்கப்பட்டிருந்தார்.


 1984 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று பிரபாத்கர் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 

மாநாடு முடிந்தபின் மறுநாள் நவம்பர் 27 அன்று மதிய உணவுக்குப் பின் ஹைதராபாத் சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


விமானநிலையம் நோக்கிக் காரில் தோழர்களுடன் கலகலப்பாகப் பேசிக் கொண்டு சென்றுகொண்டிருந்த பிரபாத்கர் வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொன்னார். 

காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள். பிரபாத்கர் காரை விட்டு இறங்கித் தரையில் நின்றார்.

 நின்றவர் அப்படியே மயங்கிச் சரிந்தார். உடன் இருந்த தோழர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து காரில் உட்காரவைத்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டிருந்தார். 

உடன் இருந்த தோழர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


வாழ்நாளெல்லாம் பிறர் வேதனையைத் தீர்த்து வைத்த அந்தப் பெருமகனை எந்த வேதனையும் அடையவிடாமல் சட்டென்று இயற்கை தன் மடியில் ஏந்திக் கொண்டது. 

செய்தி நாடெங்கும் வங்கி ஊழியர்களிடையே பரவியது. 

அன்று ஹைதராபாத்திலும் மறுநாள் கல்கத்தாவிலும் அவரது உடலைக் காண அமைச்சர்களும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் தோழர்களும் குவிந்தனர்.

 தோழர். பிரபாத்கரின் தாயார் அப்போது பம்பாயில் வசித்து வந்தார்.

 

பிரபாத்கர் மறைந்த அன்று அவருக்குத் தகவல் தர தோழர்கள் அவர் வீட்டுக்கு விரைந்தனர். தன் அன்பு மகனின் மரணச் செய்தியை கேட்க அந்தத் தாய் விரும்பவில்லை போலிருக்கிறது. 

இவர்கள் அவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது அந்தத் தாயின் உயிரும் பிரிந்திருந்தது. 

தோழர்கள் துடித்துப போயினர். ஒரே நாளில் தாயும் மகனும் இறந்த செய்தி சோகத்தை இரட்டிப்பாக்கியது. (மன்னிக்கவும்...இதற்கு மேல் அந்தச் சோக நிகழ்வை விவரிக்க மனம் மறுக்கிறது)

இன்று ஜனவரி 30 ஆம் நாள். இந்நாளை தியாகிகள் தினமாக இந்தியா கடைப்பிடிக்கிறது.


 மதவெறியன், கொடியவன் கோட்சேவால் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இந்நாள் அனைத்து தியாகிகளையும்நினைவுகூர்கிற நாளாகும்.

 வங்கி ஊழியர்களின் நலனுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த பிரபாத்கர்


Rate this content
Log in

Similar tamil story from Inspirational