Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

இறைவன்

இறைவன்

2 mins
384


பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன*....

உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் பிரசவ வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன ஏதேதோ சத்தம் கேட்டது.

நமக்கு என்ன நடக்கப் போகிறதோ...!!! என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசலாடியது.

அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது..!!!

வழக்கமாக நாம் பேசும் இறைவனையே கேட்டு விடலாம் என்று குழந்தை இறைவனை பேச அழைத்தது.

*குழந்தை :* இறைவா ! என்னை எங்கு அனுப்பப் போகிறாய்? வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே.!!


*இறைவன்:*   குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்.

*குழந்தை :*நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்.!!

*இறைவன்:*இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் சந்தோசமாகவே இருப்பாய். சென்று வா...ம்..

*குழந்தை :*என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்கள்...?

*இறைவன்:*கவலைப் படாதே குழந்தாய்.. அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக எல்லாம் செய்யும், உன் மீது அன்பு செலுத்தும், அந்த அன்பை நீ உணர்வாய்.


*குழந்தை :* மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய். நான் மிகச் சிறியவன், என்னால் நடக்க முடியாது, என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.                *இறைவன்:*அது மிகவும் சுலபம். உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும். உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

*குழந்தை :*(அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் இறைவனையே பார்த்தது) ம்ம்ம்…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.          *இறைவன் :*(மென்மையாக சிரித்து)நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.


*குழந்தை :*உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்..?

*இறைவன் :* (வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

*குழந்தை:*(மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா...!!!

*இறைவன் :*(குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லித்தரும். சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திரும்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க முடியாது.

உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின...


*குழந்தை :*(மிகவும் இறைவனைப் பிரியும் சோகத்துடன்)இறைவா இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன்... நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்...

*இறைவன் :*குழந்தாய் தைரியமாக சென்று வா... உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் உனக்கு முக்கியமில்லை. ஆனால் அவளை நீ *அம்மா* என்று அழைப்பாய்.

உன்னைப் பார்த்ததும் உடனே தன்னுடைய வலியை மறந்து ...உன்னை உச்சி முகருவாள், பாராட்டுவாள், சீராட்டுவாள், தன் உதிரதத்தையே நீ பசி அறியா வண்ணம் பாலாக தருவாள், தன்னையே தருவாள். உன்னைப் பார்த்து பார்த்து எப்போதும் எந்நேரமும் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பாள். அவள்தான் இனி ...நீ அழைக்கப் போகும் "அம்மா". 


குழந்தாய் கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன் கவனமாகக் கேள். எந்த சூழ்நிலையிலும் மறந்துவிடாதே... 

" நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த *தேவதை அம்மாவின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.* ".

குழந்தை சரி என்று வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….

தாய்மையை போற்றுவோம்.

*"அம்மா "...She is the direct representative of your favorite GOD.*


Rate this content
Log in

Similar tamil story from Inspirational