Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Others

4  

hema malini

Others

ஆபீஸ் மீட்டிங்

ஆபீஸ் மீட்டிங்

1 min
3


சாதிப்பதற்கான 

ஆபிஸ் மீட்டங்...

குறைந்த நபர்களால் 

நடத்தப்படுவதே...


குளிர்கால தொடரில் 

நடத்தப்படும் 

மீட்டிங்கில் 

சில பாராளுமன்ற உறுப்பினர் தூங்குவது...


சில கூட்டத்தொடரை 

நடத்த விடாமல் 

வெளிநடப்பு செய்வது..


கூட்டமைப்பு 

ஆபிஸ் மீட்டங்கில் 

ஈட்டிங்கிற்கு மட்டுமே 

முக்கியத்துவம் கொடுப்பது...


கட்சி ஆபிஸ் மீட்டிங்கில் 

பணத்தின் அடிப்படையில் 

தொகுதி பகிர்ந்தளிப்பது...


புதியவரை...

தலைவரை...

முதலாளிகளை...

அறிமுகம் செய்யும் 

ஆபிஸ் மீட்டிங்கில் 

வெற்றுப்புகழுரைக்காக 

நேரத்தை வீணடிப்பது...


இது நாம் பெற்ற 

சுதந்திரத்தின் 

ஒருபகுதி...


மறுபகுதி 

ஆபிஸ் மீட்டிங்...

பெண்ணியல் 

உயர்ச்சிக்காக 

சில நிமிட அவகாசமாக 

விரைவுபடுத்துவது...


அலுவலக அறிக்கை 

பலகையில்...

திறனை பாராட்டுவது...


நிர்வாக உயர்விற்கான ஆய்வுகளை 

குறிப்பிடுவது...


தனியார் ஆபிஸ்மீட்டிங் 

தொழில் விரிவிற்கும் 

பொருளாதார உயர்வுக்குமாக...


அரசு ஆபிஸ் மீட்டிங் 

தீயவர்க்கு ஆதரவாக...

இழப்பீடுகளை நியாயப்படுத்த...


தங்களுடைய கட்டாயத்தை 

வற்புறுத்த...சிலருடைய 

இயலாமைக்கு 

சாயம்பூச...


வீட்டிலே 

ஒன்றாக அமர்ந்து 

உணவுண்ண நேரமின்றி...

பரபரக்கும் அலுவலக வேலைக்கிடையே...


உண்ண உடுக்க 

உறங்க...மீண்டும் எழ 

இப்படியாக நித்தமும் 

ருத்ரதாண்டவமே வீட்டில்...


மாதம் ஒருமுறை

வீட்டு மீட்டிங் போடுங்கள்...

பாசத்தையும் 

முன்னேற்றத்தையும் 

பகிருங்கள்...


தேர்ச்சிக்கு தேவையான 

ஆபிஸ் மீட்டிங் 

தேவை என ஆதரவு கொடுங்கள்...


தேவையில்லாத 

ஆபிஸ் மீட்டிங் 

எதிர்க்க முடியாத நிலையில் 

மெளனியாகி விடுங்கள்...


ஆபிஸ் மீட்டிங் 

அவசரமாக கூடலாம்...

எச்சரிக்கையாக இருங்கள்...

எதிலும் நன்மை வெல்க...என 

காரியமாற்றுங்கள்...


Rate this content
Log in