Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Others

4  

hema malini

Others

நீள் சாலைகள்

நீள் சாலைகள்

1 min
4


 

வானவில்லில் 

நீள் சாலைகள்

விண்ணும் மண்ணும் தொட...

அந்த சறுக்கலில் 

வாகனம் செல்ல 

அனுமதி இல்லை...


வான்வெளியில் 

நீள் சாலைகள்...

காற்றை கடந்து 

விமானம் செல்ல...


அது வான்ஊர்திக்கும் 

பறவைக்கும் 

இயற்கை கொடை...


நதிகளின் 

நீள் சாலைகள் 


தேசங்களின் பகைமையில்...

இயற்கையின் சீற்றங்களில்...


கானகத்தின் 

நீள்சாலைகள் 

வனவிலங்குகளின் 

சரணாலயமாக...


தேசிய நெடுஞ்சாலை 

நீள்சாலைகள் 

டோல்கேட்டுகளின் 

கட்டுப்பாட்டில்...


மாநில...நீள்சாலைகள் 

கான்ட்ராக்டரின் 

கட்டுப்பாட்டில் 

மழையில் கரைய 

வெயிலில் செப்பனிட...


இதில் செய்கூலி 

சேதாரம் நிரம்ப உண்டு..


நம் நரம்புகளின் 

நீள்சாலைகள் 

நமது கட்டுப்பாட்டில் 

நம் வாழ்நாளை 

தீர்மானிக்க...


சில கூந்தலின் 

நீள்சாலைகள் 

சாமியார்களை 

நிர்மாணிக்க...


சில நாட்டின் 

வறுமைகோட்டு 

நீள்சாலைகள் 

அழியாக்கொடுமையின் 

நிலைப்பாடாக...


நல்லுறவின் 

நீள்சாலைகள் 

சொர்க்கத்தில் 

நிலைநிறுத்தமாகட்டும்...

பிரதிலிபியின் 

நீள்சாலைகள் 

நம்தலைமுறையினருக்கும் 

வழித்தடமாகட்டும்...


நீரின்...வானின்...

மண்ணின் 

நீள்சாலைகள் 

வரைபடத்தில்...


காற்றின் 

நீள்பாதைகள் 

ஒவ்வொரு உயிரின் 

விதிவசத்தில்...


Rate this content
Log in