நிலமகளின் ஓய்வு
நிலமகளின் ஓய்வு
1 min
178
சூரிய தேவனும் தான்
சற்றெ ஒய்வெடுத்துக் கொள்ள
வருண தேவனும் தான்
அவ்வப்போது மென் தூறலாய் -
தலைகாட்டியே தண்மை பரப்ப
குளிரும் கொஞ்சம் கொஞ்சமாய்
சுற்றமெங்கும் ஆக்கிரமிக்க
நிலமகளும் தான் - சில கால
ஓய்விற்கு தயாராகிறாள் !
வசந்தம் வந்ததும்
பூப்பூவாய் பூமி பூத்துக் குலுங்க
புதிதாய் மலர் வண்ணங்கள் சூடி
எழிலாய் காட்சி தரவே
தன்னை தயார்படுத்திக் கொள்கிறாள் -
பூமிப் பெண்ணவள் !