Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Inspirational Others

4  

hema malini

Inspirational Others

போர் வீரன்

போர் வீரன்

1 min
1



போர்வீரன்...ஆண் 

போர் வீரி...பெண்...

போர்வீரர்...இருபாலரும் 

சிகண்டி...திருநங்கை 

இவரும் போர்வீரரே...


நம் உயிரில் ...

ரத்தத்தில் 

வெள்ளணுக்கள் நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு போர் வீரர்கள்...


தினமும் ...

காலத்தை வென்று 

நம் ஆயுளை காக்கும்

நாடிதுடிப்பும் 

துடிப்பான 

போர்வீரர்தான்...


போர்வீரன் 

நிமிர்ந்தால் ...

சட்டம் நடுங்கும் 


சமுதாய சீர்கேடுகள்

புரட்சியில் மாயும்...

திட்டங்கள் 

மாறும் 

தீய கொட்டங்கள் 

அடங்கும்



கடிப்பதில் 

நோயாக்கி 

நோயதில் 

அழிவாக்கும் 

கொசுவும்...

கொலைகார போர்வீரிதான்...


கூட்டை கலைத்தால் 

கொட்டிபோராடும் 

தேனீயும் கூட 

போர்வீரன்தான்...


மிதிபட்டு மாயும் 

எறும்பும் கூட 

கடித்து மாயும் 

மாவீரன்தான்...


பொய்யை அழித்து 

மெய்யை காக்கும் 

ஒவ்வொரு மனசாட்சியும் 

போர்வீரன்தான்...


வீரன் மாய்ந்து 

வீரம் மாயாவிடில் 

தியாக போர்வீரன் 

பதக்கம் ...

குடும்பம் பெறும் 


பந்தயவீரன் 

முயற்சி வென்றால் 

பதக்கம் அவனது 

தோளேறும்...அவனும் 

நம்பிக்கை வரலாற்றில் 

போர்வீரன்தான்...


சாலைவிபத்தை 

நித்தம் தவிர்த்து 

பயணியை 

காக்கும் ஓட்டுனரும் 

போர்வீரன்தான்...


மனிதத்தை காக்கும் 

விவசாயியும் 

மண்ணைக்காக்கும் 

போர்வீரன்தான்...


தன்னை காக்க 

ஒழுக்கத்தை பேணுவர் 

சமுதாயம் காக்கும் 

போர்வீரரே...


தன்னை காத்து

பிறரை காக்கும் 

மருத்துவரும் 

போர்வீரரே...


தன்னை மறந்து 

நாட்டைகாக்கும் 

தியாகியும் பிறவியில் 

போர்வீரரே 


தன்னை இழந்தும் 

தேசம்காக்கும் 

காவல் தெய்வமும் 

இராணுவத்தோடு 

காவல்துறையினரே...


வீரம் விலை போனால் 

கேவல வீரன் 

போர்வீரன் ஆவதில்லையே...


போர்வீரன் 

என்று புகழ ...


மாவீரர் கோடி 

சரித்திரத்தில்...


மானிடராகி 

இனப்போராளியாக 

மாவீரரானவர் 

உண்டு...


வீரர் மறைந்த 

பின்னும் 

வீரம் மறையாத 

எல்லைகாவலரும் உண்டு...


போர்வீரன் 

என்பவன் 

பிறரை காப்பவன்...


போர்வீரன் 

என்பவன் 

அச்சத்தில் மாயாதவன்...


போர்வீரன் 

என்பவன் 

பிறர் துயர் 

சகிக்காதவன்...


போர்வீரன் என்பவன் 

தியாகத்தை நேசிப்பவன் 

சுதந்திரத்தை 

சுவாசிப்பவன்...


அரக்கர்களை 

வேரறுப்பவன்...மனித 

உரிமையற்றதை 

வேரோடுசாய்ப்பவனே...

🕴🏻🕴🏻🕴🏻🕴🏻🕴🏻🕴🏻🕴🏻🕴🏻🕴🏻


Rate this content
Log in