anuradha nazeer

Classics

4.7  

anuradha nazeer

Classics

ஆலயத்தில்

ஆலயத்தில்

2 mins
251


ஆலயத்தில் செய்யக் கூடாதவை !!*

1. கோவிலில் தூங்க கூடாது .

2. கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது.

3. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.

4. கோயில் குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

5. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

6. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

8. தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக் கூடாது.

9. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்துப் பேசக் கூடாது

11. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது (அதாவது கருவறை இருட்டாக இருக்கும் சமயத்தில் இறைவனை வணங்குதல் கூடாது).

12. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது.

13. குளிக்காமல் கோயிலுக்குள் போகக் கூடாது

14. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.

15. மனிதர்கள் காலில் விழுந்து தெய்வ சன்னதியின் முன்பு வணங்கக் கூடாது.

16. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.

17. படிகளில் உட்காரக் கூடாது.

18. கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக் கூடாது.

19. சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.

20. வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக் கூடாது.

21. மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக் கூடாது.

22. கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.

23. ஒரு பிரதட்சணம், ஒரு நமஸ்காரம்.

24. உடம்பைப் போர்த்திக்கொண்டு பிரதட்சணம், சமஸ்காரம் செய்தல். (பெண்கள் இதற்கு விதிவிலக்கு)

25. தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரித்தல்.

26. பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது.

27. வீட்டு விலக்கு, சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது.

28. கண்டகண்ட இடத்தில் கற்பூரம் ஏற்றக் கூடாது. விக்கிரங்களைத் தொட்டு வணங்கவே கூடாது.

29.தெற்கு முகமாக நமஸ்காரம் செய்யக்கூடாது.

30. தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டோ, ஈரஆடையுடன் கூடவோ தெய்வ வழிபாடு செய்யக்கூடாது.

31.ஆலயத்தின் உள்ளும், புறமும், மல ஜலம் மற்றும் சிறுநீர் கழிப்பது மகா பாவம்.

32. காலணிகள், தோல் பை மற்றும் மிருகத் தோலாலான எந்த பொருளுடனும் ஆலயத்தினுள் நுழையக் கூடாது.

33. கோவில் மூடிய நிலையில் இருக்கும் போதும் சுவாமி வீதியில் உலா வரும் போதும் கோவிலினுள் சென்று தரிசனம் செய்ய முயற்சிக்கக்கூடாது.


Rate this content
Log in

Similar tamil story from Classics