anuradha nazeer

Others

4.4  

anuradha nazeer

Others

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

1 min
2.9K


கொரோனா வைரஸ் தாக்குதலின் அமளி துமளி உலகமெங்கும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் வேளையில் சரியாக பத்து நாட்கள் முன்பு அதாவது உலகப் பங்குத்தந்தை வாரன் பஃபட் ஒரு அசத்தலான காரியத்தை செய்திருக்கிறார்.

 தனது பங்கு வர்த்தக நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்திலிருந்த விமான நிறுவனப் பங்குகளை ஒட்டு மொத்தமாக சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு விற்றுத் தள்ளியிருக்கிறார். பிப்ரவரி 27ம் தேதி ஒரு பில்லியன் எண்ணிக்கையில் ஒரு பங்கின் விலை ரூ 44.60 என்ற விலையில் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்கிக் குவித்த வகையில் அவரது மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 80 பில்லியனாகியிருந்தது.அதனை அவர் மார்ச் 11 மற்றும் 12ம் தேதிகளில் முறையே 22.96 மற்றும் 26.04 டாலர் என்ற விலைகளில் விற்றுத் தள்ளியிருக்கிறார்

 இது அவரது நிறுவனத்தின் வசம் இருந்த 11.2 சதவீதமாகும்.

 இப்படி வாரன் பஃபட் செய்திருப்பதன் வாயிலாக அவர் பங்கு வர்த்தக உலகிற்கு மறைமுகமாக தெரிவிக்கும் சேதி என்னவென்றால் இனி விமானப் போக்குவரத்து என்பது கடுமையாக பாதிக்கப்படும்.நிறுவனங்கள் விமானப் பயணங்களைக் குறைத்துக் கொள்வார்கள். என்னதான் கச்சா எண்ணையின் விலை ரொம்பவூம் சல்லிசாகக் கிடைக்க ஆரம்பித்தாலும் விமானத்தில் பயணிக்க பயணிகள் இனி வராத சூழல் உருவாகும்.அப்படி ஆகும்போது உலகமெங்கும் உள்ள விமானப் போக்குவரத்து என்பது பாதிக்கப்படும் என்பதே இதில் உள்ள மறைமுக சேதி.

 விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றால் உலகமெங்கும் உள்ள நிறுவனங்களின் வர்த்தகமும் பாதிக்கப்படும். அவர்கள் வர்த்தகம் பாதிக்கப்படுவதால்தான் அதிக செலவினங்களை கட் செய்து விடப்போகிறார்கள் என்பதும் இதிலுள்ள உப சேதி.

 அதனால் எந்த அளவிற்கு பங்குச் சந்தைகள் மேலே சென்றனவோ அதே அளவிற்கு கீழேயூம் வரும்.


Rate this content
Log in