anuradha nazeer

Classics

4.8  

anuradha nazeer

Classics

கற்சங்கிலி

கற்சங்கிலி

2 mins
145


திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்!''     ஶ்ரீஆத்மநாதர் ஆலயம்

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்டது... இந்தக் கவிபாடும் கலைக் கூடம்!

'அடங்காமை' என்று கூறுவார்களே... அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும்!

பண்டைநாளில் ஸ்தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதுங்கால்... ஆவுடையார்கோயில் கொடுங்கைகளைப்போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில், 

''ஆவுடையார் கோயில் சிற்ப வேலைகள் புற நீங்கலாக...''

- என தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே...,  'இந்தக் கோயிலின் கலைத்திறன், வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது!' என்பது தெளிவாகும்! 


'குதிரைகளை வாங்கிவருமாறு' தனது அமைச்சர்களில் வயதில் இளையவரான மாணிக்கவாசகருக்கு உத்தரவிடுகிறார் முதலாம் வரகுணபாண்டியன்.

வரகுணபாண்டியனின் கட்டளையை மறந்து சிவத்தொண்டில் ஈடுபடலானார் மாணிக்கவாசகர்.

தான் குதிரைகள் வாங்க... கொண்டு வந்த 49 கோடி பொன்னை ஆவுடையார் கோவில் கட்டுவதிலும், சிவனடியார்களுக்கும் செலவிட்டார். 



இந்தக் கோயிலில், மற்ற சிவாலயங்களில் இருப்பது போல... 

கொடிமரம், இல்லை! பலி பீடமும் இல்லை! நந்தியும் இல்லை! சுவாமிக்கு உருவமும் இல்லை!இங்கு பிரதோஷம் கிடையாது!ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்! 

இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை! மாணிக்கவாசகர் ஜோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

கருவறையில் அரூபமாக உள்ள மூலவர் 'அருள்மிகு ஆத்மநாத'ருக்குப் பதிலாக, உற்சவமூர்த்தியாக.... 'சிவானந்த மாணிக்கவாசகர்'தான் ரிஷப வாகனத்திலும், தேரிலும்... வீதி உலா வருகிறார்!

இங்கே இறைவன் அருவமாக இருக்கிறார்! அதனை உணர்ந்த மனிதன் இங்கே தெய்வமாகக் காட்சியளிக்கிறார்!

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'

என்னும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகளே,இன்று எல்லா சைவத் திருத்தலங்களிலும் இடையறாது ஒலிக்கும் மந்திர வரிகள்!

ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.



இங்கேயுள்ள அம்பாளைக் காண்பதற்கு அம்பாள் சந்நிதியில் 36 துவாரங்கள் உள்ளன. அந்தத் துவாரங்கள் வழியே நம் பார்வையைச் செலுத்தினால், உள்ளே இருப்பது ஒன்றும் நமக்குத் தெரியாது. 

ஆனால், ஒரு துவாரத்தில் நம் இரண்டு கண்களையும் செலுத்தினால், உள்ளே இருக்கும் அம்பாளின் பாதத்தைக் காணலாம். 

அம்பாளுக்கு நைவேத்தியம், தீப ஆராதனை காட்டும்போது மாணிக்கவாசகருக்கும் நைவேத்தியம் தீப ஆராதனை ஒரே நேரத்தில் நடக்கிறது. 

ஸ்வாமி- அம்பாளுக்கு நம்பூதிரிகள், மற்ற சந்நிதியில் கோயில் அர்ச்சகர் பணி செய்கின்றனர். இது இக்கோயிலுக்கு மேலும் ஒரு சிறப்பு!



''ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று!'' என்பது இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. காரணம், மனிதர்களால் கனவிலும் கட்டமுடியாத வண்ணம் கட்டப்பட்டிருப்பதால்! 

சுற்று வட்டாரத்தில் மலைகளே இல்லாதபோது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பாதைப் போக்குவரத்துக்களே இல்லாத காலத்தில் வெறும் பாறைகளைக் கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்பது பிரமிப்பு மிக்கது.

பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது!



ஒரு வீட்டிற்கு தாழ்வாரம் அமைக்கும்போது பனைமரம் அல்லது தேக்கு மரத்திலோ பக்கவாட்டுக் கைகள் அமைத்து அதனை இரும்புக் கம்பிகளால் இணைத்து அதன் மீது குறுக்குச் சட்டங்கள் இணைத்து அதன்மீது ஒடு வேய்வது வழக்கம். 

இதே போல கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் இழைத்துக் காட்டிக் கல்லைக் கவிதை பாட வைத்துள்ளார்கள்!

தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதிலே குறுக்கக் கம்பிகளும் நான்கு பட்டைகம்பிகளும் ஆறு பட்டைக் கம்பிகளும் உருண்டைக் கம்பிகளும் இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல... எல்லாமே கல்லில் செய்து, அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது... 

- சிற்பக்கலை என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

'ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது?!' என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள தாழ்வாரம் எனப்படும் 'கொடுங்கைக்கூரை' ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். 

இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டது


Rate this content
Log in

Similar tamil story from Classics