Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

கருப்பு

கருப்பு

2 mins
5


கருப்பு 


அந்த அரசியல் பொது கூட்டத்தில் எல்லோரும் கருப்பு நிற உடை உடுத்தி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து கொண்டு இருந்தனர்.கட்சி தலைவருக்கு

உயிர்க்கு அச்சுறுத்தல்,அதனால், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர்.

ஆனால் ஆளும் கட்சி,எந்தவித அச்சுறுத்தலும் அரசு கவனத்திற்கு வரவில்லை என்று பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று மறுத்து. விட்டது.


கூட்டம் நடக்க நடக்க,ஒரு தொண்டன்,தலைவர் வாழ்க,அரசு ஒழிக என்று கூச்சல் போட்டு க்கொண்டு இருந்தான்.அவனை அமைதி காக்கும்படி,மேடையில் பேசிக்கொண்டு இருந்த,கட்சி தலைவர்,மன்றாடி கேட்டுக்கொண்டு இருந்தார்.

ஆனால் அந்த தொண்டன் அமைதியான மாதிரி தெரியவில்லை.மறைத்து வைத்து இருந்த,பெட்ரோலை எடுத்து வாயில் ஊற்றிக்கொண்டன்.அதை வேடிக்கை பார்த்த மக்கள்

தண்ணீர் அல்லது மதுவை குடிக்கிறான் என்று நினைத்து க்கொண்டார்கள்.கொஞ்சம் பெட்ரோலை வாயில் வைத்து இருந்தான்.உடனே தீப்பெட்டியை எடுத்து,அதில் இருந்து ஒரு குச்சியை உரசி வாயில் இருந்த பெட்ரோலை பற்ற வைத்திக்கொண்டான்.

தீ வாயில் இருந்து பரவி குடல் வரைக்கும் சென்று எரிந்தது.பார்த்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.முகமெல்லாம் வெந்து,வயிறு வெந்து வலியால் துடி துடித்தான்.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.மேடையில் பேசிக்கொண்டு இருந்த தலைவர் இறங்கி ஓடி வந்தார்.

அவர் வருவதற்குள் தொண்டன் உயிர் பிரிந்து விட்டது.அவனை மடியில் கிடத்தி ஒப்பாரி வைத்து அழுதார்.அநியாயமாக ஒரு உயிர் போய் விட்டது என்று அரசை குறை சொல்லிக்கொண்டு இருந்தார்.


தொண்டனின் உடலை தூக்கி கொண்டு மீண்டும் மேடை ஏறினார்.தொண்டனுக்கு ஐந்து லட்சம் நிதி கொடுப்பதாக முழக்கிமிட்டார்.இந்த உயிருக்கு அரசு பதில் சொல்லி ஆக வேண்டும் என்று அழுது கொண்டே பேசினார்.

அதற்குள் அந்த தொண்டனுடிய அம்மா தலையில் அடித்துக்கொண்டு மேடைக்கு ஓடி வந்தார்.அநியாயமாக,மகனின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது.காரணமானவர்கள் அழிந்து போகட்டும் என்று சாபம் இட்டார்.

அந்த தாய் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் என்று உடனே யாருக்கும் புரியவில்லை.அன்று காலையில் பொதுக்கூட்டத்திற்கு வரும் முன்,அம்மா,வேலைக்கு போகவில்லை,பணம் சம்பாதிக்கவும் இல்லை என்று திட்டி கொண்டு இருக்காதே,இன்று உனக்கு நிறைய பணம் சம்பாதித்து வருவேன் என்று சொல்லி விட்டு வந்து இருந்தான்.

அதே மேடையில் பேசி கொண்டு இருந்த தலைவன்,அந்த தாய் தன்னை தான் திட்டிக்கொண்டு இருக்கிறார் என்று புரிந்து கொண்டு,உடனே ஐந்து லட்சம் பணத்தை தயார் செய்து அந்த தாயின் கையில் கொடுத்து தன் களங்கத்தை துடைத்துக் கொண்டார்.

இது தான் சந்தர்ப்பம் என்று அன்று மாலையே,அரசு

இறந்து போன தொண்டன் எதிர்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை,இறந்து போன தொண்டனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவனுடைய அம்மாவிற்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று கூறி அரசும் நல்ல பெயர் வாங்கி கொண்டது.

தொண்டன் அம்மாவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான் என்று அந்த அம்மா துக்கதிலும் சந்தோஷப்பட்டார்.பணம் சம்பாதித்து கொடுத்தது மட்டுமல்ல,நிரந்தர வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்து விட்டான்.

இதில் யார் புத்திசாலி,இறந்து போன தொண்டனா, தன் களங்கத்தை நீக்க பணம் கொடுத்த தலைவனா,அல்லது, அரசு மீது நம்பிக்கை வரவேண்டும் என்று வேலை கொடுத்த முதல்வரா.

மொத்தத்தில் ஆதாயம் இல்லாமல் அரசியல் இல்லை.


Rate this content
Log in

Similar tamil story from Abstract