நிலவின் தோழி கனி

Abstract Inspirational Others

4.5  

நிலவின் தோழி கனி

Abstract Inspirational Others

மனிதி வெளியே வா

மனிதி வெளியே வா

2 mins
216


"அம்முமா சீக்கிரம் கிளம்புங்க நாம மதுரைக்கு போகனும்" என்றாள் தர்ஷினி. அமுதாவின் 21 வயது பெண்.


"குட்டிமா என்ன மதுரை போகனும் சொல்ற உனக்கு என்ன மா வேலை" என்று கேட்ட தன் தாயை இமைக்காமல் பார்த்தாள்.


அமுதா 42 வயது பெண்மணி தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அழிகிய கலையான முகம் தான் ஆனால் அதில் சோக ரேகைகள் அதிகம் தென்பட்டது. காட்டன் புடவை கட்டி இருந்தார். காதில் சிறு தோடு கழுத்தில் மெல்லிய சங்கிலி (chain) கைகளில் வளையல்கள் இல்லை. நெற்றியில் திருநீறு இட்டிருந்தார்.


அமுதாவின் கணவர் ஒரு வருடம் முன்பு தான் இறந்தார். 


தர்ஷினி பெருமுச்சு விட்டவாறு "எனக்கு எந்த வேலையும் இல்லை மா உங்களுக்கு தான்"


"என்ன குட்டிமா சொல்ற இந்த வீட்ட விட்டா எனக்கு எந்த வேலையும் இல்லையே"


"இனி இப்படி பேசாதீங்க அம்முமா மதுரையில் ஒரு பட்டிமன்றம் நடக்கிறது. நான் உங்க பெயரெ கொடுத்துவிட்டேன். நீங்கள் கலந்து கொள்ளனும் இது கெஞ்சலாவும் எடுத்துக்கலாம் இல்லாட்டி உத்தரவாவும் எடுத்துக்கலாம்"


"குட்டிமா புரிஞ்சு தான் பேசுறியா"


"ஆமா"


"எனக்கு புதுசா எதுவும் வேண்டாம் தர்ஷினி, விட்டுடு என் கனவுகள் சிதைந்து போனதாவே இருக்கட்டும்"


"அம்மா பிளிஸ் இது உங்கள் கனவு மா ஏத்துக்கோங்க அப்பா தான் உங்கள் கனவை ஒதுக்கீட்டாரு இப்ப அப்பா இல்லை இப்ப உங்க கனவை நனவாக்கலாம்மா பிளிஸ் இதுக்கு சம்மதம் சொல்லுங்க"


அமுதா எண்ணம் பின்னோக்கிச் சென்றது.


அமுதாவிற்கு பேச்சாளர் ஆகவேண்டும் என்று பெரிய கனவு. எல்லா பேச்சு போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் முதல் பரிசையும் பெற்றுள்ளார். அவள் கனவிற்கு பெருந்தடையாக வந்தது திருமணம் என்னும் வேலி.


அவரின் பெற்றோர் 20 வயதில் திருமணம் செய்து வைத்தனர். கணவன் தன் கனவை நிறைவேற்ற நினைப்பவனாக இருப்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவரின் கனவிற்கு பெருந்தடையாகவே இருந்து வைத்தார். பெண் என்பவள் தன் சுகத்திற்கும் வீட்டு வேலைக்கும் என்று நினைப்பவர் அமுதாவின் கணவர்.


திருமணம் செய்த ஒரு வருடத்தில் தர்ஷினி பிறந்தாள் பின்னர் அவரது கனவை மனதின் ஆழத்தில் புதைத்து கொண்டார். குடும்பமே கண் என்று நினைத்தார். தர்ஷினியே உயிர் மூச்சு அமுதாவிற்கு.


ஒரு வருடம் முன்பு தான் அமுதாவின் கணவர் இறந்தார். இவர்கள் வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் உள்ளன. தர்ஷினியும் தன் படிப்பை முடித்து தனக்கு பிடித்த வேலையும் செய்தாள்.


"உன் அப்பாவோட உறவுக்காரங்க தப்பா பேசுவாங்க குட்டிமா வேணாம் டா ஆம்பள இல்லாத வீடு மா இது எல்லாரும் கேவலமா பேச ஆரம்பிச்சிடுவாங்க குட்டிமா என் கனவு எப்பவோ செத்துப் போச்சு அப்படியே இருக்கட்டும் குட்டிமா"


"நீங்க இப்படிலாம் பேசுவீங்கனு தான் ஒரு வருடம் காத்துக்கிட்டு இருந்தேன். அம்முமா அப்படி என்னன்னு அவங்க பேச போறாங்க ஆம்பள இல்லாத வீடு இதுங்க இஷ்டத்துக்கு திரியுதுங்க எல்லாம் திமிர் தான் அடங்காதவங்க அப்படி இப்படின்னு ஒரு ஒரு மாசமோ ரெண்டு மாசமோ பேசுவாங்களா மா அப்புறம் அவங்களுக்கு வேற டாபிக் கெடைக்கும் அதை பேசுவாங்க அவ்ளோதான் be chill மா"


"இருந்தாலும் குட்டிமா"


"அம்மா என்னை நம்புங்கள் பிளீஸ் என் அம்முமா ல"


அமுதா சிரித்து கொண்டே "என் குட்டிமாக்காக சரி"


"லவ் யூ அம்முமா" என்று அவரின் கழுத்தை கட்டிக்கொண்டால் தர்ஷினி.


தன் கனவை நனவாய் மாற்ற மதுரைக்கு செல்கிறார் அமுதா தன் மகள் தர்ஷினியோடு.


தன் கனவை தன் குடும்பத்திற்காக மனதுக்குள் புதைத்து கொண்ட பெண்களுக்கு சமர்ப்பணம்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract