anuradha nazeer

Inspirational

4.0  

anuradha nazeer

Inspirational

முகம் மலர்ந்து

முகம் மலர்ந்து

1 min
204


ஜான். எஃப். கென்னடி அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தபோது, டாலஸ் (Dallas) நகரத்தில் மக்களைப் பார்த்து முகம் மலர்ந்து கையசைத்துச் சென்றுகொண்டிருந்தார். சில நொடிகளில் துப்பாக்கிக் குண்டுகளால் வீழ்த்தப்பட்டார். உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து ஒரு கயவன் அவரைச் சுட்டுவிட்டான்.


`நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நாட்டுக்கு நீ என்ன செய்தாய்?’ என்ற கென்னடியின் சொற்கள் உலகம் முழுவதும் இன்றும் எதிரொலித்துக்கொண்டிருப்பவை. ஆனால், `நாட்டுக்கு நீ என்ன செய்தாய்?’ என்று கேட்ட அவர், தன்னையே தன் நாட்டுக்காகத் தந்துவிட்டார். கென்னடியின் நினைவுத்தூணை அமெரிக்கா எழுப்பியிருக்கிறது.


அமெரிக்கா நினைவுச்சின்னங்களை எழுப்புவதிலும், நினைவகங்களைப் பராமரிப்பதிலும், காப்பகங்களை உருவாக்குவதிலும், நூலகங்களைப் பாதுகாப்பதிலும் மிகச் சிறப்பாக விளங்கும் நாடு.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational