Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chandhru Flimist

Drama Romance Classics

4.3  

Chandhru Flimist

Drama Romance Classics

இரவி

இரவி

2 mins
577



காதல் - 

காலநிபந்தனை இல்லாதது !


நேரம் சரியாக இரவு 10.30

"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது " என்ற பாடல்,

மிதமான குறைவொலியில் சிணுங்கிக்கொண்டிருந்தது.


என்னோடு சேர்ந்து என் வீட்டு சுவர்களும்

கேட்டுக்கொண்டுதான் இருந்தது .


விபரம் தெரிந்த நாட்களிலிருந்தே,

அந்த பாடல் மீது,

எனக்கு ஏதோ ஒரு மயக்கம்.


உதடுகள் - அதிகம் முணுமுணுத்த பாடல் கூட

அதுவாகத்தான் இருக்கும் .


காதல் - பல கற்பனைவாதிகளை உருவாக்கியிருக்கலாம்.

அந்த கற்பனைகள் - அவரவர் காதலை உயர்த்தி பிடித்திருக்கலாம்.


அதே போல் தான் "நாணும் ".




இதுவரை உலக வரலாறுகள் -

கண்ட காதலை விட,

"என் காதல் தான் உயர்வானது", என்ற - காதலர்களின் அதே பண்பு,

எனக்கும் உண்டு .


அந்த "ஒரே நாள் உனை நான் " பாடலோடு சேர்ந்து,

சில நிமிடங்களும் கரைந்து,

காற்றில் கலந்துகொண்டிருந்தது .



நேரம் 10.37 :


மீண்டும் அதே பாடல் வரிகள் –

என் கைபேசி அழைப்பொலியில் !


அவள் தான் !


என் எல்லா உணர்வுகளுக்கும்,

சொந்தம் கொண்டாடுபவள் !


உலகில் ஏராள அழகிகள் உள்ள போதும் –

என் கண்களுக்கு காதலாய் காட்சிப்பட்டவள் !


உலகில் பல்லாயிர அழகிய ஆண்கள் உலாவும் பொழுது –

என்னையும் எல்லையற்று காதலித்தவள் !


அவள் தான் அழைக்கிறாள்

கைபேசி வழியாக !


எங்கள் காதல் நேரம் -

எப்பொழுதும் இந்த இரவுக்கூடாரத்தில் தான் !


என் பெயர் *அவளிடமும் 

அவள் பெயர் *என்னிடமும் 

அதிகமாய் ரசிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது .


எங்கள் வார்த்தைகளில்,

அதிகஅளவு இடம்பிடித்ததும் எங்கள் "பெயர்கள்" தான் .


வறட்சி இல்லாமல் உச்சரித்தோம்.

உயிர்வரை உச்சரித்தோம் .

இதைவிட யாரும் அழகாய் உச்சரிக்க முடியாதபடி உச்சரித்தோம் .

காதலின் கட்டமைப்புகளோடு உச்சரித்தோம்.


மீண்டும் மீண்டும் எங்கள் பெயருக்கே செவிகொடுத்த

இந்த இரவுக்குக்கூட,

எங்கள் காதலுச்சரிப்பு

பிடித்துப்போயிருக்கத்தான் வேண்டும் .


தலையணையில்தான் தலை வைத்து சாய்ந்திருப்பேன் –

ஆனால் அவள் மடி விழுந்த உணர்வு தரும்,

அந்த அலைபேசி நிமிடங்கள் .



அவளுக்கும் அப்படித்தான் .


தொலைதூரக்காதலில்,

நினைவுகள் தான் 

மிக நெருக்கமானவை .


அன்றாட நிகழ்வுகளை அப்படியே ஒப்பிப்பாள் –

அதில், அணுவளவும் தோற்காது அவளழகு .


அவ்வப்போது சில பெருமூச்சுகளும்

நிகழ வாய்ப்புண்டு.

அதைக்கூட - எங்கள் கைப்பேசி ,

அளவை சுருக்காமல் அப்படியே கொண்டுவந்து சேர்க்கும் -

செவிவழியாக மனதிற்குள் .


கொஞ்சக்கேட்ப்பாள் -

கொஞ்சாவிடில் சினமாவாள்.


உலக கவிஞர்களெல்லாம் என்னோடு தோற்றுக்கொண்டிருப்பார்கள் -

அந்த "எங்களிரவில்" !


அளவில்லா கற்பனைகளோடு,

அவளழகை அத்துமீறி

வர்ணித்துக்கொடுத்துக்கொண்டே இருப்பேன் !


சில செல்லமான கண்டிப்புகளும் கொடுப்பாள் !


விடியல் என்பது - இல்லாமல் போகட்டும் என்ற எதிர்பார்ப்பு,

அந்த நேரம் எங்களுக்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும் !

 


எங்கள் குரல் கூட ,

பூனை போல பதுங்கித்தான் ஒலித்துக்கொண்டிருக்கும்.

அவரவர் வீட்டில், எங்கள் "ரகசிய இரவுகள்"

சிறைப்பட்டுவிடக்கூடாது என்பதற்க்காக !


வறண்டு வெடித்த நிலப்பெருக்கில்,

மேகம் மெதுவாய் கரைந்து நீராய் விழுவது போன்ற - 

ஓர் சுகம் கிடைக்கும்,

அவள் - குரல் கேட்டால் .


நிஜம் தான் .


முன்பே இவள் அறிமுகம் கிடைத்திருந்தால் –

இவளையே பாடவைத்திருக்கலாம் என்று

திரைக்கவிஞர்கள் கூட எண்ணும் அளவிற்கு –

பாடியவர்களை விட பேரழகாய் பாடுவாள் .


அவளிடம்,

முத்தம் கேட்டு கெஞ்சுவதோடு சேர்த்து,

ஒரு பாடல் பாடவும் கேட்டு கெஞ்சிய நாட்களும் அதிகம் தான் !




சில நேரம் –

எனக்குள் எப்பொழுதும் ஒலிக்கும்

அந்த "ஒரே நாள் உனை நான் " பாடலை பாடுவாள் .


எப்பொழுதும் என் இரவுகள் -

இவளால் தான் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் .



விடியலை நோக்கி நகரும் நிமிடங்களை –

இரவுகளுக்குள்ளேயே கட்டிவைக்க தெரியாமல்

கவலை கொண்டிருப்போம்.


பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ......

திடீரென உறங்கிவிடுவேன் .....

ஆனாலும், என்னை - என் பெயரை உச்சரித்துக்கொண்டேயிருப்பாள்.


இப்படி,

என்னிரவெல்லாம் அவள் உச்சரிப்பிலும்,

அவளிரவெல்லாம் என் உச்சரிப்பிலும்தான்

உலர்ந்துகொண்டிருந்தது .


மீண்டும்

மறுநாளிரவை தேடும் பயணத்தில் -

"நாங்களும் எங்கள் காதலும்"

அவள் என் இனிய - "இரவி"




Rate this content
Log in

Similar tamil story from Drama