Vadamalaisamy Lokanathan

Drama

5  

Vadamalaisamy Lokanathan

Drama

கேதார்நாத்

கேதார்நாத்

2 mins
453


கேதார்நாத்

ஸ்வேதா தன்னுடைய அப்பா,கிருஷ்ணா விற்கு ஒரே மகள் முன்னூறு கோடி ரூபாய் சொத்துக்கு அவள் தான் ஒரே வாரிசு.அப்பா தொடங்கிய நிறுவனத்தின் வியாபாரத்தை இரண்டு மடங்கு அதிகம் செய்து சாதித்த பெண்.பணத்தை இறைத்தால் பணத்தை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளவள்.அதே போல இரக்க குணம் அதிகம் உள்ளவள்.யாரும் பசியுடன் வேலை பார்க்க கூடாது என்ற கொள்கை உடையவள்.நிறுவனத்தில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர் முதல் நிறுவனத்தின் தலைவர் வரை பசிக்குது என்று கேன்டீனில் கேட்டால் 24 மணி நேரமும் பசியை போக்க ஏதாவது ஒரு உணவு காத்து கொண்டு இருக்கும்.வீட்டிற்கு செல்லும் தொழிலாளி  குழந்தைகளுக்கு அல்லது பெற்றோர் அல்லது மனைவி பசியோடு இருப்பாள் என்று கேன்டீனில் சொன்னால் வேண்டும் அளவிற்கு உண்ண உணவு கையில் கொடுத்து அனுப்ப நிரந்தர உத்தரவு.

அது அவளுடைய உற்பத்தியை பல மடங்கு பெறுக உதவி செய்தது,இந்த சாப்பாட்டு விசயம்.ஒரு வேளை உணவுக்கு வேண்டி தானே இந்த ஓட்டம்.நிறைய பணம் சேர்ந்து அதை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடி போவாள் ஸ்வேதா.அந்த அளவிற்கு பணம் பாதாளம் வரை பாயும் என்ற நம்பிக்கை உள்ளவள்.

அவளுக்கு வீரதீர செயல்கள் செய்வதில் அவ்வளவு விருப்பம். மலை ஏற்றம்,கார் பந்தயம்,தடகளம் என்று கால் பாதிக்காத இடம் கிடையாது.அப்படி இருக்கும் போது கேதார்நாத் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்று பல பேர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறாள்.அது மலை பிரதேசம்.இறைவனை தரிசிக்க கால் நடை பயணமாக கடினமான தடைகளை தாண்டி செல்ல வேண்டும் என்று சொன்னதை கெட்டு தானும் ஒரு தடவை சென்று வர தீர்மானித்து,கேதார்நாத் பயண பட்டாள்.துணைக்கு தனது இரண்டு பாதுகாவலர் வந்தார்கள்.

கால்நடையாகவே கோவில் வரை சென்று தரிசித்து விட்டு அடிவாரம் வர புறப்பட்டாள்.அப்போது காற்றும் மழையும் அளவு சொல்ல முடியாத அளவிற்கு கொட்டி தீர்த்தது கூடவே மண் சரிவும்.இவள் நின்று இருந்த இடத்தை சுற்றி பார்த்தால் வெறும் மண் மேடாக தெரிந்தது.கோவில் அஸ்திவாரம் வரை மண் மூடிவிட்டது.

அடிவாரம் செல்ல எந்த பாதையும் கிடையாது.அவளை சுற்றி ஒரு நூறு பேர். குளிருலும் பசியுலும் நடுங்கி கொண்டு நின்றார்கள்.

தொலை பேசி கொஞ்சம் உயிர் இருக்க அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஒரு நூறு பேருக்கு சாப்பாடும் தண்ணியும் அனுப்பி தரும்படி கேட்டாள்.எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன்

உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று கதறி கேட்டாள்.அதற்கு அவங்க சொன்ன ஒரே பதில் காலநிலை சரி ஆகட்டும்.

அவள் விரலை சொடுக்கினால் கோடிகள் கை மாறும்.அவ்வளவு வசதி அவ்வளவு சக்தி,திறமை.ஆனால் இன்று இயர்க்கைக்கு முன் அவளுடைய பணம் வெற்று காகிதம் ஆக தான் காட்சி தந்தது.கோடிகள் செலவு செய்ய தயார்நிலையில் இருந்தும் அவளுக்கும் கூட இருந்த பயணிகளுக்கும் உண்ண உணவு கிடைக்கவில்லை.குடிக்க நீர் கிடைக்கவில்லை.அப்போது தான்

புரிந்தது பணம் சில இடங்களில் மதிப்பு ஒன்றும் இல்லாத வெற்று காகிதம் என்று.

பலர் நினைக்கலாம் பணம் எதையும் செய்யும்.உண்மை எதையும் செய்யும் செயற்கையாக இருந்தால்.இயற்கைக்கு முன்னாடி பணக்காரன் பாமரன் இருவரும் சமம் ஆனவர்கள்.இதை அப்போது தான் புரிந்து கொண்டாள் பணம் ஒரு வெற்று காகிதம்,அதற்கு நாம் தான் மதிப்பு கொடுத்து தலையில் வைத்து ஆட்டம் ஆடி கொண்டு இருக்கிறோம் என்று.


Rate this content
Log in

Similar tamil story from Drama