Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

JAYAMURALI SEYON

Classics Others

5.0  

JAYAMURALI SEYON

Classics Others

அநீதியை எதிர்க்கும் துணிவு

அநீதியை எதிர்க்கும் துணிவு

1 min
490


அநீதியை எதிர்க்கும் துணிவு 

- சேயோன் ஜெயமுரளி


எதிர்க்கும் துணிவு வேண்டும் - அநீதியை 

எதிர்க்கும் துணிவு வேண்டும்...


"பாரதி சின்னப்பயல்" என்றுரைத்த - அந்தப்

பாவலரின் பாங்கான பேதத்தை;

"பாவம் அவளுக்கென்ன தெரியும்அவள் - சின்னப் 

பெண்தானே...!!" என்றிழுக்கும் ஏளனத்தை;

"சிவப்பாய் இருக்கிறவன் பொய்சொல்ல - மாட்டான்"

சித்தத்தில் ஊறுமிந்தக் கற்பிதத்தை;

"கருப்பாய் இருந்தாலும் களையாத்தான் - இருக்க..."

கணக்காக அழுந்துமந்த 'உம்'மையினை.


புதிதாகச் சேரவரும் அலுவலரைக் - காணப்

பேராவல் கொண்டிருக்கும் உள்ளத்தில்,

புதிதாக வருபவரோ பெண்ணென்றால் - தோன்றும்

பொதுவான இளக்காரப் பார்வையினை;

மிடுக்கான பெண்ணவளின் ஆளுமையைக் - கண்டு

மிரட்சியுறும் மாந்தர்தம் மனத்துள்ளே,

துடுக்கான பெண்ணென்றும் திமிர்க்காரி - என்றும்

திடமாகக் கொள்ளும்கண் ணோட்டத்தை.


தோற்றத்தை நுண்ணோக்கி மானிடரின் - சமயச்

சாதியினை ஆராயும் முடமதியை;

ஏற்றத்தைச் சாதியொடு கணக்கிட்டு - இங்கே

ஏற்படுத்தி வைத்திருக்கும் படிநிலையை;

அதிகாரம் உள்ளவரைப் பணிந்தேத்தி - மற்ற

அலுவலரைக் கீழென்னும் மனநிலையை;

கதியற்ற உழைப்பாளர் உழைப்பதனைச் - சற்றும்

கனிவின்றிச் சுரண்டுகிற கொடுமையினை.


வசதியில் நிறைந்தவரைச் "சாப்பிட்டாச்சா? - முதலில்

பந்தியிலே அமருங்க" என்பதற்கும்

வசதியில் குறைந்தவரை நயமாகக் - "கொஞ்சம்

பாத்திரங்கள் விளக்கித்தா" என்பதற்கும்

இடையிலே இறுகிநிற்கும் வேறுபாட்டை - அதிலே

இழையோடும் சமூகத்தின் வக்கிரத்தை;

கடைநிலை மனிதர்களைக் கடைசியிலே - வைக்கும்

கயமைக்கு விலைபோகும் கேவலத்தை.


கணந்தோறும் உழைப்பதனால், தொண்டுகளால் - பயிலும்

கல்வியினால் பலகொடைகள் ஈந்தாலும்,

பணம்பொருளாய்த் தரும்கொடையே கொடையாகப் - புகழும்

பழுதாகிப் போனதொரு பண்பாட்டை;

மதிப்பிங்கே யாவருக்கும் சமமாகும் - அன்றி

மதம்சாதிப் பொருள்பதவிச் செல்வாக்கு

அதிகாரம் எனப்பார்த்து மரியாதை - செய்யும்

ஆகமிக இழிந்ததோர் அநீதியை...


எதிர்க்கும் துணிவு வேண்டும் - எந்த

அநீதியும் எதிர்க்கும் துணிவு வேண்டும்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics