Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Others

4  

hema malini

Others

அந்தி நேர காற்று

அந்தி நேர காற்று

1 min
0


 


இரவுக்கு கை கொடுத்து 

பகலுக்கு விடை கொடுத்து 


இதத்திற்கு 

வலை விரிக்கும் 

அந்தி நேர காற்று...


வாகை மர 

இலை மடங்க...

பறவை கூடடைய...


கூட்டுறவில் 

பறவை பல கூவ 

இளைப்பாறும் நேரம் 

அந்தி நேர காற்று...


தாமரை மூடி 

அல்லி மலர 

இதழ் வருடும் 

அந்தி நேர காற்று...


கடலோரம் அலை 

ஆர்ப்பரிக்க...

குளத்துக்கரை 

அமைதி காக்க...


இனிமைக்கு ஏந்தலாகும் 

அந்தி நேர காற்று...


முந்தானை முறுக்கிட்டு 

பூச்சடையை நீவிவிட்டு 

மாய வசியத்தில் 

காதலனை கன்னிநாட 

அந்தி நேர காற்று...


கூரையிலே 

நிலவொளி நிலவ 

ஏக்கத்திலே 

துயர்வலி உலவ 

அந்தி நேர காற்று 

பதம் தொட்டு வினவ...


விளையாடிய 

சிறுவர்கூட்டம் 

வீடடைய 

விபரீத இரைச்சலிட 

துணையாகும் 

அந்தி நேர காற்று...


வனத்தில் ...

அசைவ மிருகம் 

விழித்தெழ 

சைவ மிருகம் 

பதறி நிற்க 

வரவாகும்...

அந்தி நேர காற்று...


அந்தி நேர காற்று 

சாரலானால் 

இன்பமயம்...


அந்தி நேர காற்று 

வாடையானால் 

வசந்த லயம்...


அந்தி நேர காற்று 

வெப்பமானால் 

எரிச்சல் தரம்...


காற்றுக்கு 

ஊற்றெங்கே 

காண கண் இல்லை...


அந்திக்கு 

அடைக்கலமெங்கே 

குடியிருக்க நிலையிடமில்லை ...


அந்தி நேர காற்று 

அதற்கு...

பூமியை விட்டால் 

புகழிடமில்லை...


வெப்பமோ...பதமோ 

இதமோ...

வரவேற்று 

உபசரிப்போமே......

அந்தி நேர காற்றை 

அனுசரிப்போமே...

அதன் ஆசி பெற்றிருப்போமே

இன்னும் கூறலாம் அந்திக்கடைகள்...அந்தி வான தோரணங்கள்...அந்தி வசியம்...அந்தி ரகசியம் என ஏராளமாக...

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂


Rate this content
Log in