சம்பள நாள் 🥈🥉
சம்பள நாள் 🥈🥉
சம்பள நாள்...
வளம் தரும் நாள்
வளம் பெறும் நாள் சம்பள நாள்...
நீராட்டி விபூதி இட்டு குங்குமத்தில் பொட்டிட்டு
நித்திய சம்பள நாள் திருவோட்டிற்கு...
கோப்பில் கையெழுத்திட்டு கையூட்டு தலையெழுத்தில் ஆதாய சம்பள நாள் அரசியலார்க்கு...
உழைப்பு கருவியோடு களைப்பு வியர்வையோடு
கட்டிடத் தொழிலாளி சம்பள நாள் வலிகளுக்கு...
வலிமை மிக்க ரவுடிகளுக்கு நித்திய சம்பள நாள்
மாமூலாக...
விளைச்சலோடு போராடி
விவசாய உறவோடு உறவாடி
காத்திருக்கும்
சம்பள நாள் அறுவடைக்கு...
சான்றிதழ் வழங்க மனிதன் மறந்த செயல்பாடுகளுக்கு சம்பள நாள் கஜானாவில் இருந்து...
காவலர் கடமைக்கு கண்ணிய நேர்மைக்கு சம்பள நாள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து.
நித்த வலிபட்டு
நெசவு முதல்...
முடி திருத்தம் தொட்டு தச்சு சலவை என அன்றாடம் காய்ச்சிகளுக்கு
சம்பள நாள்...
உழைத்து தேய்ந்த ரேகையிலே உட்காரும் சொற்ப வருமானமே...
ஆயுளை அளந்தளந்து
போதாதென போராடி ஓய்வூதியத்திற்கும் சம்பள நாள்
மக்கள் வரிப்பணத்தில் இருந்து.
.
சம்பள நாள் ...
இன்பம் பல வகையில் பலருக்கு ...
சம்பள நாள்
கிம்பள நாள்
பல வகையில்
சிலருக்கு ...
சம்பள நாள்
சந்தோஷ நாள் நிரந்தரம் இல்லை ஏழைக்கு...
கூலி சம்பள நாள் கும்பிடு சம்பள நாள் கோரிக்கை சம்பள நாள்
கேளிக்கை சம்பள நாள் அன்றாடம் காட்சிகள் சம்பள நாள்
யாவுமே ...
நாளை தின்று
நம்மை நகர்த்தும் பிறவிப் பயனே... பிறவிப் பயனே...