சுவாசிக்கின்றேன்....
சுவாசிக்கின்றேன்....
உன் சுவாசத்தின் நெருடலில்
துடிக்கும் என் காதல் மனது!
உன் முக ஒளியின்
வெளிச்சத்தில் மறுபடியும்
ஒரு மாலை நேர தேடுதல் -
காதல் இரைச்சலில்
அலை பாயும் பொழுதுகளுக்கு
கனவுத் திரை கொண்டு
நீளமாய் நான் மறைத்தாலும்
அகண்டு நித்தமும் விரியும்
உன் மீது நான் கொண்ட
ஆசை மேகத்தின் சிலிர்ப்பினில்
தடுமாறி நிற்கின்றேனே...
என்று நான் உன்னைப் பார்ப்பேனோ
அன்றே என் சுவாசமும்
நிறைவடையும் முழுமையாகவே!