கொள்ள வேண்டியவை
கொள்ள வேண்டியவை
இளைஞனே...!
அறிவைப் பெற்றுக் கொள்
ஆற்றலைப் பெருக்கிக் கொள்!
இன்பத்தை கூட்டிக் கொள்!
ஈகையை வளர்த்துக் கொள் !
உழைப்பைத் தேடிக் கொள்!
ஊக்கத்தை பலமாய் கொள்!
எளிமையை நாடிக் கொள்!
ஏற்றிவிட்டவரை மனதில் கொள்!
ஐயத்தை நீக்கிக் கொள்!
ஒற்றுமையை உருவாக்கிக் கொள்!
ஓதுவதை தினமும் பழகிக் கொள்!
ஔடதமாய் உணவைக் கொள்!
எஃகைப் போல் திடம் கொள்!