Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Others

5  

hema malini

Others

மொட்டு🥀🌷

மொட்டு🥀🌷

1 min
450



மொட்டில் மணககும் 

பிச்சி மொட்டு...

புன்னகை மலரும் 

இதழின் மொட்டு...


தேனே சுரக்கா 

மல்லி மொட்டு 

தேவதை நெற்றியில் 

திலகமும் மொட்டு...


மலர்ந்த ரோஜா 

பாதி மொட்டு...கூந்தல் 

ஏறி குதிக்கும் மொட்டு...


கனியை கொடுக்க 

மலரும் மொட்டு...

கன்னிப்பருவம் 

இளமையின் மொட்டு...


எழுதும் எழுத்தில் 

கவிதை மொட்டு...

இசைகள் இணைய 

மொட்டும் மெட்டு...


ஒற்றை புள்ளி 

முடிவின் மொட்டு 

மூன்று புள்ளி 

தொடரின் மொட்டு...


மலரா மச்சம் 

அழகின் மொட்டு 

கன்னக்குழிகள் 

கவர்ச்சி மொட்டு...


அலையில் நுரைகள் 

வெடிக்கும் மொட்டு 

ஆசை நிலைகள் 

அரும்பும் மொட்டு...


மின்னல் கீற்று 

மின்சார மொட்டு 

நிலவின் கூற்று 

செடியற்ற மொட்டு ...


புள்ளி கூர்மை 

மொட்டு இலக்கணம் 

புத்தி கூர்மை 

மொட்டின் விளைநிலம்...


விரல்கள் குவிந்தால் 

கும்பிடும் மொட்டு 

வெட்கம் குவிந்தால் 

நாணம் மொட்டு...


மொட்டு மொட்டு 

வளர்ச்சியின் திரட்டு...

மொட்டு அற்றால் 

உலகாகும் கெட்டு...


மொட்டு மொட்டு 

மலர்ச்சியின் திரட்டு 

மலரும் மொட்டு...அது 

மங்கள திரட்டு...


ஒற்றுமை மொட்டு 

தேசப் பற்று...நாம் 

ஒன்றாய் மலர்வோம் 

மகிழ்வு ஏற்று...

மொட்டு


Rate this content
Log in