முதுமையின் இளமை
முதுமையின் இளமை
இத்தனை வருடங்கள்
என்னை தாங்கினாய்
அன்பாய் என்னை
ஏந்தினாய்
தாய்மையால் என்னை
அழகு செய்தாய்
நம் வாழ்வில் இன்று வரை என்னை சகித்துக் கொண்டாய்
நான் உன்னை நேசித்து வந்தேன்
நீ என்னை மகிழ்வித்து வந்தாய்
நாம் ஒன்றாகி குடும்பத்தை உருவாக்கினோம்
நம் ஒற்றுமையால்
நம் அன்பால்
நம் முதுமையை
இளமையாக்குவோம்.