தாவணி பெண்கள்
தாவணி பெண்கள்
ஓ!
2000 ஆம் ஆண்டில் பிறந்த
இளைஞனே!
நீ இழந்தது பண்பாடு
கலாச்சாரம் மட்டுமல்ல
தாவணி அனிந்த
அழகு தேவதைகளையும் தான்.
நீ இழந்தது நல்ல உணவை
மட்டுமல்ல
ஆற்றங்கரையோரம் அந்தி வானம்
நாணும் போது
வஞ்சி அவள் இஞ்சி இடுப்பில்
தண்ணீர் குடம் சுமக்க
மஞ்சள் வெய்யில் பட்டு பொன்னாய்
மின்னிய எங்கள் அழகு தாவணிப்
பெண்ணையும் தான்.
நீ இழந்தது நல்ல உறவை மட்டுமல்ல
மார்கழி குளிரில் தையல் அவள்
தளிர்க்கொடியாய்
இல்லாத இடை கொண்டு
அழகாய் வாசலிலே மா கோலம் இட்ட
அந்த பூப்போட்ட தாவணி அணிந்த அழகான பெண்ணையும் தான்.
நீ இழந்தது உண்மை காதலை மட்டுமல்ல
அஞ்சனம் தீட்டாத அழகிய விழிகளை
சாயம் பூசாத தேன் சிந்தும் இதழ்களை
முத்து பல் சிரிப்பழகை
கார் கூந்தல் அழகை
உதட்ரோர புன்னகையை
வஞ்சி அவள் கொஞ்சி, கொஞ்சி
பேசிய வட்டார மொழி அழகை
மூச்சுக்கு முந்நாறு தடவை
அவள் தாவணி சரி செய்யும் அழகை
நீ இன்று கோடி கொடுத்தாலும்
காண கிடைக்காத
அந்த மண் வாசம் கமழ்ந்த
கலாச்சாரம் உச்சம் தொட்ட
உவமைகளுக்கு அடங்காத
உன்னத தாவணி கனவு கன்னிகள்.
எங்கள் மனதில் பசுமரத்து ஆணியாய்
ஆழமாய் பதிந்த அந்த அழகு தாவணி அணிந்த தேவதைகள்.