Madhu Vanthi

Drama Romance Children

4  

Madhu Vanthi

Drama Romance Children

2k Kids - 6

2k Kids - 6

6 mins
223


அன்றைய தினத்தின் இறுதி பாட வேலை.... 10 B வகுப்பறை ஒரு மினி போர்களமாக மாறி இருந்தது.... மாணவர் வரிசையில் பாதிக்கும் மேலாக ரைட்டிங் பெஞ்ச் மேல் எழுந்து நின்று கொண்டு பேப்பரை சுருட்டி பந்தாக மாற்றி கொண்டு பரிட்சை அட்டையை பேட்டாக வைத்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள்.... மீதி பேர் மொத்த வகுப்பிலும் நடக்கும் அலப்பறைகளை கண்டு லைவ் கமென்ட் கொடுத்து கொண்டிருந்தார்கள்...

அப்படியே இந்த பக்கம்... மாணவிகளாவாது அமைதி காப்பார்கள் என்று நினைத்தால்.... அவர்கள் அதற்கும் மேலான ஒரு அலப்பரையை செய்து கொண்டிருந்தார்கள்.....

ஒரு கூட்டம் அப்படியே பென்ஞ்சில் இருந்து கீழே இறங்கி வட்டமாக அமர்ந்து கொண்டு கில்லர் விளையாட்டு விளையாட... மற்றொரு கூட்டம் டேபிலிலேயே அமர்ந்து கொண்டு ஒரு வரிசை முன்பக்கமும் அடுத்த வரிசை பின் பக்கமும் திரும்பி அமர்ந்து அந்தாக்சரி விளையாட..... சிலர் பிரளயமே வந்தாலும் தூக்கம் தா முக்கியம் என மேஜை மீது கௌந்து விட.... அனைத்திற்கும் மேலாக நம் மதி மற்றும் ஜீனத் மேலும் சிலருடன் வேற லெவலில் ஒரு விளையாட்டை விளையாடி கொண்டிருந்தார்கள்.

சுஜியும் ஸ்ரீயும் அந்தாக்சரி விளையாட கிளம்பி விட.... பில்கி அதை வேடிக்கை பார்க்க அமர்ந்து விட.... இவை எதிலும் இல்லாமல் மிச்ச மீதி இருப்பவர்களை மதியும் ஜீனத்தும் இழுத்து கொண்டு அந்த விபரீத விளையாட்டு விளையாட சென்றார்கள்.... ஐந்து பேர் அமரும் பென்ஞ்சில் எட்டு பேர் அமர்ந்து கொண்டு இரு பக்கமும் இருந்து ஒருவர் மற்றவரை இடித்து தள்ளி கொண்டிருந்தார்கள்.

(அது ஒன்னும் இல்ல பா... இதுவும் ஒரு வித கேம் தா... பேரு பெஞ்ச் ஃபைட்... ரெண்டு டீம் ஒரே பெஞ்ச்ல ஓக்காந்து இருப்பாங்க... நாலு பிளஸ் நாலு... மொத்தம் எட்டு பேர்.... அந்த பக்கம் இருந்து இந்த பக்கம் தள்ளுவாங்க... இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் தள்ளுவாங்க.... எந்த பக்கம் ஃபர்ஸ்டா ஒரு ஆள் கீழ விழுறாங்களோ அவங்க அவுட்..... அவ்ளோ தா..

இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு கேட்டிங்கன்னா..... லாஸ்ட் கிலாஸ்க்கு வர வேண்டிய மிஸ் இன்னைக்கு லீவ்.... )

வழக்கமா மிஸ் லீவ் என்றால் கிளாஸ் லீடர் சென்று வேறு ஒருவரை சப்ஸ்ட்யூட்க்கு கூட்டி வர வேண்டும்.... ஆனால் இந்த கிளாஸ் லீடரோ மகா அப்பாவி... பெயர் அரவிந்த்.... யாரேனும் வந்து, "உங்க கிளாஸ் லீடர கூப்புடுறாங்க....", என கூறி அழைத்தால்..., "இந்த கிளாஸ்ல இருக்குற நாபத்தி எட்டு பேருமே கிளாஸ் லீடர் தா... யார வேணும்னாலும் கூட்டீட்டு போங்க....", என கூறி அமர்ந்து விடலாம் போல் தோன்றும்.... அப்படி பட்ட வகுப்பு இது... இவன் மட்டுமே அதிகாரம் செய்ய வேண்டிய வகுப்பில்.... மொத்த வகுப்பும் சேர்ந்து கொண்டு இவனை அதிகாரம் செய்யும்.... அதையெல்லாம் அப்படியே கேட்டு கொண்டாலும் கடமை உணர்ச்சி அதிகம்... ஆசிரியர் கூறுவதை அப்படியே செய்வான்.... அதற்கு சக மாணவர் மத்தியில் கருத்து வேறுபாடு எழுந்தால் அவர்களுக்காக ஆசிரியரிடம் பரிந்து பேசவும் செய்வான்....

(பெருசா ஒன்னும் இல்ல..... 10 மார்க் டெஸ்ட் எழுத சொன்னா.... எல்லாம் மூஞ்சியும் தொங்கி போகும்... அப்போ போய் 2 மார்க்ல அஞ்சு கொஸ்டீன் எழுதட்டா?", அப்டின்னு கெட்டுட்டு வருவான்....

இன்டர்வெல்... லஞ்ச் ப்ரேக் டைம் ஆகியும் மிஸ்சோ சாரோ பாடம் நடத்திட்டே இருந்தா, "டைம் முடிஞ்சுதுன்னு அவன் வாய விட..., "இன்னைக்கு இத முடிக்கலாம்ன்னு பாத்தேன்... கொஞ்சம் பொருக்க மாட்டிங்களாக்கும்", என மத்தவங்களுக்காக மிஸ்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்குவான்.......

இந்த மாறி சில பல சோஷியல் சர்வீஸ் செய்றதால அவன எல்லாருக்கும் பிடிக்கும்.., )

இன்று வகுப்புக்கு பத்து நிமிடம் ஆகியும் யாரும் வராததால், "மிஸ் லீவ் போல.... நா போய் வேர யாரையாச்சும் கூட்டிட்டு வரென்....", என கிளம்பியவனை...., சிலர் மிரட்டியும்... சிலர் கெஞ்சியும் செல்ல விடாமல் தடுத்து விட்டார்கள்... இருந்தும் பயத்துடன் அவன் வாயிலிலேயே நின்று கொண்டான்...

திடீரென ஸ்டாப் யாராவது வந்து விட்டால் உள்ளுக்குள் நடக்கும் அட்டகாசங்களை தடுத்து நிறுத்தி தற்காலிக அமைதியை நிலைநாட்டினால் மட்டுமே திட்டு வாங்குவதில் இருந்து அவனும் தப்பிக்க முடியும் பிறரும் தப்பிக்க முடியும்... அவன் வாயிலில் காவலுக்கு நிற்கும் தைரியத்தில் உள்ளே அட்டகாசங்கள் தொடர்ந்தது....

இங்கு இவ்வாறு இருக்க... 10th A வகுப்பில் அப்படியே எதிர்ப்பதமாக இருந்தது.... பின் ட்ராப் சைலன்டில் வகுப்பறை இருக்க... பென்ஞ்சில் இருவர் என அமர்ந்து தலையை புத்தகத்தினுள் புதைத்து வைத்திருந்தார்கள்... பேசிப்பேசி கதை அளக்க அவர்களுக்கும் ஆசை தான்.... ஆனால் என்ன செய்வது... சிறிது சத்தம் வந்தாலும் டெஸ்ட் எழுத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்களே... இன்னும் கால் மணி நேரம் தான் பள்ளி இறுதி மணி அடிக்க.... ஒரு ஐந்து நிமிடம் அமைதி காத்தால் போதும்... கடைசி பத்து நிமிடத்தில் டெஸ்ட் எழுத நேரம் இல்லை என கூறி தப்பி விடலாம்... அதனால் மிக மிக மிக கஷ்ட்டப்பட்டு படிப்பது போல நடித்து கொண்டிருந்தார்கள்...

இன்றைய இறுதி வகுப்பு அவர்களின் வகுப்பாசிரியர் கௌசல்யா மிஸ் தான்... அவர் வகுப்பினுள் நுழையும் போதே ஏதோ ஒரு பரபரப்பில் இருந்தார்... கையில் சில ரெக்கார்ட் பேப்பர்ஸ் இருந்தது..... அதைக்கண்ட நொடியே, "இன்னிக்கு மிஸ் பாடம் நடத்த போறதில்ல.... ஏதோ வேலையில இருக்காங்க...", என அனைவரின் கண்களும் பிரகாசித்தது... ஆனால் மறுநொடியே ஏமாற்றத்தின் மூழ்கியது... அவர் கூறிய வார்த்தையால்.

"உங்களுக்கு பப்ளிக் எக்ஸாம்காக ஹால் டிக்கெட்க்கு நாமினல் ரோல் டீடைல்ஸ் தான் ஃபில் பண்ண போறேன்... சோ மண்டே நடத்தின மனப்பாட பாடலையும் அதோட டென்மார்க் கொஸ்டீனையும் இப்போ ஒக்காந்து டெஸ்ட் எழுதுங்க...", பட்டன ஒரு ஆப்பு ஓப்பன் செய்தார்...

அதை கேட்டு நொடி, "மீஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்.....", என வகுப்பே ஒரு ராகத்தில் மூழ்கியது... "என்னாச்சு.... ஏற்கனவே டெஸ்ட் சொன்னது தானே... ", என மிஸ் கேட்ட பாவமாக அவரை அனைவரும் லுக்கு விட... "மிஸ்.... நீங்க சொல்லி மூனு நாள் ஆச்சு.... சோ கொஞ்சம் ரிவிஷன் பன்னிக்கிறோம்.... டென் மினிட்ஸ் டைம் குடுங்க மிஸ்...", என அனைவர் சார்பாகவும் தாரா கேட்க... "ஆமா மிஸ்... டென் மினிட்ஸ் படிச்சுட்டு அப்ரமா எழுதுரோம்..... பிளீஸ் மிஸ்.... கண்டிப்பா எழுதிருரோம்...", என மீண்டும் கோரஸ் கடலில் மூழ்கியது..

இரண்டு நொடிகள் அனைவரையும் முடிந்த அளவுக்கு முறைத்தவர், "சரி.... பத்து நிமிஷம் படிச்சுட்டு எழுதுங்க...", என அனுமதி வழங்கிட.... அப்போது குனிந்த தலைதான்.... அரை மணி நேரம் ஆகியும் இன்னும் நிமிரவில்லை...

இவர்களுக்கு அந்த ஒற்றை அனுமதி போதுமே பத்து நிமிடத்தை முப்பது நிமிடமாக மாற்ற...

எல்லாம் அவர்களின் அனுபவமே.... ஆசிரியர்கள் இப்படி அவசர வேலையில் இருக்கும்போது டெஸ்ட் எழுத தான் கூறுவார்... ஆனால் பத்து நிமிடம் படிப்பதற்கு அனுமதித்து விட்டால் அடுத்து அங்கு நிலவும் அந்த அமைதி கலையும் வரையில் அவர் மூழ்கி போய் இருக்கும் அந்த வேலையை விட்டு நிமிரவே மாட்டார்... டெஸ்ட்டும் நடக்காது...

வகுப்பு முடிய இன்னும் கால்மணி நேரம் இருக்கிறது.... எப்படியாவது இன்னும் ஐந்து நிமிடம் அமைதி காத்து விட்டால் போதும்... அடுத்த பத்து நிமிடத்தில் எழுதி முடிக்க நேரமில்லை என கூறி தப்பி விடலாம்...

நிமிடங்கள் நகர்ந்தது.... மெல்ல மெல்ல பேச்சு சத்தம் எழுந்தது... ஆசிரியரும் தன் வேலை முடியும் நிலையில் இருந்ததால் அதை மொத்தமாக முடித்து விட்டு, "என்ன.... பத்து நிமிஷம் டைம் கேட்டீங்க... இன்னும் அந்த நேரம் முடியலையோ....", என்றவாறே பேனாவை மூடிவிட்டு நிமிர்ந்து அனைவரையும் நோக்கினார்....

அனைவரும் பலவாறாக பல்லை காட்டி இளிக்க..., "கிளாஸ் முடிய போதுன்னு தெரிஞ்சதும் சத்தம் ஏறுது.... ம்ம்ம்ம்.... எல்லாரும் டெஸ்ட் நோட்ட எடு.... பத்து நிமிஷம் இருக்கு.... எழுதி குடுத்துட்டு போங்க....", என கூற... அவர்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த சாக்கை உபயோகித்து தப்ப நினைத்து..., "மிஸ்.... டைம் பத்தாது....", என வழக்கம் போல கோரஸ் பாட...., "இன்னைக்கு ஒரு பத்து நிமிஷம் லேட்டா போகலாம்...... எடு எடு.. பேப்பர எடு.... வாழ்த்து பாடல் மட்டு எழுது", என கௌசல்யா மிஸ் ஒரு முடிவுடன் கூற அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது....

"மீஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்.....", என மீண்டும் பழைய படிக்கே துவங்க... "என்ன??... இவளோ நேரம் படிச்சீங்க தானே... எழுது எழுது... "... எனத் திட்டவட்டமாக அவர் கூறி விட வேறு வழியில்லாமல் நோட்டை தூக்கிக் கொண்டு அமர்ந்தார்கள்.... பெல் அடித்தால் விட்டு விடுவார் என்ற நம்பிக்கையில்.....

ஓக்காந்தது ஓக்காந்த படியே இருக்க... சில அதி மேதாவிகள் (அதா பா... கிளாஸ் டாப்பர்ஸ்)... எக்ஸ்பிரஸ் வேகத்தில் பக்கத்தை நிரப்பி கொண்டிருந்தார்கள்... அதை நோட்டமிட்ட ஹரினி, "பாஹ்... நம்மளுக்கு இந்த மூள இல்லாம போச்சே...", என சிந்தித்துக் கொண்டே பராக்கு பார்த்துக் கொண்டிருக்க...., "இன்னும் எழுத தொடங்கலயா....", என்ற ஆசிரியரின் சொல்கேட்டு வேகமாக பேனா மூடியை திறந்து பேர்ப்பரில் வைத்திருந்தாள்.

"ம்ம்ம்... என்ன.. எழுதலாம்....????... ஹான்.. ஃபர்ஸ்ட் டேட்.... நெக்ஸ்ட்..... டே..... அடுத்து....... டெஸ்ட் நம்பர் மூனு.... தமிழ் தேர்வு எண்.. மூனு.... (ரெண்டும் ஒன்னு தா.. இருந்தாலும் நாங்களும் எழுதுரோம்ன்னு காட்ட வேணாமா? 😜).... அப்பறம்... வாழ்த்து பாடல்... அனைத்தையும் ஆற அமர போட்டுவிட்டு பக்கத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீயை நோக்கி நட்பு என்ன செய்யுது... என பார்க்கும் ஆர்வத்தில் திரும்ப... மிஸ் ஃபினிஷ்.... என எழுந்து நின்றாள் அவள்... , "ஆத்தாடி.. என்னதிது... படிக்காம எப்டி எழுந்துனா.... தமிழ் பூக்குள்ள கவித புக்க வச்சு தானே படிச்சா", என ஹரிணி வாயை பிளந்தபடி பார்க்க.. டெஸ்ட் நோட்டை மிஸ்ஸிடம் கொடுக்கும் கேப்பில்.... டெஸ்க் டிராயரில், இரண்டு சென்டி மீட்டர் அளவே கொண்ட ஒரு துண்டு தாளை யாரும் அறியாமல் ஹரிணி நோக்கி நகர்த்தி வைத்தால் ஸ்ரீ....

"என்னாது இது......", என ஹரினியும் கமுக்கமா அதை எடுத்து பார்க்க... எட்டு அடிகள் கொண்ட வாழ்த்து பாடல் மினி ஜெராக்ஸாக அதில் எழுதப்பட்டிருந்தது... , "இதுக்கு தா நட்பு வெனும்கிறது... என்றவாறே எழுதி முடித்தால்....

இங்கு சபி, "எப்போதோ படித்ததில் பாதி பாதி நினைவில் இருக்க... மீதி பாதிக்கு தனது சொந்த கற்பனையை உதவிக்கு அழைத்து ரைமிங்காக வரும் வார்த்தைகளால் எட்டு வரியை ந நிரப்பி விட்டாள்... மறுபுறம் தாரா... உருப்படியாக தெரிந்த ஐந்து வரியை எழுதி விட்டு.. மிச்ச மூனு வரியை அப்படியே விழுங்கி விட்டு... பாடல் எழுதியவர் பெயர் போட்டு அழகாக மிஸ்ஸிடம் ஒப்படைத்து விட்டாள்...

இதற்கிடையில் ஹரினி இடம் இருந்த அந்த மினி ஜெராக்ஸ் பாதிக்கும் மேலானவர்களிடம் தாவி இருக்க.... பாதி பேர் டெஸ்ட் முடித்து கொடுத்தாகி விட்டாது... இன்னும் ஐந்தாறு பேர் எழுதி கொண்டிருக்க ..... பெல் அடித்தது.... அது அடித்த வேகத்திலேயே.... டெஸ்ட் முடிந்ததோ முடியவில்லையோ இருந்த ஐந்தாறு பேரும் நோட்டை மூடி வைத்து விட்டார்கள்....

மிஸ் வெளியேறிய அடுத்த நொடி சிட்டா பறந்து விட்டாரகள்....

*********

இங்கு வெளியே... தாத்தா கடையில்... தீரா அர்ஜுன், பள்ளி முடிந்து பத்து நிமிடம் ஆகியும் ரக்ஷவ் மயூரி வரவில்லையே என மீண்டும் உள்ளே செல்ல... சுற்றி முற்றி பார்த்த அர்ஜுன்... அங்கே நின்றிருந்த நபரை கண்டு "ஆத்தாடி போலீஸ் பூதம்....", என எகிறி குதித்து தீராவை முன்னுக்கு இழுத்து அவளுக்கு பின்னே மறைந்து கொண்டான்...

இவன் செயலால் குழம்பியவள், "யார சொள்ளுறான்??", என தலையில் அடித்து கொண்டு சுற்றிலும் நோட்டமிட... அங்கே யூனிபார்மில் ஒரு காவல் அதிகாரி ஸ்டாப் ரூம் வாசலில் நின்றிருந்தார்... அவரின் கையில் ஒரு காகிதமும் இருந்தது... ரக்ஷவ் மற்றும் மயூரியும் அங்கு தான் இருந்தார்கள்... முக்கியமாக கீர்தியும் அங்கு தான் இருந்தாள்...

அதை கண்டு சற்று குழம்பிய தீரா...., " டேய்... யாரு டா அந்த போலீஸ்... உனக்கு தெரியுமா??... எதுக்கு பம்முற.....", என்றவாறே அர்ஜுனை பிடித்து இழுக்க..., திருதிருவென முழித்தவன்....,"அவன் தா கீர்த்து வோட அண்ணன்.... விக்ரம்...." என்றான் சிறு கலவரத்துடன்....

அதே நேரம் மயூரி இவர்கள் இருவரையும் பார்த்து விட... இவர்களை நோக்கி கை நீட்டி எதோ கூறியாதில் அங்கிருந்த அனைவரின் பார்வையுடன் விக்ரமின் பார்வையும் இங்கு பதிந்தது...... அடுத்த நொடி இவர்களை நோக்கி விறைப்பான தோரணையில் நடக்க தொடங்கினான் விக்ரம்.

😜😈GALAATTAS ON THE WAY 😈🤪


Rate this content
Log in

Similar tamil story from Drama