Arivazhagan Subbarayan

Drama Romance Classics

4.2  

Arivazhagan Subbarayan

Drama Romance Classics

அக்கரை

அக்கரை

2 mins
174



தீப்தி இருபத்து மூன்று வயது அழகுச்சிலை. வட்ட முகம். கண்களில் காந்தம். எந்த இரும்பு இதயத்தையும் இழுக்கும் பவர்ஃபுல் காந்தம். வெண் கழுத்து. சரியான வளைவுகளுள்ள தேகம். மெத்தென்ற கட்டிலின் மீது படுத்து ஒரு ஆங்கில ரொமான்ஸ் நாவல் வாசித்துக் கொண்டிருந்தது. நாவலின் இறுதிப்பக்கத்தைப் புரட்டி,'ம்ம்ம்.....இப்படியெல்லாம் கதைகளில் தான் நடக்கும்' என்று பெருமூச்சு விட்டது. 


வெளியே நல்ல மழை. சன்னல் கண்ணாடியில் வழியும் தண்ணீரையே சிறிது நேரம் வேடிக்கை பார்த்துப் போரடித்ததால், கிச்சன் சென்று டீ போடலாமா என்று யோசித்தாள்.


மாலை வேளையிலும் மழைக்காலமாதலால் வெளியே இருட்டத் துவங்கியிருந்தது. ஏதோ ஒரு பைக் சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை, 'ச்ளக்' என்று இறைத்துவிட்டு விரையும் சத்தம் கேட்டது. 


இதேபோல் ஒரு மழைநாளில் தான் வினோத்தைச் சந்தித்தாள். வினோத் பைக்கில் போகும் போது தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்திலெல்லாம் மெதுவாக ஓட்டுவான். பாதசாரிகள் யாரையும் அலறவிட மாட்டான். வினோத்துடைய அந்த குணம்தான் தீப்தியை அவனிடத்தில் விழ வைத்தது. 


இருவரும் ஒரு வருடமாக உலக மகா காதலிக்கிறார்கள். போன மாதம், வினோத் அமெரிக்கா சென்று விட்டான். ஏர்போர்ட்டில் "இன்னும் ஒரு வருடம் பொறு என் தெய்வீகக் காதலியே! வந்தவுடன் திருமணக்கலாம்", என்று இவள் கன்னத்தில் அவன் கொடுத்த முத்தத்தின் ஈரம் மழைக்காலமாதலால் இன்னும் காயவில்லை!


இந்த மழைக்காலக் குளிரில் வினோத் அருகில் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்? சே! அதெல்லாம் கதைகளில் தான் நடக்கும். இதோ இப்போது அவள் படித்த நாவலில் கூட அப்படித்தான் நடந்தது. நினைத்தவுடனேயே காதலன் வந்து கதவைத் தட்டுவான். நிஜ வாழ்க்கையில் அப்படியா?


யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. வினோத்தாக இருக்குமோ? வினோத் தான். 'என் இதயம் ஏன் இப்படித் துடிக்கிறு கிறக்கிறது? யாராவது பிடித்து நிறுத்துங்களேன்' என நினைத்து,"வினோத், நீயா? வாட் எ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ்!", என ஆச்சரியப்பதற்குள், பக்கத்தில் கழுத்தில் புது மாங்கல்ய மெருகுடன் ஒரு அழகான பெண் நிற்பதைப் பார்த்து முகம் மாறினாள்.


"சாரி தீப்தி. இது புவணா! வெலிங்டன் ரிசார்ட்டோட ஓனர் பெண். எனக்குத் தெரியாமலே என்னை நான்கு வருடங்களாகக் காதலிக்கிறாளாம். என்னிடம் சொல்லாமல் தன் தந்தையிடம் சொல்லி என் வீட்டில் சம்மதம் வாங்கி விட்டார்கள். நானும் சரி சொல்லி விட்டேன்!"


அதிர்ச்சியில் சிறிது நேரம் நிலை குலைந்து போயிருந்த தீப்தி, பின் சுதாரித்துக் கொண்டு ஒரு ஏளனப் புன்னகையுடன்,"நீ எப்பொழுதிருந்து புவணாவைக் காதலிக்கிறாய் வினோத்?"

  "என்னைப் பொறுத்தவரை இது அரேஞ்ட் மேரேஜ் இல்லியா? நான் காதலிக்க ஆரம்பிப்பதற்குள் திருமணம் நடந்து விட்டது"

  "ஓ...நீ அப்ப புவணா அப்பாவோட ரிசார்ட்டதான் காதலிச்சிருக்கே! நல்ல வேளை நான் தப்பிச்சேன்!"

   "வாழ்க்கைக்கு வசதி தேவைதானே தீப்தி! உனக்கும் ஒரு நல்ல வசதியான வாழ்க்கை கிடைக்கும்!"

   "அப்ப நான் சொன்னது சரிங்கறே! அப்படித்தானே!"

  மௌனமாகத் தலை கவிழ்ந்தான் வினோத். 

  "ஓ.கே. வினோத் அன்ட் புவணா. ஹேப்பி மேரீட் லைஃப் டூ போத் ஆஃப் யூ!", என்று சொல்லவும், உள்ளேயிருந்து நடுத்தர வயதில் கோட் சூட் அணிந்து டிப்டாப்பாக,"யாரும்மா?", என்றபடியே ஒரு நபர் வெளியே வந்தார். 

  அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வினோத்,"சார், நீங்க மும்பையில் உள்ள யுனிவர்ஸல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன ஒனர், மிஸ்டர். கங்காதரன் தானே!?"

  "யெஸ். என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?"

  "என்ன சார் மூவாயிரம் கோடி மதிப்புள்ள கம்பெனிக்குச் சொந்தக்காரர். உங்களத் தெரியாமலா? உங்க கம்பெனிக்கு ஒரு தடவை இன்டர்வியூக்கு வந்திருக்கேன்"

  "வேலை கிடைக்கலியா?"

  "கிடைச்சது சார். ஆனா சம்பளம் இன்னொரு கம்பெனியில அதிகமா கிடைச்சதனால அங்க ஜாய்ன் பண்ணிட்டேன். நீங்க இங்க எப்படி சார்?"

  "வெரி சிம்பிள். தீப்தி என்னோட ஒரே மகள்! அதான்!"

  "தீப்தி, இதை நீ முன்பே என்னிடம் சொல்லியிருக்கலாம்!", ஏமாற்றத்துடன் சொன்ன

வினோதின் கண்களில் ரிசார்ட் இப்போது சின்னதாயிருந்தது. 


புவணாவின் பார்வையில் ஒரு எரிச்சல் வந்து உட்கார்ந்ததை வினோத் உணர வில்லை. 



   


Rate this content
Log in

Similar tamil story from Drama