Shakthi Shri K B

Children Stories Drama Classics

4  

Shakthi Shri K B

Children Stories Drama Classics

அந்த நிமிடம்

அந்த நிமிடம்

1 min
668


பூமிக்காக்குக் வயது பத்து, பெற்றோர்யுடன் சென்னை நகரத்தில் வசித்து வந்தாள்.

அவளுக்கு பூக்கள் என்றால் மிகவும் பிரியம். அவள் வீட்டில் அவள் அம்மா சின்ன சின்ன பூ செடிகளை வளர்த்து வந்தார். 

அதில் மலரும் மலர்களை பூமிக்கா தினமும் சூட்டிக்கோல்வது வழக்கம்.

இப்படி இருந்த நிலையில், ஒரு நாள் செடிகளில் பூ பூக்கவில்லை. அவளின் மனம் வாடியது.

அவளின் அம்மா , " பூமி, செல்லமே, கவளை படாதே. நிச்சயமாக பூக்கள் இன்னும் சில தினங்களில் மலரும்" என்றார். பூமிக்காவுக்கு, மலர்கள் பற்றிய எண்ணம் நிங்கவே இல்லை. 

நாட்கள் ஓடின, இன்னும் ஒரு பூ கூட பூக்கவில்லை.

அன்று, ஞாயிற்றிக்கிழமை. அவளுக்கு பள்ளி விடுமுறை. பூமிக்கா காலை விடிந்த பின், அவள் அம்மாவிடம் சென்று காலை வணக்கம் கூறினாள். பின்பு எப்போழுது போல தண்ணீர் கூடை எடுத்து வீட்டின் தோடத்திற்க்கு சென்றாள். செடிகளுக்கு விடுமுறை தினங்களில் நீர் பாய்ச்சுவது அவளின் வழக்கம். அன்றும் அதை செய்ய சென்ற பூமிக்காவுக்கு அன்று ஒரு அதிர்ச்சி. 

"அம்மா,அம்மா, இங்கே வாங்க," என கூக்குரல் எழுப்பினாள். அவள் அம்மா விரைந்து வந்து பார்த்தாள். பூமிக்காவின் முகத்தில் இருந்த அந்த புன்னகை அந்த நிமிடத்தில் அவள் அம்மாவுக்கு அனைத்தையும் புரிய வைத்துவிட்டது.

அந்த ஒரு புன்னகைக்காகவே அத்தனை செடிகளும் பூத்தது போல அந்த நிகழ்வு பூமிக்காவுக்கு அளவில்லா மகிழ்ச்சியை குடுத்துட்டு அன்றைய தினம்.


Rate this content
Log in