Shakthi Shri K B

Children Stories Drama Classics

5  

Shakthi Shri K B

Children Stories Drama Classics

நினைவில் ஒரு திருவிழா

நினைவில் ஒரு திருவிழா

2 mins
471


ஒவ்வொரு வருடமும் நாங்கள் குடும்பத்துடன் எங்கள் ஊர் திருவிழாவிற்கு செல்வது வழக்கம்.


எங்கள் அம்மா சீதா எப்போதும் எங்கள் நால்வரையும் தயார் செய்து எங்கள் தந்தையின் வருகைக்கு காத்திருப்பார். அப்பா வந்தவுடனே நாங்கள் திருவிழா காண எங்கள் ஊர் இரயிலை பிடிக்க இரயில் நிலையம் செல்ல வேண்டும்.


இந்த முறை பருவ நிலை மாற்றம் காரணமாக மே மாதத்தில் ஒரே கன மழை.

அம்மா வந்து," மீரா, தொலைக்காட்சியில் என்ன செய்தி என பார் மகளே." என்று என்னிடம் கூறினார்.


அதிக மழை எ‌ன்பதா‌ல் இன்று சாலை முழுவதும் நீர் நிரம்பி உள்ளது. மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்ற வானிலை எச்சரிக்கை. 

இதை கேட்ட அம்மாவிற்கு ஒரே பயம். "அட நாம் இப்போ எப்படி திருவிழாவிற்கு செல்வது என எண்ணத் தொடங்கிநாள்.

நானும் என் அக்கா தீபா எங்கள் தம்பிகள் குமார் மற்றும் கதிர் ஒன்று கூடி சென்ற வருடம் நடந்த திருவிழா பற்றி எண்ண தொடங்கிநோம்.


"சென்ற வருடம் என் வாழ்வின் மிக முக்கியமான வருடம். ஊர் திருவிழாவில் நானும் என் சிறு வயது நண்பர்களும் நடன போட்டியில் பங்கு பெற்ரொம். போட்டியில் வெற்றியும் அடைந்தோம். அந்த அழகிய நினைவு என்னை மகிழ்ச்சியில் திகழ வைகிறது", என்றால் அக்கா தீபா.


தம்பி குமாரும் கதிர் இருவரும் அவர்களின் திருவிழா நினைவுகளை கூறினர். "அனைத்து உறவினர்களுடன் அன்பு பாராட்டி பேசியது முதல் அனைவரு‌ம் ஒன்று கூடி கோவிலில் பொங்கல் வைத்து கடவுளை வணங்கி உணவை ஒன்ற கூடி உண்டது", போன்ற பல நினைவுகளை கூறினர்.

 அவர்களுடன் நானும் இவை அனைத்து நிகழ்வுகளும் எண்ணி மனம் மகிழ்ந்தேன்.


எங்கள் அப்பா அலுவலகம் பணி முடிந்து வீடு திரும்பினர். அம்மாவும் அப்பாவும் ஒன்று கூடி ஏதோ பேசிக்கொண்டனர்.சற்று நேரம் சென்ற பின் அப்பா வந்து எங்களிடம்," பிள்ளைகளே, நாம் இந்த முறை ஊர் திருவிழாவை காண செல்ல முடியாது. அடுத்த வருடம் நிச்சயமாக செல்லலாம்" என்றார்.

அதை கேட்ட நாங்கள் நால்வரும் மனம் வருந்திநோம்.


நிச்சயமாக அடுத்த முறை திருவிழா செல்வொம் என் எண்ணி எங்கள் வேலைகளை செய்ய தொடங்கிநோம். அடுத்த முறை செல்லும் வரை கடந்த கால நினைவுகளை எண்ணி வாழ முடியும் என்ற நம்பிக்கை மனதில் தோன்ற இருந்தோம்.


நாட்கள் பல நகர்ந்தன, அடுத்த வருடம் வந்தது மக்களின் முயற்சியில் பாருவ நிலை மாற்றம் மாறியது. நாங்கள் ஊர் செல்ல வழி பிறந்தது. இரயில் எரி மகிழ்ச்சியாய் பயணிக்க தொடங்கிநோம்.


எங்கள் ஊர் திருவிழா என்றால் ஒரு வித உற்சாகமும் மகிழ்ச்சியும் தோன்றும் மனதில். என்றும் ஒருவர் மறக்க முடியாத அனுபவம் சிறு வயதில் அவர்கள் சென்ற அவர்களின் ஊர் திருவிழா.  


குடும்பமாக நாங்கள் கலந்துக் கொள்ளும் ஒரு விசேஷம் ஊர் திருவிழா. எங்கள் அனைவரின் மன‌தி‌ல் நீங்கமல் இருப்பதும் இந்த ஊர் திருவிழா தான். எங்கள் ஊர் சிறியது என்றலும் அதில் கலந்துக்கொள்வது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.

 


Rate this content
Log in