Madhu Vanthi

Drama Romance Classics

4  

Madhu Vanthi

Drama Romance Classics

சேட்டை. NO :5

சேட்டை. NO :5

8 mins
203


என்றும் போல் வீட்டிலிருந்தும்... அனைவரின் பார்வையில் இருந்தும் வேகவேகமாக தப்பிவந்த ஹர்ஷன் கல்லூரிப் பேருந்து நிற்கும் இடத்தில் வந்து நின்றான்... அது வருவதற்கு என்னவோ இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது ஆனால் இவ்வளவு வேகமாக வந்ததன் காரணம் இன்னும் ஐந்தே நிமிடத்தில் மாணவ மாணவியர் கூட்டம் இவ்விடம் வர தொடங்கிதுவிடும் என்பது தான்....

இத்தனை நாட்களும் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை... ஆனால் இன்று அப்படி இல்லையே... இந்த ஐந்து நிமிடமாவது மித்ராவுடன் தனிமையில் இருக்க நேரம் கிடைத்து விடாதா என்று தான் இந்த வேகம் ..... காரணம்... இன்று அவன் வாழ்வின் அதி முக்கியமான நாள் அல்லவா??...

அந்த தனிமையை வீணடிக்க விரும்பாதவன், "மித்ரா.....", என மென்மையான குரலில் அவளை அழைக்க...., மையிட்ட மான்விழிகளால் தனக்கு வலதுபுறம் நின்றிருந்தவனை மெல்ல திரும்பி நோக்கினாள் அவள்.

என்றும் போல் இன்றும் அவள் கடைக்கண் பார்வையில் தொலைந்து தான் போனான் அவன்.

"எதுக்கு கூப்படீங்க ஹர்ஷா...", என அவனை போலவே மென்மையான குரலால் கேட்க... புன்னகையுடன் அவள் வலது கரத்தை பற்றியவன் ஒரு அழகிய வெள்ளி மோதிரம் ஒன்றை அனிவித்தான்.... அந்த பரிசின் காரணம் அறிந்து அவள் புன்னகையுடன் மோதிரத்தையே பார்த்திருக்க... "ஹாப்பி ஒன் மந்த் புரோபோசல் அனிவெர்சரி மித்ரா....", என கூறி அவள் கையுடன் தன் கரத்தை கோர்த்து நின்றான் அவன்.... 

"சேம் டூ யூ ஹர்ஷா....", என கூறி அவளின் தோள்பையில் இருந்து ஒரு வெள்ளி பிரேஸ்லெட் எடுத்து அவன் கையைப் பிடித்து அவனுக்கு தன்னுடைய முதல் பரிசை கொடுத்தாள் அவள்...

"ஹே.. மித்ரா.... எப்போ இத வாங்குன... நீ எங்கேயும் வெளிய போக மாட்டியே... போகவும் இல்லையே... எப்டி வாங்குன...??

நீங்க எப்டி வாங்குநீங்க ஹர்ஷா... இந்த ஒரு வாரமா வீட்டுக்கும் காலேஜுக்கும் தவர நீங்களும் எங்கேயுமே போகளையே... அதுக்கு முன்னாடியும் வெளிய எங்கேயும் போகலையே.. " மித்ரா அவனின் கேள்வியை அவனிடமே கேட்க...

"நா ஃப்ரெண்ட்ஸ்ட்ட சொல்லி வாங்குனே டா... அவனுங்க கடைல இருந்து போட்டோஸ் அனுப்புநாங்க... அதுல நா சொன்னத நேத்து வாங்கிட்டு வந்து குடுத்துடாங்க....

ஹ்ம்ம்... அவ்ளோ தா... அதே தா நானும் பண்ணுனே...", என அவன் பதிலையே அவனுக்கு சாதாரணமாக கூறி அவள் புன்னகைக்க... சரியாக இரண்டு மாணவிகள் அவ்விடம் வந்து விட்டார்கள்... அவர்கள் இருவரும் மித்ராவின் பஸ் ஸ்டாப் தோழிகள்...

பி.காம் முதலாம் ஆண்டு பயிலும் ஆர்த்தி மற்றும் சக்தி...

அவர்கள் வரவும் மித்ராவிடம் சிறு தலை அசைப்புடன் புன்னகை வீசிவிட்டு ஆண்கள் நிற்கும் மரத்தடியில் சென்று நின்று கொண்டான் ஹர்ஷன்...

மித்ரா அருகில் வந்த இருவரும், "என்னமா.... நீங்க போர போக்க பாத்தா சீக்கிரமே கல்யாணத்துக்கு ரெடி ஆகிருவீங்க போலவே", என ஆர்த்தி கண்ணடிக்க... "ரெடியா... ரெடியா.. ரெடி ரெடியாஆஆஆ..." என சக்தி பாட்டே படித்து விட..., "அடச்சே... சும்மா கேடங்க லூசுகளா... அதெல்லாம் இப்போ கெடையாது... ", என மித்ரா இருவரையும் முறைத்தாள்..

"எப்பவா இருந்தாலும் சரி... எங்களையும் கூப்புட்டு பிரியாணி மட்டும் போட்டுறு... அது போதும்...", என கூறி சக்தி சிரிக்க..., "பிரியாணியா.... ஆமா நீங்க ரெண்டு பேரும் யாரு??... உங்கள எங்கேயோ பாத்துருக்கேன்... ஆனா எங்கன்னு தா நியாபகம் வர மாட்டுது.....", என பதிலுக்கு தீவிரமாக சிந்தித்தாள் மித்ரா..

"அடி பாவி... அட்லீஸ்ட் சாம்பார் சோறு??...", என சக்தி அவளை பாவமாக பார்க்க...., "ம்ம்ம்ம்ம்ம்.... நா கல்யாணத்துக்கு கூப்பிடுவேனான்னே தெரியல... இதுல விருந்துக்கு ஆச படுறியே மா....", என மித்ரா உச்சுகொட்ட.... மற்ற இருவரும் அவளை முறைக்க தொடங்கினார்கள்.

இவர்களின் உரையாடல் சற்று தள்ளி நின்றாலும் ஹார்ஷனுக்கு தெளிவாகவே கேட்க... பாவம்.... பைத்தியம் போல் தனியாக நின்று சிரித்த கொண்டிருந்தான் அவன்....

             *******

12th Bio - maths...

முதல் பாடவேலை நடக்கையில் மாணிக்கம் ஸார் அழைப்பதாக கூறி ஒரு மாணவன் அர்ஜுனை அழைத்து சென்றிருக்க... இரண்டாவது பாட வேலை முடியும் நிலையில் வகுப்பின் உள்ளே நுழைந்தான் அவன்....

அவன் வரும்போதே சலித்து கொண்டு வர... அதை கவனித்து இருந்தாள் தீரா... வந்தவன் நேராக சென்று நவீனின் அருகில் அமர்ந்தான்..

"என்னாச்சு டா... இவளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த....?", என நவீன் விசாரித்ததற்கு..., "ஆல் இஸ் காட் ரைட் இன் மை ஹெட் இஸ் ஹாப்பெனிங்.....", என வாய்க்கு வந்ததை உலர... "டேய்... டேய்... டேய்.. உன்கிட்ட கேட்டது தப்பு தான்டா... பின்னாடியே அந்த ஜூனியர் பொண்ணு வந்தாளேன்னு தா... ஸார் கிட்ட மாட்டிகிட்டீங்களோன்னு நெனச்சு கேட்டேன்...... ", என நவீன் கூற... அவன் பார்வையிலேயே தன்னையும் அவளையும் சேர்த்து இவன் ஏதோ நினைக்கிறான் என்பது அர்ஜுன்னுக்கு புறிபட்டது..

"அவ என் கூட வந்தா நீ ஏன் இப்டி கேக்குற...", என்பது போல் அர்ஜுன் ஒரு லுக்கு விட.., "சரி சரி... அப்டி பாக்காத.. சும்மா தா கேட்டேன்.... இனி நா வாயே திறக்கல டா சாமி...", என அவனிடம் சரண்டர் ஆகினான் நவீன்.

சரியாக ஓரிரு நிமிடத்தில் ப்ரேக் பெல் அடித்தது.... நவீன் கேண்டீனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றான்... அர்ஜுன் வழக்கமாக ரக்ஷவ் மயூவை பார்க்க செல்லும் நேரம் என்பதால் அவனுடன் செல்ல மாட்டான்... இது அவனுக்கே தெரியும் என்பதால் மற்ற நட்புகளை இழுத்து கொண்டு ஸ்நாக்ஸ் வாங்க ஓடி விட்டான் நவீன்.... அவன் செல்லவும் தீராவை அழைத்து கொண்டு வெளியேறினான் அர்ஜுன்.... அவளோ அவளின் தோழி லாவண்யாவை இழுத்து கொண்டு அர்ஜுனுக்கு பின்னால் குதித்து குதித்து செல்ல.... பார்ப்பவர்களுக்கு கைகோர்த்து செல்லும் மூவரும் ட்ரெயின் விளையாட்டடை வேறு விதமாக விளையாடுவது போல தான் தெரிந்தது....

வெளியே வந்த அர்ஜுன் நேராக பக்கத்து வகுப்பை எட்டி பாரத்த நொடி.. தீரா காண்டாகிவிட்டாள், "ஹ்ம்ம்.... கைய விடு டா..... போ... போடா... போய் அவ பக்கத்துலயே ஒக்காந்துக்கோ.... எப்ப பாத்தாலும் அவளையே தா பாக்குறது.... ஹ்ம்ம்....", என முகத்தை திருப்பி கொண்டு முன்னே நடக்க... கீர்த்தியின் வகுப்பில் இன்னும் கணக்கு பாடம் நடந்து கொண்டிருந்ததால் அர்ஜுன் தீராவின் பின்னேயே சிரித்து கொண்டு சென்றான்...

"ஓய்... தீருமா.... நில்லு டி.... கீர்த்து பாவம்.... இன்னைக்கு காலைல ரொம்ப ஃபீல் பண்ணுனா... அதா இப்போ எப்டி இருக்கான்னு பாத்தேன்.... இதுல அந்த தொப்ப ஸார் வேர காலங்காத்தால மண்ட காய விட்டுடாரு.... அதனால தா அவள பாத்தேன்... நெஜமா...", என கத்திகொண்டே அவள் பின் நடக்க...., "அவ ஃபீல் பன்னதால நீ கரஞ்சுட்டியா டா.. அஜி....", என இழுவையாக கேட்டாள் லாவண்யா..

"ஓய் மூஞ்சூறு குட்டி.... சும்மா கீச்சு கீச்சுண்ணு கத்தாத... அப்ரம்...... ... என்ன அஜின்னும் கூப்டாத....", என இருவரும் சண்டை இடுவதற்கும் ரக்ஷவ் மயூ நிற்க்கும் இடத்திற்க்கு வருவதற்கும் சரியாக இருந்தது...

"என்ன தா இருந்தாலும் உனக்கு அஜ்ஜுவ விட அஜி நல்லா செட் ஆகுது டா... அஜி அஜி அஜி...", என மீண்டும் லாவண்யா அவனை வம்புக்கு இழுக்க... "எவ்ளோ அழகான பேர இவனுக்கு செட்டாகுதுண்ணு சொல்லுறியே.... உனக்கு ரசனையே இல்ல லாவா....", என நொந்து கொள்வது போல் பாவனை செய்தால் தீரா..

இவர்கள் செய்யும் சேட்டையை பார்த்தது வழக்கம் போல நம் ரக்ஷவ் சிரிக்க... "ஒருத்தர ஒருத்தர் வம்பு பண்ணாம் இருந்துறாதீங்க.... இன்னும் சின்ன புள்ள மாதிரி.... ச்சை...", என மயூ தான் தலையில் அடித்து கொண்டாள்.

இல்லையா பின்ன... வீ ஆர் அல்வேஸ் குட்டி பப்பாஸ் தா", என கூறி லாவண்யா வாயில் கட்டை விரலை வைத்து குழந்தைபோல் செய்து காட்ட... அவளை கண்டு முறைத்தாள் மயூ...

"அது சரி... கீர்த்திகா காலைல ஃபீல் பண்ணுனான்னு சொன்ன... என்னாச்சு அவளுக்கு....", என அக்கரையாக விசாரித்தது வேறு யாரும் அல்ல... அவளை எப்பொழுதும் முறைத்து கொண்டே திரியும் நம் தீரா தான்...

ஒரு நொடி அனைவரும் அவளை நோக்கி திரும்பி, "நீயாமா கேட்டது", என்ற ரெஞ்சிர்க்கு ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்க.., அவள் அனைவரையும் முறைத்த முறைப்பில் காலையில் ஹொட்டலில் வைத்து நடந்ததை அர்ஜூன் அனைவருக்கும் கூற தொடங்கினான்.

அவன் கூறி முடிக்க... இப்பொழுது ஃபீலிங்ஸ் மழை பொழிவது பெண்கள் மூவரின் முறையானது...."பாவம் டா அந்த பொண்ணு.... எவ்ளோ கஷ்ட்ட பட்டுருப்பால...", என மயூ பரிதாபம் கொள்ள...., "பேசாம நம்ம வீட்டுக்கு ஒரு நாள் கூட்டிட்டு போகலாமா... இல்ல இல்ல அவள நீ இனி டெய்லி காலைல நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துரு அஜ்ஜு... எதுக்கு ஹோட்டல் போய்ட்டு... அங்க போற டைமுக்கு நீ வீட்டுக்கு வா...", என தீரா ஸ்ட்ரிக்ட் ஆடார் போட்டாள்.

அதை கண்டு, "அட... இப்போ உங்க போசஷன் எங்க மா போச்சு...", என நக்களடித்தான் ரக்ஷவ்.

"ஹ்ம்ம்... அதெல்லாம் எங்கேயும் போகள... அங்கேயே தா இருக்கு.... அவ என் அஜ்ஜு கூட பேசுனா இப்போவே வெளியவந்துரும்...", என அவனுக்கு பதில் கூறிய தீரா கைகட்டி முகத்தை திருப்பி கொண்டு நின்றாள்.

"ஐயோ ஐயோ ஐயோ... என் செல்ல சிஸ்டர்க்கு என் மேல எம்பூட்டு பாசம்... பாஹ்.... என் வருங்கால பொண்டாட்டிக்கு கூட என்ன விட்டு குடுக்க மாட்டா போலவே...", என அவளை இழுத்து அருகில் நிற்க வைக்க..., "ஹான்... அதெல்லாம் ஒன்னும் இல்ல... அன்னிக்குனா நா உன்ன கண்டுக்க மாட்டேன்... ஆனா இவளுக்கு விட்டு குடுக்க முடியாது... சரி அத விடு... நம்ம வீட்டுக்கு அவள கூட்டிட்டு வர முடியுமா முடியாதா?

நீண்ட பெருமூச்சு விட்டவன், "நா டான்ஸ் கிளாஸ் போன மொத நாள் அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் நியாபகம் இருக்கா??... அதுக்கே அவ அண்ணன் கத்திருக்கான் போல... அதா அவள வீட்டுக்கு கூட்டிட்டு வர்ரதில்ல... இல்லன்னா எனக்கு கூட்டிட்டு வர தெரியாது பாரு..."

"ஏன்... எதுக்காக அந்த லூசு பக்கி கத்திருக்கு....?", மயூ சற்று எரிச்சலாக கேட்க..., "இல்ல மயூ... நா காரணம் கேட்டதுக்கு அவ இன்னுமும் பதில் சொல்லவே இல்ல..... இவ ஏற்கனவே அவளோட ஃபேமிலியால ரொம்பா ஹர்ட் ஆகிருக்கா... மறுபடியும் அப்டி எதாவது ஆகிற கூடாதுன்னு இருக்கலாம்.... "

நீ போய் அவ அண்ணன் கிட்ட பேச வேண்டியது தானே டா... ", என தீரா கேட்டதற்கு எதோ பேயிடம் ஹாய் சொல்ல கூறியது போல் ஒரு ரியாக்ஷன் கொடுத்தான் அர்ஜூன்.

"ஆத்தாடி.... அவன்கிட்டயா.... ஈவ்னிங் அவள கூப்ட வருவான்... அவன் யாருன்னு வேன்னா காட்டுறேன்... அப்போ நீங்களே போய் பேசிக்கொங்க... என்ன விட்டுருங்க...", என இவன் பம்முவதிலேயே ஏதோ நடந்திருக்கிறது என அனைவரும் அவனை சந்தேக பார்வையில் பாரக்க... , "ஏ... அப்டிலாம் பாக்காதீங்க... அவன பாத்தாளே பயமா இருக்கும்.... நா இது வர அவன் கிட்ட பேசுனதே கெடையாது... வேன்னா சாயந்தரம் காட்டுறேன்... உண்மையா பொய்யான்னு நீங்களே பாத்துக்கோங்க....", என அனைவரையும் கோர்த்து விட்டான் அவன்...

"சரி டா... ஈவ்னிங் அவன நீ காட்ட மட்டும் செய்... நாங்க பாத்துகுரோம்...", என்று மயூ தில்லாக பதிலளிக்க...

"நீ பேசிரு.... அப்ப நா ஒத்துக்கிரென் நீ தைரியசாலி தான்னு...", என அவளுக்கு ஓபன் சேலஞ் விடுத்தான்.

"அது சரி.... நீ காலைல இருந்து அந்த தொப்ப ஸார் கிட்ட அப்டி என்ன கடல போட்டுட்டு இருந்த... ", என எப்பவோ கேட்க நினைத்ததை நினைவுகூர்ந்து இப்போது கேட்க.... , "அந்த கொடுமைய ஏன் கேக்குற... காலைல நானும் கீர்தியும் ஹோட்டல இருந்தத அவரு பாத்துக்காரு போல... அதா செம்ம என்கொய்ரி நடத்துநாரு...", என கூறி காலையில் ஸ்டாஃப் ரூமில் நடந்த கூத்தை கூற தொடங்க.. ப்ரேக் முடியும் பெல் அடித்தது....

"ஹே... நீ நடந்தத ஃபர்ஸ்ட் சொல்லு... அப்ரம் போகலாம் கிலாஸ்க்கு...", என அனைவரையும் பிடித்து நிறுத்தினாள் லாவண்யா.... கதை கேட்கும் ஆர்வத்தில் அனைவரும் அங்கேயேநிற்க... நடந்ததை கூற தொடங்கினான் அர்ஜுன்.

                          *********

"ஸ்டாப்ரூமில் அர்ஜுனும் கீர்த்தியும் கைகட்டி நிற்க... இருவரையும் உருத்து நோக்கி கொண்டிருந்தார் கீர்த்தியின் வகுப்பாசிரியர் மாணிக்க ராஜ்...

இப்போ இவருக்கு என்ன பிரச்சன... காலைல என அர்ஜுன் மைண்ட்வாய்ஸ் ஓட விட்ட அதே நேரத்தில், "இந்த பொண்ண உனக்கு தெரியுமா??..", என அவனை மேலும் கூர்ந்து நோக்கினார் அவர்...,

"ம்ம்ம்... தெரியும் ஸார்... 11th பயோ-மாக்ஸ்....", என அவன் பதிலளிக்க...., "காலைல ரெண்டு பேரும் எங்க இருந்தீங்க....??..", அவரின் அடுத்த கேள்வியில் பேந்த பேந்த முழிக்க தொடங்கினான் அர்ஜுன்.. ஆனால் கீர்த்தியோ, ஆல்ரெடி இந்த கேள்விகள் அவளுக்கு கேட்கபட்டிருந்ததால் கப்சிப்பென நின்றிருந்தாள்....

இப்போது மாணிக்கம் ஸாருக்கு இருவரின் பதிலும் ஒத்து போக வேண்டும்.. அவ்வளவு தான்...

தலையை சொரிந்த அர்ஜுன் ஒரு வேள நம்ம கூட பைக்கல இவ வந்தத பாத்துட்டாரோ.., என மைண்ட் வாய்ஸ் வாசித்துக்கொண்டே கீர்த்தி திரும்பி நோக்க..., "அங்க என்ன பார்வ... நா கேட்டதுக்கு பதில் சொல்லு... காலையில ரெண்டு பேரும் எங்க இருந்தீங்க....", என மீண்டும் அவனை பார்வையாலேயே மிரட்ட..., அவன் எதுவும் கூறாமலே இருந்ததால் இவரே பேச தொடங்கினார்..., "ஸ்கூல் ஆரம்பிச்சு ஒன் மந்த் தா ஆகுது... அதுகுல்ல பைக்ல போற அளவுக்கு குலோஸ் ஆகிடீங்களோ...???", என அவர் சிறிது முறைப்புடனேயே கேட்க... இப்பொழுது அவரின் சுற்றி வளைக்கும் கேள்விகளுக்கான காரணம் அர்ஜுனுக்கு புரிந்தது...

"இவரு ஹோட்டல்ல இருந்தத தா பாத்துறுப்பாரு.. என அவனே முடிவு செய்து...., "இல்ல ஸார்... மார்னிங் ஒன்னா டான்ஸ் கிளாஸ் போவோம்... அங்கேருந்து வீட்டுக்கு போக டைம் ஆகும்ன்னு பிரேக்பாஸ்ட்க்கு ஹோட்டல் போனோம்...", என பவ்யமாக அவன் பதிலளிக்க... கீர்த்தியும் அதே பதிலை அளித்திருந்ததால் அவர் சற்று அமைதியானார்.. ஆனால் இன்னும் பார்வையை மாற்றவில்லை...

சட்டென என்ன நினைத்தாரோ...., "கிவ் மீ யூவர் பேரன்ட்ஸ் நம்பர்...", என்ற நொடி காலையில நீங்கி இருந்த கீர்த்தியின் நினைவு மீண்டும் அவளை பிடித்து கொள்ள... கண்ணீர் மெல்ல மெல்ல அவள் பார்வையை மறைக்க தொடங்கியது...

அவள் கண்ணீருக்கு காரணத்தை தவறாக நினைத்து கொண்ட மாணிக்கம் ஸார்...., "ஹ்ம்ம்... தப்பு பன்ன தா பயபுடனும்... கண்ண கசக்குனாலாம் நா அப்டியே விட மாட்டேன்.. அப்பா நம்பர் சொல்லு...", என அவர் சற்று கராராக கூற....., கீர்த்தியின் கண்ணீர் தான் வேகமெடுத்தது...

அதை கண்ட அர்ஜுன், "ஸார்.......", என ஒரு வேகத்தில் கத்திவிட... இவனை நோக்கி அவர் திரும்பியதும்.... பணிந்த குரலில், "அவளுக்கு அண்ணன் மட்டும் தா ஸார் இருக்கான்... வேர யாரும் இல்ல...", என்றவுடன் தான் அவருக்கே உறுத்தலாக இருந்தது...

திரும்பி கீர்த்தியை பார்க்க... அவள் கண்ணீரை மறைக்க வேறு புறமாக திரும்பி கொண்டாள்... பின் அர்ஜுன் தந்தையின் நம்பர் வாங்கி அவன் டான்ஸ் கிளாஸ் போவதை உறுதி செய்து கொண்டவர்... உடன் ஒரு பெண் வருவதையும் அவன் வீட்டில் கூறி இருக்கிறான்... என்பதையும் உறுதி செய்து கொண்டார்...

அதன் பிறகு அர்ஜுனை வகுப்புக்கு செல்ல கூற... வெளியே வந்தவன் வகுப்புக்கு செல்லாமல் மாடி படியிலேயே கீர்த்திக்காக காத்திருந்தான்... அதனால் தான் அவன் வகுப்புக்கு வர தாமதம் ஆனது..

முதல் பாட வேலை முடிந்து இரண்டாவது பாடவேலை பாதி நடக்கையில் ஸ்டாப் ரூமில் இருந்து வெளியே வந்தாள் கீர்த்தி.... மாடியின் தொடக்கத்திலேயே நின்றிருந்தவன் இவளை பார்த்து விட... அவளும் இவனை நோக்கி தான் வந்தாள்.

"ஓய் கீர்த்து... இம்புட்டு நேரம் என்ன என்கொயர் பண்ணுனாரு அவரு...."

"ஷப்பா..... நாளு ஸார் செந்துட்டு அட்வைஸ் மேல அட்வைஸ்..... ஃபேமிலி பத்தி கேட்டாங்க... நானும் சொன்னே.... யாரும் இல்லன்னு ஃபீல் பண்ணதம்மா... ஸ்கூல் உனக்கு இன்னொரு ஃபேமிலி தா.... டீச்சர்ஸ் ஆர் செகண்ட் பேரன்ட்ஸ்.... அந்த அக்கறைல தா இப்பொ உங்க ரெண்டு பேரயும் கூப்புட்டு விசாரிச்சது.... நல்ல ப்ரெண்ட்டா இருங்க தப்பில்ல... ஆனா லிமிட் கிராஸ் பண்ணிர கூடாது... லைஃப் பத்தி டெசிஷன் எடுக்குற வயசு இது கிடையாது... அது இதுன்னு என் காத ஒரு வழி ஆக்கிடாங்க...", என கூறி அவள் சிரிக்க..... "ஹாஹா... அவங்க சொல்லுறதும் கரெக்ட் தா கீர்த்து.... இந்த மாறி வெளிய சுத்துறத நார்மல் அப்பா அம்மா பாத்த என்ன பண்ணுவாங்களோ இவங்களும் அதே தா பண்ணுறாங்க... ஸ்கூல் வந்துட்டா இவங்க தானே நம்ம பேரன்ட்ஸ்...", என கூறி சினேகமாக புன்னகைத்தான் அவன்.

                     ********

இதை அர்ஜூன் கூறி முடிக்க... யாரும் இல்லாத அந்த காரிடாரிள் ஒரு மிஸ் நடந்து வருவதை கண்டு விழுந்தடித்து அவரவர் வகுபுக்கு ஓடினார்கள்..

😜😈GALAATTAS ON THE WAY 😈🤪


Rate this content
Log in

Similar tamil story from Drama