Rajini Benjamin

Inspirational

3.5  

Rajini Benjamin

Inspirational

சிந்து தாய்

சிந்து தாய்

2 mins
287


இது ஒரு உண்மை கதை : பெரும்பாலும் .

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிந்து தாய் (அக்கா) என்ற பெண். இளம் வயதில் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்தார் .

நீண்ட காலமாகவே குழந்தை பிறக்கவில்லை அவர்களுக்கு .

சிந்து தாயின் கணவனும் அவர் பெற்றோரும் சிந்து தாயை வீட்டை விட்டு விரட்டி விட்டனர் .

சிந்துவின் தாயின் பிறந்த வீட்டில் ஏழ்மை காரணத்தால் அவரை ஏற்கவில்லை .

படிப்பறிவு இல்லாத சிந்து தாயின் நிலை மிகவும் கடினமானதாக மாறியது .

தெரு ஓரங்களில் தன் இருப்பிடமாக கொண்டார் அவர் .

அங்கிருந்த பிச்சை எடுப்பவர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்து , உணவும் தந்தனர் சிறிது காலம் இப்படி சென்றது சிந்து தாயின் வாழ்க்கை .

ஒரு முடிவுக்கு வந்தார் அவர். தான் ஏன் தன்னை போல் அனாதையாக இருப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க கூடாது என்ற யோசனை தோன்றியது .

அங்கு ஆதரவற்று திரிந்து பிச்சை எடுத்து கொண்டிருந்த அனாதை குழந்தைகளை தத்தெடுத்தார். தன்னால் முடிந்த அளவு குழந்தைகளுக்கு பராமரிப்பும் அளித்தார் .

இது போன்ற அனாதை குழந்தைகளை எங்கு பார்த்தாலும் தன்னிடம் கூட்டி வந்து அவர்களையும் கவனித்து கொண்டார் .

அதனால் மேலும் , மேலும் அனாதை குழந்தைகள் சேர்ந்தனர் சிந்து தாயிடம் .

இந்த செயலை பார்த்த சில கருணை உள்ளங்களின் உதவியால் குழந்தைகளை நன்கு கவனித்து கல்வி அறிவும் கிடைக்க வழி செய்தார். சிந்து தாய் அந்த குழந்தைகளை தன் ஈன்ற குழந்தைகளாகவே பாவித்தார் .

அதுவே தற்போது சிந்து தாய் அனாதை இல்லம் என்ற பெயரில் இயங்கி வருகிறது .

இன்றும் ஊடகங்களில் அவர் பேசும் போது என்னிடம் வளர்ந்த குழந்தைகள் இப்போது பல துறைகளில் நல்ல இடம் வகிப்பதாக கூறுகிறார் . மேலும்

ஒரு குழந்தை இல்லை என்று தவித்த எனக்கு இப்போது நூற்று கணக்கில் பிள்ளைகளின் அன்னையாக இருக்கிறேன் இந்த மகிழ்ச்சி கிடைக்க தான் எனக்கு குழந்தை இல்லை போலும் என்றும் கூறுகிறார் .

என்னிடம் வளர்ந்த ஒரு குழந்தை படித்து பட்டங்கள் வாங்கி Phd செய்வதாகவும், அதில் சிந்து தாயை பற்றி எழுதியிருப்பதாகவும் பெருமை பொங்க பேட்டி அளிக்கிறார் சிந்து தாய் .

தன் இயலாமையையும் வெற்றி பாதையாக மாற்றி கொண்ட சிந்து தாய் ஒரு உதாரண பெண் மணி அல்லவா!.

✍️

ரஜினி பிரியா.பென்


Rate this content
Log in

Similar tamil story from Inspirational