Saravanan P

Abstract Romance Tragedy

4  

Saravanan P

Abstract Romance Tragedy

சந்தோஷ் காதல் ஷாரோன்

சந்தோஷ் காதல் ஷாரோன்

2 mins
363


ஷாரோன் அன்று கல்லூரிக்கு சற்று கூடுதல் சந்தோசத்துடன் வந்தாள்.

ஏனென்றால் சந்தோஷ் அவளிடம் காதலை சொல்லி அவள் ஏற்றுக்கொண்டு கல்லூரிக்கு வரும் முதல் நாள்.

ஏனென்றால் வெள்ளிக்கிழமை மாலை சந்தோஷ் சொல்ல அவள் ஏதும் சொல்லாமல் வீட்டிற்கு சென்று இரவு மொபையில் ஓகே என அவள் வாய்ஸ் நோட் அனுப்பினாள்.

ஒரு வாரம் இருவரும் ஒன்றாக காலேஜ் முழுக்க சேர்ந்து நடந்தனர்.லைப்ரரி,புட் கோர்ட்,மாலை நேர வெயிலில் காலேஜ் நடைபாதை மீது அவர்களை நண்பர்கள் சில சத்தமில்லாமல் கேலி செய்தும் வந்தனர்.

காதலில் பிரச்சினை வராமல் இருந்தால் அது செயற்கையானது,நம் அனைத்து உணர்ச்சிகளும் காதலிக்கும் நபரிடம் நம் நிச்சயம் வெளிப்படுத்துவோம்.

சந்தோஷ் சில நேரம் திட்டி விட்டு ஏன் அவ்வாறு பேசினோம் என யோசித்து அவளிடம் பேச தயங்கி நிற்பான்.

ஷாரோன் அவனிடம் வந்து நல்ல திட்டி கொண்டிருக்கும் போது சந்தோஷ் அவளிடம் சாரி மேடம் என முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்பான்.

இதே போல் ஷாரோன் சந்தோசிடம் சண்டையிட்டு விட்டு அவன் இப்பொழுது என்ன செய்வான் என யோசித்து கொண்டிருப்பாள்.

ஆனால் "பெரும் பிரச்சனைகளால் பிரிக்க முடியாத காதல்,சிறு பிரச்சனைகளை

சரி செய்யாததால் பிரிந்து விடுகிறது."

சந்தோஷ் ஷாரோனின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி கேட்டு கொண்டே இருப்பான் இது ஷாரோனுக்கு பிடிக்காதது.


அதே போல் ஷாரோன் சந்தோஷிடம் வெளியே போகலாம் என கேட்டு கொண்டே இருப்பாள்,வாலி பால் காலேஜ்ஜில் விளையாடும் சந்தோஷ் அந்த சோர்ந் நிலையில் கூட்டி கொண்டு போனால் நீ கிருஷ்ணன் மாதிரியெல்லாம் வெளிய கூட்டிட்டு போக மாட்டியா?,இதோ அவனை பாரு என மற்ற நபர்களை பற்றி சந்தோஷிடம் பேசுவாள்.

சந்தோஷ்க்கு மற்ற நபர்களுடன் தன்னை ஒப்பிட்டு பேசினால் பிடிக்காது அதோடு சேர்ந்து தான் வெளியே கூட்டி கொண்டு போனால அதை பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல் ஷாரோன் செய்வது அவன் மனதில் தோன்றி கொண்டே இருந்தது.

ஒரு நாள் இருவரும் இதை பற்றி பேசி கொண்டே அது சண்டையாக மாறி இருவரும் பேசி கொள்வதையே நிறுத்தினர்.

பேசாமல் இருந்ததால் அந்த சண்டை உண்டாக்கிய வெறுப்பு இருவரையும் பிரியும் நிலைக்கு கொண்டு வந்தது.

ஒரு தடவை நேரில் பேசியிருந்தால் தொடர்ந்திருக்கும் காதல் இருவரின் மனதில் இருந்த வெறுப்பால் முறிந்தது.

இருவரும் நேரில் சந்தித்து காதல் உறவு போதும் என முடிவு எடுத்து காலேஜ்ஜின் ஒன்றாக நடந்த நடைபாதையில் முன்னும் பின்னுமாக சென்றனர்.

ஒருவருக்கு இன்னொருவர் தன்னை விட்டு வாழ்க்கையில் விலகி செல்வதாக தோன்றியது ஆனால் இருவருக்கும் அவர் அவர் மனதுக்குள்.


Rate this content
Log in