Saravanan P

Abstract Drama Inspirational

5  

Saravanan P

Abstract Drama Inspirational

தவறான மனநிறைவு

தவறான மனநிறைவு

2 mins
7


பகலவன் சென்னையில் வேலைக்கு சேர்ந்த பின் அங்கு தங்க ஒரு பி.ஜி விடுதியில் சேர்ந்தான்.

வேலைக்கு சென்று முதல் மாத சம்பளத்தில் தான் வாங்க வேண்டிய பொருட்கள் என தான் சிறு வயதில் இருந்து வாங்க வேண்டும் என ஆசைப்பட்ட விளையாட்டு பொம்மைகள் மற்றும் கதை புத்தகங்கள்,காலணிகள் என பட்டியலிட்டான்.

பகலவன் வேலைக்கு சென்று வரும் வழியில் பண உதவி கேட்டு நிற்கும் ஆட்கள்,சிறு வண்டியில் கடை போட்டு உணவு விற்பவர்கள்,சிறு கடை வைத்திருப்பவர்கள் என அனைவரையும் பார்த்து கொண்டே செல்வான்.

பகலவன் மனதில் இவர்கள் எல்லாம் எப்படி பணம் சம்பாதித்து தங்கள் தேவையை தாங்களே பார்த்து கொள்கிறார்கள்,நாம் இவ்வளவு சம்பாதித்தும் பணத்தை செலவழித்தல் மற்றும் சேமிப்பதில் மிகவும் சிரமத்துடன் இருப்பதாக நினைத்தான்.

பகலவன் அப்பொழுது அவனுடைய சிறு வயதில் அவன் வீட்டில் நடந்த சம்பவங்கள் அவன் நினைவிற்கு வந்தன.

“பகலவன் தன்னுடைய நண்பர்கள் புது கிரிக்கெட் பேட் வாங்கி விளையாட கொண்டு வந்த போது அதை பகலவன் எடுத்து விளையாடினான்.

ரன் ஓடும் போது அந்த பேட்டை பகலவன் வேகமாக தரையில் வைத்து பவுலர் முனை எல்லையை அடைய அந்த பேட்டை வைத்திருந்த பையன் வேகமாக வந்து பேட்டை அவனிடம் இருந்து வாங்கி ஏன் டா பேட்டை இப்படி பண்ண? என் கேட்டுவிட்டு சென்றான்.

பகலவன் அவனுடைய பேட்டை கையில் எடுத்து விளையாட அதை பார்த்து சிலர் சிரித்தனர்.

பகலவன் கோபத்துடன் அடுத்த பந்தை வேகமாக அடிக்க ஏற்கெனவே உடைந்த கைப்பிடி நூல்கள் கொண்டு கட்டப்பட்ட நிலையில் அது உடைந்து கையோடு வந்தது.

பகலவன் உடனே நண்பர்கள் அவனுக்கு வேறு பேட் தருகிறோம் என கூறி தடுத்தும் வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிற்கு சென்று அவன் அம்மாவிடம் இன்று தனக்கு கண்டிப்பாக பேட் வேண்டும் என கேட்டான்.

அவன் அப்பா வேலைக்கு சென்று விட்டு வந்த பிறகு அவர் கை,கால் கழுவி சாப்பிட உட்காரும் வரை அப்பா பேட் வேணும் என அடம்பிடித்து கொண்டிருந்தான் பகலவன்.

சரி சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்குறேன், கடையில் நின்னுட்டு இப்பதான் வரேன் என அவன் அப்பா கூற,சரி என சம்மதித்து பிடிவாத எண்ணம் முகத்தில் தெரிய அமர்ந்து இருந்தான் பகலவன்”.

பகலவன் அன்றைய தினம் அவ்வாறு தான் அடம்பிடித்து ப பேட் வாங்கியதை நினைத்து தற்பொழுது அவனை அவனே நொந்து கொண்டான்.

ஏனெனில் அவன் பெற்றோர் அவர்கள் சேமித்த பணம் போக மீதம் இருந்த இந்த சிறு பணத்தை வைத்து செருப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இருந்த பணம் என அவர்கள் இவன் தூங்கியதாக நினைத்து பேசியதை கேட்டு மனம் நொந்தான்.

அவன் பெற்றோர் அப்பொழுதும் குடும்ப நிலைமையை அவனே புரிந்துகொள்வான் என நினைத்ததையும்,எங்கே வாங்கி தர முடியாது என்றால் பிள்ளை வருத்தப்படுவான் என கூறியதையும் கேட்டதில் இருந்து மிகவும் வருத்தப்பட்டான்.

ஆனால் பகலவன் அவன் வீட்டில் அவனை திட்டும் பொழுதும் இல்லையெனில் அவன் ஒரு வேலையை ஒழுங்காக செய்யவில்லை அல்லது செய்யமாட்டேன் என மறுத்தால் “அந்த பையனை பாரு,அந்த பொண்ணை பாரு,உன் அண்ணன்,தம்பியை பாரு,அவங்கள விட நம்ம நல்லா இருக்கோம்.

சில சமயம் அவங்க அளவுக்கு நம்ம கிட்ட பணம் இல்லை” என தங்களின் நிதி மற்றும் குடும்ப நிலைமையை ஒப்பிட்டு கூறுவார்கள்.

நாம் எவ்வளவு நல்லா இருக்கோம் என் மற்றவருடன் ஒப்பிட்டு நாம் மகிழ்கிறோம்.

இன்னொருவர் குறையை வைத்து கேலி செய்வது தவறு என்றால் இன்னொருவரின் குறையை பார்த்து நம்மிடம் அது இருக்கு அல்லது நான் அதை நன்றாக செய்வேன் என மகிழ்வதும் தவறே.

பகலவன் இவ்வற்றையெல்லாம் பார்த்து விட்டு ஒரு முடிவெடுத்தான்,

“ஒருவரின் அத்தியாவசிய தேவைகள் நிம்மதியாக வாழ உதவி செய்யும்.

ஆனால் ஒருவரின் மகிழ்ச்சியை தீர்மானிப்பது அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஒவ்வொருவரின் மன எண்ணங்கள் மற்றும் ஆசைகள்”.

நாம் நம்முடைய பலம்,பலவீனம் மற்றும் நம்முடைய வாழ்க்கையை பற்றி யோசித்தால் நாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோம்,என்ன தவறு செய்கிறோம் மற்றும் என்ன செய்ய வேண்டும் எதிர்காலத்தில் ? என தீர்மானித்து நம் வாழ்க்கையை வாழலாம் என அந்த ரோட்டில் நடந்தான்.

பகலவன் அந்த ரோட்டில் நடந்த பொழுது அனைவரையும் மனிதர்களாக பார்த்தான், அவர்கள் வாழ்க்கை மற்றும் வேலையை வைத்தும அவன் செய்யும்வேலையுடன் ஒப்பிடாமல் பார்த்துக்கொண்டு சென்றான்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract