Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 4

ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 4

2 mins
347


இக்கதை படிக்கும் முன் ஹோட்டல் நலபாகம் அத்தியாயம் 1,2,3 படிக்கவும்


அந்த கல்யாண மண்டபம் அன்று ஜன நடமாட்டத்தை பார்த்து கொண்டே இருந்தது.


அது பல வகையான திருமணங்களை கண்டுள்ளது இந்து,முஸ்லீம்,கிறிஷ்டியன் ரிஷேப்ஷன்.


ஆனால் அது ஆச்சர்யப்பட்ட விஷயம் பணம் உள்ளவர்,இல்லாதவர் என அனைவரும் முடிந்தளவு கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்துவது.


பணம் இல்லாதோர் ஒரு நாள் ஊர் வாயை பிளக்க வைப்பதற்கு அவர்கள் பல நாள் கடனை அடைக்கும் நிலைமையை நினைத்து அந்த மண்டபம் சற்று பரிதாபப்பட்டது.


மன்னிக்கவும் மண்டபத்தின் எண்ண ஓட்டத்தை கண்ட நாம் அந்த மண்டப்தில் முதல் நாள் காலை முதல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த மணி அண்ணனை கவனிக்காமல் வந்துவிட்டோம்.


மளிகை சாமன்களை அடுக்கி வைப்பது முதல் ஆட்களுக்கு வேலை பிரித்து தருவது முதல் அன்று மணி அண்ணன் வேறு எதை பற்றியும் யோசிக்காமல் இருந்தார்.


ஆனால் ஓய்வு சிறிது கிடைக்கும் போதேல்லாம் அபிநயா மீது அவர் கொண்ட காதல் மனதில் வந்து சென்றது.


"ச்சே,என் புத்தி சரியில்ல,வேலை இருக்கு, அதை பத்தி யோசிச்சா தேவையில்லாமா" என சொல்லிக் கொண்டே மதிய உணவுக்கான வேலையை செய்து கொண்டிருந்தார்.


செந்தில் அவர் படும் துன்பம் காண பொறுக்காமல் அவரிடம் சென்று தான் எதற்காக அவரிடம் வேலைக்கு வந்தேன் என்பதை சொல்லவிட தீர்மானித்து முன் சென்றான்.


அவன் சொல்லும் அனைத்தையும் பொறுமையாக கேட்ட மணி அண்ணன் கண்ணில் கோபம் கொப்பளித்தது.


ஆனால் அவன் தனக்கு தீங்கு செய்தது இன்னொருத்திரின் துண்டுதலால்,இப்பொழுது இவன் மீது கோபம் பட்டு மேலும் இவனை கெட்டவனாக்க வேண்டாம் என நினைத்து அவனை வேலை செய்ய அனுப்பினார் மணி‌ அண்ணன்.


சரியாக அவர்கள் உணவு சமைத்து முடிக்க அபிநயா மற்றும் மாப்பிள்ளை வந்து அமர மணி அண்ணனை சாப்பாடு பரிமாற அழைத்தார் அபிநயாவின் அண்ணன் நவீன்.


மணி அண்ணன் சிரித்தபடி அங்கு வந்து உணவை பறிமாறிவிட்டு சென்றார்.


அவர்‌ மனதில் ஒரு எண்ணம் அப்போது உதித்தது.


உடனே தன் அம்மாவுக்கு போன் செய்து இத்தனை நாட்கள் அவர்கள் பெண் பாரக்கட்டுமா என்று கேட்ட கேள்விக்கு சரி என பதில் அளித்தார்.


அடுத்த நாள்,

மணி அண்ணன்‌ ஊருக்கு கிளம்பி கொண்டே செந்திலை பையை எடுத்து கொண்டு வீட்டிற்கு வெளியே போய் நிற்க சொல்லிவிட்டு தன்னுடன் வேலை செய்பவர்களை ஆர தழுவி விட்டு ஹோட்டலை நான் வரும் வரை பார்த்து கொள்ள சொல்லி விட்டு செந்திலை பார்த்து நட டா என்றார்.


அண்ணே எங்க?


உன் மாமியார் வீட்டுக்கு என சொல்ல,செந்தில் உடனே எனக்கு பொண்ணு பார்த்தீங்களா? என சிரித்தான்.


அது சரி அண்ணன் கல்யாணம் ஆகாம இருக்கது பத்தி கவலை இல்லை உனக்கு கல்யாணம் கேட்குதா.


அப்படி இல்லை னா உங்களுக்கு பெரியப்பா ஆகனும் அப்படினு ஆசை இல்லையா?


இல்லை உன்னை சித்தப்பா ஆக்கனும்னு ஆசை என சொல்லி அவன் கழுத்தை சுற்றி கையை போட்டு கொண்டு நடந்தார்.


இதனை அபிநயா அவள் வீட்டு மாடியில் நின்று பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டாள் ஏனேன்றால் செந்தில் மணி அண்ணன்‌ கல்யாணம் செய்து கொள்ள போவதை சொல்லி விட்டான்.


அபிநயா வானை பார்க்க பறவைகள் கூட்டமாக பறந்து சென்றன. 


பறவை போல் பயணங்களை மனிதர்களும் செய்கிறார்கள்.


வாழ்க்கை என்றும் ஒரே இடத்தில் நின்று விடுவதில்லையே.


Rate this content
Log in

Similar tamil story from Abstract