Saravanan P

Abstract Drama Classics

4  

Saravanan P

Abstract Drama Classics

இரு களங்கள்

இரு களங்கள்

2 mins
206


அந்த வரண்ட நில பகுதியில் களம் அடுத்த நாள் போருக்காக காத்து கொண்டு இருந்தது.


கூடாரங்கள் மேல் பறந்து கொண்டிருந்தன இரு நாட்டு கொடிகள்.


அதில் ஒரு நாட்டு கூடார பகுதிகளில் விசாகன் தனது ஆயுதங்களை கூர் செய்து வாங்கி நடந்து கொண்டிருந்தான்.


அவனின் மனதில் அடுத்த நாள் போரை பற்றி பல கற்பனைகள் இடைவிடாது உதித்து கொண்டிருந்தன.


அவன் தனது ஆயுதங்களை இறுக பற்றி கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட கூடாரத்திற்கு சென்றான்.


அவனுடன் அங்கு இருந்த சக வீரர்கள் அடுத்த நாள் போரை பற்றி தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தனர்.


விசாகன் அவர்களுடைய பேச்சில் கலந்து கொண்டான்.



நண்பர்களே அந்த எதிரி படையின் பழைய போர்கள் பற்றி எதாவது தெரியுமா? என கேட்டான்.


தெரியாமல் என்ன என சுகன் எனும் வீரன் எதிரி நாடு கடைசியாக செய்த போரில் எதிர்த்து வந்து படைகளை போர் நெறிகளை கடைப்பிடிக்காமல் நிராயுதபாணியாக இருந்த வீரர்களை கொன்றது,அந்த நாட்டு மக்களை சித்திரவதை செய்து,பெண்களிடம் அத்து மீறியது என நிறுத்தினான்.


நாம் இது எதுவும் செய்ய மாட்டோமா என விசாகன் கேட்க,சுகன் மற்றவர்கள் சிரித்தார்கள்.

முதல் போரா தம்பி? என அன்பு எனும் வீரன் கேட்டான்.


ஆம் என விசாகன் கூற,நாம் ஒரு சில நெறிகளை மீறுவோம் அவர்களை போல் இல்லை என சொல்லி அன்பு சிரிக்க மற்றவர்கள் கை தட்டி சிரித்தார்கள்.


விசாகன் கூடாரத்தை விட்டு வெளியே வந்து உணவு அருந்த செல்ல அறுசுவை உணவு உண்டு கொண்டு வீரர்கள் பாட்டு,நடனம் என இருக்க விசாகன் உணவை வாங்கி கொண்டு தனியாக அமர்ந்து உண்டு கொண்டே அவர்கள் அனைவரையும் பார்த்தான்.


ஆம்,வீரனின் வாழ்க்கை நிச்சயமற்ற வாழ்க்கை, நாளை எங்களில் எத்தனை பேர் திரும்பி வருவோம்,உடம்பில் எத்தனை பகுதிகள் சேதம் ஆகும் என தெரியாது என நினைத்து கொண்டான் விசாகன்.


அடுத்த நாள்,போர் முடிவை எட்டும் தருவாயில் இருந்தது.விசாகனின் படை திமிறி கொண்டு அந்த நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது,எஞ்சி இருந்த சிறிய எதிரி படை வீரர்கள் ஆயுதம் இல்லாத நிலையில் விசாகனின் சக வீரர்களால் வெட்டப்பட்டனர்.


அப்பொழுது பெண்களின் அலறல் சத்தம் கேட்டு விசாகன் அந்த பக்கம் செல்ல,அங்கு சில பெண்களை சுற்றி விசாகனின் நண்பர்கள் சுகன்,அன்பு முதலியோர் நிற்க விசாகன் அந்த பெண்களின் முகத்தில் குடி கொண்டிருந்த பீதியை பார்த்தான்.


அவ்வளவுதான்,தனது சக வீரர்களை தாக்கி விட்டு அந்த பெண்களை ஓடும் படி கத்தினான்.


அந்த பெண்கள் ஒடும் பொழுது ஒரு கணம் திரும்பி வாளை கையில் ஏந்தியபடி திரும்பி நின்று கொண்டிருந்த விசாகனை பார்த்து விட்டு ஓடினர்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract