Muthukumaran Palaniappan

Inspirational

4.5  

Muthukumaran Palaniappan

Inspirational

மனித ரூபத்தில் கடவுள்

மனித ரூபத்தில் கடவுள்

3 mins
299


 

உலகம் முழுவதும் நடுக்கத்தில் கதிகலங்கி கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்த காலம் 2020. அணைத்து வித மனிதர்களும் சராசரியாக அச்சுறுத்தியது கொரோன. எந்தவித பாகுபாடும் இன்றி சரம் வாரியாக பாதிக்க பட்டனர் மக்கள்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை மாநகரில் நடந்த சம்பவம் ஒன்றை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் இந்த சிறுகதையின் மூலம். எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சமீபகாலமாக கொரோனாவால் ஊரடங்கில் ஆள் நடமாட்டமில்லாமல் ஒடுங்கிப்போய் கிடக்கிறது.


நாங்கள் சென்னையின் மிகவும் முக்கியமான நகரத்தில் வசித்து வருகிறோம். எங்களது வீட்டுக்கு அருகில் ஒரு தனியார் துறையில் பணிபுரியும் பெண்மணி ஒரு பெண் குழந்தை உடன் வசித்துவருகிறார் அவருக்கு கணவர் கிடையாது. ஒழுக்கமான பெண்மணி யாருடைய வம்புக்கு போகமாட்டார். அவருடைய பெண்ணுக்கு பத்து வயதுதான் ஆகிறது.


நாங்கள் வசிக்கும் இடங்களை சுற்றி கொரோனா அதிகம் பரவி காணப்பட்டது. அந்த பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அவர் அவர்கள் உயிரை அவர் அவர்கள் பாதுகாத்து வாழ்ந்துவந்தனர். அந்த பகுதியில் அடுத்தடுத்து மரணங்கள் தீடீர் தீடிர் என்று நிகழ்ந்தன.


ஒவ்வொரு நாலும் வேதனயாக நகர்ந்துகொண்டிருந்தது. தீடீர் என்று ஒருநாள் எங்களது வீடு அருகில் இருந்த பெண்மணிக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் வெப்பம் அதிகரித்தது அந்த பெண் அருகில் யாரும் இல்லாததால் தன் பத்து வயது மகளிடம் தன்னை தொட்டுப்பார்த்து சொல் உடம்பு சூடாக இருக்கிறதா என்று கேட்டார் ஆனால் அந்த பெண்ணால் விவரமாக சொல்லத்தெரியவில்லை . அந்த பெண்மணிக்கோ மீண்டும் மூச்சுத்திணறல் அதிகம் ஏற்பட்டது உதவ யாரும் இல்லை ஊரே நடுங்கி போயிருந்த நேரம் அக்கம்பக்கத்தில் யாரை கூப்பிட்டாலும் யாரும் வருவதாக தெரியவில்லை. அந்த பென்ணிக்கு நேரம் ஆக ஆக பயமும் உயிர்பற்றிய சிந்தனைகளும் வலுத்தது.


அந்த பெண் இறுதியாக வேறு வழி இன்றி தனது மொபைலைஎடுத்து கால் டாக்ஸிக்கும் போன் செய்தார் ஆனால் அனைத்து கால் டாக்ஸி ஓட்டுநர்களும் காலை துண்டித்தனர் யாரும் ரிஸ்க் ஏடுக்க விரும்பவில்லை. நேரம் கடந்துகொண்டே இருந்தது அந்த பெண்மணிக்கு பயம் அதிகரித்தது. என்ன செய்வது என்று புரியவில்லை ஆனாலும் கால் செய்வதை நிறுத்தவில்லை தொடர்ந்து முயற்சி செய்தற் எதிர்பாராதவிதமாக திடீர் என்று போனை ஒருவர் எடுத்தார் விவரங்களை கேட்டார் கேட்ட பிறகு நம்பிக்கை சிலவார்த்தைகள் சொன்னார் உங்கள் முகவரியை கொடுங்கள் நான் வருகிறேன் என்றார். இப்பொழுதுதான் அந்த பெண்மணிக்கு நம்பிக்கை தோன்றியது.


இருந்த போதிலும் அந்த நபர் வரும் வரை மனதுக்குள் சிறு பயம் இருந்து கொண்டே இருந்தது. இப்படி யோசித்து கொண்டு இருந்த பொழுது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அந்த பெண் தட்டு தடுமாறி கதவை திறந்தார் 35 வயது மதிக்க தக்க ஒரு ஆண் வாங்க காரில் ஏறுங்கள் என்றார் நானும் வேறு வழி இன்றி நம்பிக்கையோடு காரில் ஏறினேன் அந்த பெண்மணியால் தனித்து சென்று மருத்துவமனைகளில் இடம் விசாரித்து அட்மிஷன் ஆவது என்பது மிகவும் கடினம்.


கொரோன அதிகம் தலை விரித்தாடிய காலகட்டம் அணைத்து மருத்துவமனைகளிலும் இடம் கிடையாது. அந்த பெண்ணுக்கு ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று கேட்க உடம்பு இடம்கொடுக்கவில்லை. ஆனால் அழைத்து வந்த அந்த கால் டாக்ஸி டிரைவர் ஒவ்வொரு மருத்துவ மனையாக ஏறி இறங்கி அந்த பெண்ணை பற்றி விவரம் சொல்லி இடம் கேட்டார் இப்படி பல மருத்துவமனைகளில் அவர் கேட்டு இறுதியாக ஒரு மருத்துவமனையில் இடம் இருக்கிறது என்று சொன்ன பிறகு அந்த பெண்ணை அட்மிசன் செய்துவிட்டு தனது வண்டியின் வாடகையை வாங்கிக்கொண்டு சென்றார்.


அட்மிசன் ஆனா மருத்துவமனையில் அந்த பெண்ணின் பெட்டுக்கு அருகிலேயே சில மரணங்கள் . அந்த சமயத்தில் அந்த பெண்மணியை பரிசோதனை செய்த மருத்துவர் சொல்கிறார் நீங்கள் இன்னும் சிறிது தாமதமாக வந்திருந்தால் உயிரோடு இருந்திருக்க முடியாது சரியான நேரத்தில் வந்துள்ளீர்கள் என்றார்.


அந்த பெண்ணுக்கு அணைத்து பரிசோதனைகளும் எடுக்கப்பட்டது . அணைத்து முடிவுகளும் மறுநாள் வந்தது அந்தப்பெண்ணுக்கு கொரோன இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமை படுத்தப்பட்டார். சிகிச்சை தீவிரமாக வழங்க பட்டது.


அந்த பெண்மணிக்கு பல நாட்கள் மருத்துவமனையில் கடந்து சென்றது. தீவிர சிகிச்சை வழங்க பட்டது.

இறுதியாக அந்த பெண்மணிக்கு கொரோன இல்லை என்று தெளிவான பிறகே மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.


அந்த பெண்மணி வீட்டுக்கு வந்தவுடன் தன்னை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த 35 வயது மதிக்கத்தக்க நபரின் போன் நம்பர் வாங்கி வைத்திருந்தார் அந்தநம்பரை நன்றி சொல்லலாம் என்று அழைத்தார் ஆனால் மறுமுனையில் அவர் போன் ரீச்சாகவில்லை பலமுறை முயற்சி செய்து விட்டுவிட்டார்.


அந்த பெண்கனிக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவரும் போனில் அவரை அழைத்து நலம் விசாரித்தனர். அந்த சமயத்தில் பலர் கேட்டனர் உனக்கு யார் உதவியது என்று . அதற்கு அந்த பெண் சொன்னார் அந்த கால் டாக்ஸி ஓட்டுனரை பற்றி .


மறுபிறவி எடுத்து வந்த அந்த பெண்ணை பார்த்து ஒருவர் கேட்டார் நீங்கள் இப்பொழுது மறுபிறவி எடுத்து வந்துள்ளீர்கள் அதற்கு கரணம் யார் என்று. அதற்கு அந்த பெண்மணி கூறிய ஒரே வார்த்தை கடவுள் என்றார். எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த பெண் சொன்னார் கடவுள் என்பவர் நேரடியாக வரமாட்டார் இப்படி மனிதரூபத்தில் உள்ள மனிதநேயம் உள்ளவர்கள் மூலம் செயல்படுத்துவர் என்றார்.


இந்த சிறுகதையில் இருந்து உங்களுக்கு நான் சொல்வது கடவுள் என்பவர் நம்கூடவேய் தான் இருக்கிறார்.

நாம் நம்கடமைகளை சரிவர செய்து கொண்டே இருந்தால் போதும் நம்மை கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் காப்பாற்றுவார். அவர் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். நம் கூடவே இருக்கும் மனிதர்கள் கூட கடவுளாக நமக்கு உதவலாம் என்பதையே இந்த சிறுகதை சொல்கிறது.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational