Shakthi Shri K B

Children Stories Drama Inspirational

4  

Shakthi Shri K B

Children Stories Drama Inspirational

ஓற்றை ஒளி.

ஓற்றை ஒளி.

2 mins
518


மீனா ஒரு அன்பான குழந்தை. தினமும் அவள் பெற்றோருக்கு வயலில் உதவுவது வழக்கமா கொண்டடிருந்தால்.அன்று ஒரு நாள் அவர்கள் கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருகை தந்து அனைவருக்கும் அரசு சலுகைகளை வழங்கினார். அன்று மாலை மீனா, அவள் அப்பாவிடம், "அப்பா, அப்பா , நமக்கு எதற்கு இந்த சலுகை?", என கேள்வி கேட்டால்.



அதற்கு கண்ணன், "அன்பு மகளே, கடந்த வருடம் மழை மிக குறைவு, ஆகையால் நமக்கு பயிர் விளைச்சல் குறைந்து போனது அதனால் தான் அரசு நமக்கு சலுகை வழங்கியது அம்மா " என்றார்.

அப்படியென்றால் எந்த வருடம் நமக்கு நல்ல விளைச்சல் வர போகுதுதானே என்றால் மகிழ்ச்சியுடன். "என்ன என்ன பேசுகிறாய் ? " என கோவமாக கேட்டால், மீனாவின் அம்மா உமா. அம்மா நான் சரியாக தானே சொன்னேன். இந்த வருடம் நல்ல மழை அப்படி என்றல் நல்ல விளைச்சல் அது தானே கூறினேன். அப்பொழுது, சிறு பிள்ளை மீனாவிற்கு வயதோ நான்கு கூட எட்டவில்லை எப்படி இவளுக்கு புரிய வைப்பது, என திகைத்து நின்றனர் அவள் பெற்றோர்.


அப்போது அவளில் பாட்டி, " மீனா குட்டி, இங்கே வா, நான் சொல்லித்தருகிறேன் என்றார். அவர் பேச துடங்கினார். அதாவது பயர் விளைச்சலுக்கு போதுமான மழையும் போதுமான சூரிய ஒளியும் மிக அவசியம். இவ்வருடம் விடாது மழை பொழிகிறது ஆனால் பயிர்கள் வளர போதுமான தண்ணிர் நமது கிணற்றிலும் நம் ஊர் குளத்திலும் நிறைய சேமிக்கப்பட்டுள்ளது ஆனால் சூரிய ஒளி தான் சரியாக கிடைக்கவில்லை இன்னும் ஒரு வாரத்தில் மழை நின்று சூரிய ஒளி அதிகமாக வீசினால் மட்டுமே பயிர் விளைச்சலாகும். இல்லை என்றல் மீண்டும் நமக்கு போறத காலம்தான் மீனா குட்டி. பாட்டி கூறியதை கேட்டவுடன், "பாட்டி , அப்போது மலை நின்று வெயில் வர நாம் என்ன செய்யவேண்டும் " என மழலை மொழியில் கேட்டால். அது நம் கையில் இல்லை கடவுளிடம் வேண்டுதல்தான் செய்ய முடியும் நம்மால் என்றால் அவள் அம்மா.


சற்றும் தாமதிக்காமல் கடவுளே மழையை நிறுத்தி அதிகமான வெயில் வீசுமாறு செய்யுங்கள் எங்கள் பயறுகளை காப்பாற்றுங்கள் என வேண்டினாள் மீனா. 


மூன்று நாட்கள் ஓடின.


மீனா, எழும்பு,வா , வா வந்து பார் என அவள் அம்மா சொல்ல. மெதுவாக எழுந்து வந்தால் மீனா படுக்கையிலிருந்து. மிக அழகிய சூரிய ஒளி வீச , மழை நின்ற சூழலில் சிறு செடிகள் முலை மேலே வந்தித்திருந்ததை கண்டு மீனாவின் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது.. அன்று வந்த சூரிய ஒளி மீனாவின் முகத்தில் மகிழ்ச்சியை மட்டும் கொண்டுவரவில்லை அவள் தந்தையின் வாழ்க்கையை மாற்றியது அந்த ஓற்றை சூரிய ஒளி.



Rate this content
Log in