Amirthavarshini Ravikumar

Drama

4  

Amirthavarshini Ravikumar

Drama

பணம் செய்த பிணம்

பணம் செய்த பிணம்

2 mins
210


     ஒரு பணம் தின்னி செட்டியார் தன் ஒரே மகனுடன் அரண்மனையில் வாழ்ந்து வந்தார். இருவரும் தனிக்காட்டுராஜா. செட்டியாருக்கு கண்ணிலும் காதிலும் சிறிய கோளாறு. அவரைப் பார்த்து அனைவரும் பயப்படுவார்கள். பணத்தை வைத்து அனைத்தையும் விலைக்கு வாங்கி விடுவார். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் மரணத்தை பரிசாக தருவார். வேலைக்காரர்களுக்கு கூலி சரியாக தராததால் ஒரு வேலைக்கார முதியவர் செட்டியாரிடம் அதை பற்றி கேட்டார். அப்பொழுது செட்டியார் கண் அசைக்க, செட்டியார் மகன் ஒரு கட்டையால் முதியவரை தாக்கினார். முதியோர் கீழே மயங்கி விழுந்து இறந்தார். அவரது சடலத்தை முதியவரின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு செட்டியாரின் மகன் சென்று விட்டான். முதியோரின் மகன் முருகன் இவர்கள் மீது புகார் அளித்தும் பயனில்லாமல் போய்விட்டது. பணம் பத்தும் செய்துவிட்டது என அனைவரும் புலம்பினர். முருகன் இவர்களை பழிவாங்க தீர்மானித்தான். அவன் ஒரு சாமியார் வேடத்தில் அரண்மனைக்கு சென்று ஒரு பூஜை செய்தால் இன்னும் பணம் பெருகும் என சத்யனிடம் கூறினார்.


செட்டியார் நாளையே பூஜையை தொடங்கி விடலாம் என்று கூறினார். ஒரு காட்டில் தான் பூஜை நடத்த வேண்டும் என முருகன் கூற செட்டியாரும் அதற்கு சம்மதித்தார். செட்டியாரும் அவனது மகனும் மாலை 6 மணி அளவில் பூஜைக்கு காட்டிற்கு சென்றனர். முருகன் பூஜை நடக்கும் இடத்தின் அருகில் ஒரு பிணக்குழி இருந்தது. அதில் இருவரையும் தள்ளிவிட முடிவு எடுத்தான். பூஜை ஆரம்பம் ஆகும் பொழுது முருகன் செட்டியாரிடம் "தங்களது தலையில் இந்த எண்ணெய் வைத்து பூஜையை தொடங்க வேண்டும்" என்று கூறினான். செட்டியாரும் சரி என்று கூறி எவைக்க அனுமதித்தார். முருகன் அதிகமான எண்ணெயை செட்டியாரின் தலையில் வைத்ததால் அது முகத்தில் வடிய தொடங்கியது இதனால் செட்டியார் தன் கண்களை மூடிக் கொண்டார். முருகன் ஹோம குண்டத்தில் தீயை அதிகமாக போடவே அங்க இரவு நேரத்தில் புகை அதிகமாக சூழ்ந்தது. அந்நேரத்தில் முருகன் செட்டியாரின் மகனின் முகத்தை கட்டி அக்குழியில் தள்ளிவிட்டான்.


செட்டியாரின் மகன் அப்பா என்று கதற செட்டியார் "என்ன நடந்தது? " என எழும்பி நின்றார். முருகன் "ஐயா தங்களது மகன் உங்களை அழைக்கிறார்" என்றான். " அவன் இங்குதானே இருந்தார் எங்கு சென்றான் அவன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் சாமியாரே" என்றார். முருகன் செட்டியாரை குழி அருகில் கூட்டி சென்றான். செட்டியாரின் மகன் அப்பா பிண குழி விழுந்து விடாதீர்கள் என கத்தினான். ஆனால் செட்டியாருக்கு அது பண குழி என்று கேட்க செட்டியார் தாம் வருவதாக கூறி அக்குழியில் விழுந்துவிட்டார். இருவரும் இறந்தனர். பணத்தால் பிணமானீர்கள் என்று கூறி விட்டு முருகன் சென்றான். செட்டியாரின் அரண்மனையையும் அவரது பணத்தையும் அது மாவட்ட கலெக்டர் சமூக சேவைக்காகவும் மக்களின் தேவையை நீக்குவதற்காகவும் பயன்படுத்தினார். 

பணம் பத்தும் செய்யும்; பிணமும் செய்யும்.


Rate this content
Log in

Similar tamil story from Drama