Saravanan P

Abstract Drama Inspirational

5.0  

Saravanan P

Abstract Drama Inspirational

ரசிகர்கள்: தமிழ் சினிமாவில்

ரசிகர்கள்: தமிழ் சினிமாவில்

2 mins
450


ரசிகர்கள்: தமிழ் சினிமாவில்


சினிமாவை பற்றிய புரிதல் எனக்கு இப்பொழுது உள்ளது ஆனால் நானும் ஒரு நடிகனின் ரசிகனாக மற்ற நடிகர்களை தாழ்வாக மற்ற சினிமா ஆட்களை மோசமாகவும் பேசியுள்ளேன்,அதை போல் உள்ள மற்றவர்களை மாற்ற எனது சிறிய முயற்சி.





புரோடியூஸர் சிவநேசன் தனது ஆபீஸில் அமர்ந்து நீண்ட நேரத்ம் யோசனையுடன் யோசித்து கொண்டிருந்தார்.


கடந்த 2 படங்கள் சரியாக ஓடாததால் படத்திற்கு எப்பொழுதும் கடன் வழங்கி அதாவது படத்தில் இன்வெஸ்ட் செய்ய விரும்பும் நபர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.


தற்பொழுது ஒரு பெரிய வெற்றி படம் தரவேண்டிய நெருக்கடி,இல்லையெனில் புரோடக்ஷன் ஹவுஸ் பெயர் கெட்டுவிடும்.


ஒரு பெரிய நடிகரின் படத்திற்கே மக்கள் உடனே தியேட்டர் வருவார்கள் என நம்பி அவர் ஒரு பெரிய ஹிரோவை கம்மிட் செய்ய பார்க்க செல்ல அவர் ஒரே செக்கில் 70 கோடி சம்பளம் கேட்கிறார்.


சார் ஷாரிங் மாடல் என சிவநேசன் பேச ஆரம்பிக்க ஹீரோ அப்பறம் பேசலாம் என அனுப்பி விடுகிறார்.


சிவநேசன் தனது ஆபிஸில் அடுத்து இளம் இயக்குனர்களை அழைத்து ஒரு நல்ல கதையை கேட்க முடிவு செய்கிறார்.


அப்படி ஒரு இளம் இயக்குனர் அருமையான கதையை சிறிய பட்ஜெட்டில் சொல்ல சிவநேசன் அவரை பாராட்டி கம்மிட் செய்கிறார்.


படப்பிடிப்பு அருமையாக நடக்க சிவநேசன் படத்தின் மீது முழு நம்பிக்கையை வைத்து வேலை செய்கிறார்.


படத்தின் ரிலீஸ் டேட் குறித்து தியேட்டர் கவுன்சிலில் முடிவெடுக்க செல்ல சிவநேசன் கால்ஷீட் கேட்ட அதே நடிகரின் படமும் அதே தேதியில் வெளி வருவதால் நீங்கள் ரிலீஸ் தேதியை மாற்றி வெளியடவும் அல்லது மிகவும் குறைவான தியேட்டர் மட்டும் ஒதுக்கி தருவதாக கூறுகின்றனர்.


சிவநேசன் அதையும் ஒத்துக்கொண்டு குறைவான தியேட்டர்களுக்கு ஒப்புக்கொள்கிறார்.


சிவநேசன் தயாரித்த படத்தின் இயக்குனர் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த போது சிறிது நேரம் தனது போனில் டிவிட்டர் ஆப்பின் உள்ளே சென்ற போது அந்த பெரிய நடிகரின் படம் குறித்து நிறைய செய்திகள் வந்து கொண்டிருந்தது.


அதே நேரத்தில் அந்த நடிகரின் ரசிகர்கள் சிலர் "எங்க ஆளோட படத்தோடையே போட்டிக்கு படம் விடுறீங்களா,நீங்க என்ன படம் எடுக்கிறீங்க என பார்க்குறோம்" என மிகவும் மோசமாக சிவநேசனையும் அந்த இயக்குனரையும் விமர்சனம் செய்து வந்தனர்.


அந்த இயக்குனர் 5 நிமிடம் போனை அமர்த்தி விட்டு தனியே அமர்ந்து விட்டு பின்பு தன் பட வேலைகளை தொடர்ந்தார்.


படம் வெளியான பிறகு, பெரிய நடிகரின் படம் வசூல் நிறைய செய்தாலும்,விமர்சன் ரீதியாக தோல்வி தான் அடைந்தது.


சிவநேசனின் தயாரித்த படம் மெல்ல மெல்ல வசூலை அதிகம் செய்து கொண்டிருந்தது.



கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த நான்கு நண்பர்கள் பேருந்தில் அமர்ந்து இந்த இரு படங்களை பற்றி விவாதித்து கொண்டிருந்தனர்.


அதில் ஒருவன் அந்த புது இயக்குனரின் படத்தை பற்றி மிகவும் பாராட்டினான்.


அவனின் நண்பன் உடனே "நீங்க எங்க கூட தான டா நம்ம ஆள் படத்தை பார்த்தா, இந்த படத்தை எப்ப பார்த்த?" என கேட்க, அந்த மாணவன் டெலிகிராம் என சொல்ல அனைவரும் சிரித்தனர்.


அந்த பெரிய நடிகரும் அந்த இயக்குனரை அழைத்து அடுத்த படத்தை பண்ண சொல்ல அது கலவையான விமர்னங்களை பெற்றது.


அதற்கு அந்த இயக்குனர் அனைத்து வகையான மோசமான விமர்சனங்கள் சினிமாவை தாண்டியும் ஆன்லைனில் பெற்றார், அந்த நடிகரின் அடுத்த படம் நடக்கபோகும் பொழுது பெற்ற வாழ்த்துக்கள் இப்பொழுது வசவுகளாக மாறின என்பதை அந்த இயக்குநர் உணர்ந்தார்.


70 கோடி சம்பளம் பெறும் அந்த நடிகரின் போட்டி நடிகரின் ரசிகர்கள் இது தான் வாய்ப்பு என அந்த நடிகரை மிகவும் மோசமாக ஆன்லைனில் பேச,இந்த நடிகரின் ரசிகர்கள் பதிலுக்கு அந்த ரசிகர்களின் விருப்ப நடிகரை இதே போல் மோசமாக பேச அது மிகவும் ஒரு கேவலமான விஷயமாக மாறியது,அந்த நடிகரின் சொந்த வாழ்க்கை வரை அந்த பேச்சின் தலைப்புகள் சென்றது.


நான் கூற விரும்புவது,


"ஒரு இயக்குனர் படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் விமர்சனம் செய்யலாம் அது ஒரு எல்லையுடன் இருக்க வேண்டும்.


அனைவரது எதிர்ப்பார்ப்பையும் ஒரு இயக்குனர் எட்டுவது முடியாத காரியம்.


முதலில் இயக்குனருக்கு ஒரு மரியாதை கொடுங்கள், அவர்கள் உங்களது பொழுதுபோக்கிற்காக தான் வேலை செய்கிறார்கள், அதனால் அதை பொழுதுபோக்கிற்காக என மனதில் நிறுத்துங்கள்.


தியேட்டரில் படம் பார்த்து விட்டு அந்த விமர்சனத்தை செய்யுங்கள்,அப்பொழுது உங்கள் கோபம் நியாயமானது.


உங்களது பொருளை ஒருவர் உங்கள் கண் முன்னே எந்த முயற்சியும் இன்றி எடுத்து பயன்படுத்தினால் எப்படி இருக்கும்,அதே போல தான் அந்த புரோடியூசர் படம் ஆன்லைனில் வந்து நீங்கள் பார்ப்பது‌.


படத்தின் நஷ்டத்தை உணர்வது புரோடியூசர்,இயக்குனர் மட்டுமே.


உங்களை படம் பார்க்க வேண்டாம் என சொல்ல வில்லை,முட்டாள்தனமாக போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள், ஒருவருடன் ஒருவர் வாக்குவதம் இட்டு கொண்டு மற்றும் சண்டையிட்டு தாக்கி கொள்ளாதீர்கள்,படத்தை ஒரு பொழுதுபோக்கு என மனதில் பதியவைத்து கொள்ளுங்கள்.


வாழ்க்கையில் இது முக்கியம் இல்லை,முக்கியமான விஷயங்கள் வேறு நிறைய உள்ளது.


இதை போல சமூக பிரச்சனைக்கு நீங்கள் கேள்வி கேட்டிருந்தால்,உங்களை போன்ற ஒவ்வொருவர் கேட்டிருந்தால் நாடு எப்பொழுதோ முன்னேறியிருக்கும்."


Rate this content
Log in

Similar tamil story from Abstract