KANNAN NATRAJAN

Inspirational

4  

KANNAN NATRAJAN

Inspirational

யார் பெரியவன்?

யார் பெரியவன்?

1 min
408


பறவைகள் ஒரு நாள் வானத்தில் பறந்தபடி இருந்தன. கொக்கு கிளியிடம் பந்தயம் கட்டியது. யார் உயரே பறக்கிறார்களோ அவர்தான் பறவைகளின் தலைவன் எனப் பேசியது. கிளி பயந்தபடி மிகவும் உயரப் பறந்தால் சூரியக் கதிர்கள் நம்மை எரித்துவிடும் என்றது. இதைக் கேட்டுக்கொண்டிருந்த சூரியன் குழந்தைகளா! என்னை நெருங்கவேண்டும் என நினைக்கிறீர்களா என்று கேட்டது. கிளி சுற்றுமுற்றும் பார்த்தது. யார்சூரியனா பேசுவது? எனக் கேட்டது. ஆமாம்! கொக்கு பேசியதைக் கேட்டேன். என்னை நெருங்கினால் நான் ஒன்றும் சொல்லமாட்டேன்.


எனது மடியில் அமர விருப்பம் இருப்பவர்கள் வரலாம் என்றார் சூரியன். எங்களுக்குள் ஒரு போட்டி என கொக்கு பேசியது. என் வீட்டிற்கு வா! எனக்கூறினார். கொக்கும்,கிளியும் சூரியன் வீட்டிற்குச் சென்றன. அங்கு நட்சத்திரங்களும், நிலாவும், வானமும் மரங்களும், மழையும், இடியும், மின்னலும், நெருப்பும் இருந்தனர். உள்ளே நுழைந்த கொக்குவிற்கு அப்போதுதான் புத்தி வந்தது. கிளியிடம் ரகசியமாக நான் யார் பெரியவன் என்று கேட்டதை மறந்துவிட்டேன். இவர்கள்தான் இந்த பூமியில் வாழ உதவும் பெரியவர்கள் என்றபடி தான் கொண்டுவந்திருந்த பூக்களை சூரியனிடம் கொடுத்து நட்புடன் சிரித்தது. உலகத்தை உணர்ந்தாயா என்றபடி சூரியன் புன்னகைத்தார்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational