மழைக்கொட்டுமென
மழைக்கொட்டுமென
அவள் கனவு ஒன்று
அவளது கணவனும் ஒன்று.
எட்டி பிடிக்க நினைத்த
மேகம் சிலவற்றுள்
மழை துளி மறைந்திருக்க
ஈர காற்றாலோ
இடி மின்னலாலோ
மயக்கம் கொண்டாள்.
இருப்பினும்
இன்னுமோர் முறை
சேலையை இறுக்கி முடிந்து கொண்டு
முயற்சி செய்கிறாள்,
எட்டி பிடிக்க நினைத்த மேகம்
மழை கொட்டுமென.