Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

இரா.பெரியசாமி R PERIYASAMY

Drama Romance Fantasy

5  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Drama Romance Fantasy

உயிரோடும் சிலை

உயிரோடும் சிலை

1 min
601


வளைந்து நெழிந்தோடும்

தெளிந்த நன்னீரோடையென‌

வளைந்து நெழிந்தாடும் 

மையலவள் கருங்கூந்தல்..

 

தேயாத முழு வட்ட

பொன் வண்ண 

நிலவினைப்போல் 

மலர்ந்து ஒளி வீசும் 

மங்கையவள் தங்க முகம்...

 

புருவங்கள் குடைபிடிக்க

இரு கரு மையிட்ட  கயல் விழிகளின்

இமைகளுக்கு நடுவினில்

அசைந்தும் சுழன்றும் நடனமாடி

காண்போரை ஈர்த்திடும் காந்தம்

 

தங்க முகத்தினிலே குங்கும திலகமிட்ட

மங்கையவள் நெற்றியின் அழகுக்கு

நெற்றியில் சுருண்டு தொங்கிடும் 

சிறுகற்றை முடி காற்றில் அசைந்து   

கூடுதலாய் மெருகூட்டும்..

 

மின்னிடும் கடுகளவு வைரக்கல் மூக்குத்தி

அழகிய அவளது கூரிய மூக்கின்   

அழகிற்கே அழகூட்டும்..

 

முத்துக்களை  அடுக்கி வைத்த பல்லழகை 

மறைந்திருக்கும் செவ்விதழ்கள் மலர்கையிலே

அளவாக.. அழகாக..வெளிப்படும் 

மெல்லிய  புன்னகையில் 

அவளின் பேரழகு ஒளிவீசும்

 

தேனூறும் கொவ்வை செவ்விதழ்களின் 

கவர்ந்திழுக்கும் அழகினில் மயங்கிய 

அலைபாயும் ஆடவரின் மனது 

தேன்சுவை பருகிட ஆசையில்  தவிக்கும்...

 

கவிழ்ந்த மது கிண்ணங்களாய்

குவிந்த மென்மையான 

சிறுகுழிவிழுந்த‌ கன்னங்கள் 

கிள்ளி முத்தமிட தூண்டும்..

 

தங்கத்தின் பளபளப்பில்

நீண்ட அழகிய கழுத்தினிலணிந்த 

வைர அட்டிகையும்…அவளழகினின் முன்

வெட்டி  மின்னிட வெட்கத்தில் தய‌ங்கும்

 

கழுத்திலிருந்து வெளி நோக்கி சாய்ந்த 

அவள் தோள்களிரண்டில்

 தலைசாய்த்து மகிழ்ந்திருக்க 

மனதுக்குள் ஆசை எழும்..

 

கவர்ந்து இழுக்குமிரு மாங்கனிகள் 

இலைமறை கனிகளாக மறைந்திருந்து 

விழிகளின் பார்வையை கவர்ந்திழுக்கும் .

 

மெல்லிய இடையும் இருகால்களும்

இணைகின்ற மறுபுறம் மின்னளவள்

பின்னழகை ரசிக்க வைக்கும்..

 

அன்னமென நடந்து அழகு மயில் 

அசையாது தேர்போல வருகையிலே

ஊசலாடும் கருங்கூந்தலின் பின்னல்   

இருபுறமும்  மாறி மாறி 

மென்மையாக  வருடும் யோது

அவனின் பின்னழகை கண்டு 

மனதுக்குள்  ஓராயிரம் கனவுகள் பிறக்கும்...

 

அழகியின் கால்களில் அணிந்ததால்  

கூடுதல் அழகில் மின்னிடும்  வெள்ளிக் கொலுசுகள் 

நூலிடையாள் அவளின் 

நிலம் அதிரா மயில் நடையில்..

எழுப்பிடும் மெல்லிய ஓசையும்.. இசையாகும்..

 

வெட்டியெறியும் நகங்கள் கூட 

அவள் விரல்களில் நுனிகளில்

செதுக்கி வண்ணமிட்டு 

காண்போர் விழிகளில்

பவளக்கற்களாய் பளிச்சிடும்.

 

உள்ளங்கையில் வரைந்த குருதி வண்ண 

மருதாணிக் கோலம்..

வளைகரங்களின் அழகினை 

இன்னும்  கொஞ்சம்  அதிகமாய் 

தூக்கிக் காட்டும்..

 

பிரமிக்கும் இந்த அழகியின் 

பிசிறில்லாத பேரழகை விடவும்

பிரம்மனின் திறமைக்கு வேறென்ன‌

சான்றிதழ் வேண்டும்?

என வினவிடத்தோன்றும்

 

சித்திரம் போன்று ,

செதுக்கிய சிலையினும் நேர்த்தியாய்..

பிரம்மன் படைத்த உயிர் கொண்ட 

ம‌யக்குமழகு பொற்சிலை 

போலொரு வேறொரு  அழகினை 

இவ்வுலகினில் காண்பதற்கு 

வாய்ப்புண்டோவென‌ பார்ப்போரின் 

மனதையெல்லாம் வைக்கும் பேரழ(கு)கி..

 

இரா.பெரியசாமி



Rate this content
Log in

Similar tamil poem from Drama