Saravanan P

Drama Inspirational Children

4.8  

Saravanan P

Drama Inspirational Children

அன்புவின் வாழ்வில்

அன்புவின் வாழ்வில்

3 mins
511


"உயிர் தருவார் அன்னை,

அடி வாங்காமல் தடுப்பார் பாட்டி,

காது திருகி படிக்க வைப்பாள் அக்கா,

வீட்டின் இளவரசி என நம்மிடம் நடப்பாள் தங்கை,

அம்மா போல் பார்த்து கொள்ளும் பெரியம்மாக்கள்,சித்திகள்,

செல்லம் கொஞ்சும் அத்தைகள்,

எதிர்காலத்தில் நமக்காக அன்பு தர காத்திருக்கும் மனைவி,

அம்மா என அழைக்க வைக்க பிறக்கும் செல்ல மகள்,

பெண்மை போற்றுதலுக்குரியது மனிதா."


அம்மு சீக்கிரம் கிளம்பு, பள்ளிக்கூடம் போகனும் என சுவலட்சுமி கூறிக்கொண்டே மதிய சாப்பாட்டை டப்பாவில் வைத்து விட்டு மகள் அன்புவை ஒருமுறை பார்க்க வந்தாள்.


அன்பு படித்து முடித்த புத்தகங்களை எடுத்து பையில் வைத்துக்கொண்டு பாட்டு கேட்டு கொண்டிருந்தாள்.


சுவலட்சுமி சிரித்து கொண்டே அப்பா சாயங்காலம் வந்த உடனே உன் மார்க்கலாம் சொல்லு ரொம்ப சந்தோஷப்படுவாரு என கூறிவிட்டு அவள் தலையை வாரினார்.


அன்புவின் அப்பா லாரி ஓட்டும் வேலையில் இருப்பதால் லோடு அடித்து விட்டு தான் வீட்டுக்கு வருவார்.


அன்புவை பள்ளிக்கு அழைத்து சென்ற சுவலட்சுமி வழியில் தன் பக்கத்தில் வீட்டில் உள்ள பெரியவரை கண்டு வணக்கம் ஐயா என கூற அவர் அன்பு பாப்பா,சமத்தா பள்ளிக்கூடம் போயிட்டு வா என கூறிவிட்டு அவள் தலை மீது கை வைத்து விட்டு சென்றார்.


அம்மா என அன்பு அழைக்க,என்னடா? என சுவலட்சுமி கேட்க தாத்தா என்னை தொட்டு பேசுறாரு என சொல்ல தாத்தா உன்னை பேத்தி மாதிரி நினைச்சு பேசுவாரு மா என அன்று பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தாள்.


மாலை பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு வந்த அன்புவிடம் சுவலட்சுமி நான் பக்கத்தில் இருக்க கோயில் வர‌ போயிட்டு வரேன் பத்திரமா இரு என சொல்லி கதவை உள்பக்கம் பூட்டி விட்டு சாவியை அவள் கையில் கொடுத்து விட்டு சென்றாள்.


1 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சுவலட்சுமி வீட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்து விட்டு பதறி போய் வீட்டிற்குள் சென்று பார்த்தால் எந்த தாயும் தன் மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து ஐயோ என கதறி கொண்டே மயங்கி கிடந்த மகளை மடியில் போட்டு கொண்டு "உன்னை யாரு மா இப்படி பண்ணா? உன் அப்பா வந்து கேட்ட என்ன பதில் சொல்லுவேன், கடவுளே என கதறினாள்".


அன்புவை ஆஸ்பத்திரி அழைத்து சென்ற சுவலட்சுமி மருத்துவரிடம் அழுது கொண்டே விஷயத்தை கூற டாக்டர் "நாங்க இருக்கோம்,முதல்ல நீங்க உட்காருங்க அம்மா" என கூறிவிட்டு அன்புவிற்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தனர்.


அப்பொழுது சுவலட்சுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள வசந்தி அவருக்கு போன் செய்து "லட்சுமி,ஒரு விஷயம் சொல்லனும்,உங்க பக்கத்து வீட்டு பெரியவர் இருக்காருல அவரை காணோம் அப்படினு அவங்க வீட்டில் தேடுறாங்க, அதனால் எங்க கடை கேமரால பார்க்குறப்ப அவர் உங்க வீட்டுக்குள்ள கடைசியா போயிட்டு வெளியே வந்து விறுவிறுனு நடந்து போயிட்டாரு,நான் அதை அவங்க வீட்டு ஆளுங்க கிட்ட சொல்லல" என சொல்லி முடிக்க சுவலட்சுமி அன்று காலை மகள் அவரிடம் கூறிய விஷயத்தை நினைத்து பார்த்து பொங்கி வந்த கண்ணீருடன் தலையில் அடித்து கொண்டு சரி அக்கா என போனை கட் செய்தாள்.


கணவருக்கு போன் செய்த சுவலட்சுமி அவர் எடுத்தவுடன் புள்ளைக்கிட்ட போன் கொடு அவளுக்கு புடிச்சது எதாவது வாங்கிட்டு வரனும் அப்படினு சொல்ல சுவலட்சுமி அழுது படி இருக்க,என்ன ஆச்சு? என கேட்ட கணவனிடம் சுவலட்சுமி அழுதபடி அனைத்தையும் கூற நான் உடனே வரேன் என அழுதபடி கூறி போனை கட் செய்தாள்.


அம்மா என அழைத்த டாக்டர்,பொண்ணுக்கு மயக்கம் தெளிஞ்சு இருக்கு போய் பாருங்க என கூற சுவலட்சுமி தலை குனிந்து அழுதபடி உள்ளே செல்ல உடல் நடுங்கியபடி படுத்து இருந்த அன்பு,அம்மா அழாத அம்மா என கூற சுவலட்சுமி அழுதபடி மகள் காலில் தலையை வைத்து கதறி அழுதாள்.


அடுத்த நாள் காலை,வந்த அன்புவின் அப்பா மகளை பார்க்க ஓடி வந்து அவளை பார்த்து அழுதுகொண்டே அம்மா என கூறிக்கொண்டே அவள் தலையை தட்டி கொடுக்க கையை நீட்ட அன்பு பயத்தில் தலையை நகர்த்தினாள்.


சுவலட்சுமி மற்றும் அவளது கணவன் மகள் தான் முக்கியம் என முடிவு செய்து கடினமான ஒரு முடிவை எடுத்தனர்,யார் என்ன சொன்னாலும் பராவாயில்லை என நினைத்து போலீஸ் இடம் சென்று கேமரா காட்சிகள் மற்றும் அன்பு கூறிய அனைத்தையும் கூறி எங்க மகளுக்கு நடந்த கொடுமை வேற எந்த பொண்ணுக்கும் வர கூடாது என புகார் கொடுத்தனர்.


1 மாதம் கழித்து,


அன்பு சகஜமாக பேச ஆரம்பித்தாள்,அவளின் அப்பா அம்மா அவளுக்கு கொடுத்த தைரியம்,மன உறுதி அவளை மெல்ல அந்த கொடூரத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்தது,பள்ளிக்கு மீண்டும் சென்றாள் அன்பு.


"மனித மிருகங்கள் வாழும் சமூகத்தில்,உங்கள் அருகில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறதி செய்யுங்கள்,இது போன்று சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உள்ள அவர்களுக்கு நம்பிக்கை கொடுங்கள்,உறுதுணையாக நில்லுங்கள்.


ஆண் குழந்தை,பெண் குழந்தை இரண்டு பேருக்கும் நல்லது, கெட்டது சொல்லி வளர்த்து வாருங்கள்.


பெண்களே,துணிச்சலுடன் அந்த மிருகங்களை எதிர்த்து நில்லுங்கள்".



Rate this content
Log in

Similar tamil story from Drama