Raja SaRa

Drama Tragedy Children

3.4  

Raja SaRa

Drama Tragedy Children

இருகோடுகள்

இருகோடுகள்

2 mins
448


  அத்தியாயம்-1

            எண்ண எண்ண குறையாமலிருக்கும் விண்மீன்களுக்கிடையே அழகாய் குளுமையை முழுமையாய் தந்துக்கொண்டிருக்கும் பிறைமதியின் இயற்கையான ஒளி எங்கும் வீற்றிட அதனூடே செயற்கையான மின் விளக்கின் ஒளி அமைந்து அமைந்து எரிந்ததுக்கொண்டிருக்கிறது.இயற்கை தந்த இருளின் அழகான அமைதியில் வண்டினம் காணம் பாடிக்கொண்டு செல்லும் ஒலி கேட்டிட அதை தடுக்கும் விதமாய் ராஜா லாவண்யாவை அறைந்த சத்தம் அமைந்தது.


              ராஜா படம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தர வயது இளைஞன்.எதிரிகள் அம்பினை கொண்டு துளைத்தாலும் அசராத விரிந்த மார்பினையும் ஆயிரம் யானைகள் வந்தாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் கொண்டவன்.மாநிறமானவன் ஆனாலும் மாதவம் புரிந்து நின்றாலும் கிடைக்காத அழகை கொண்டவன்.


             லாவண்யா மலரின் இதழை ஒத்த உடலைக்கொண்டவள்.முகட்டிலிருந்து குதித்தோடும் ஆற்றின் நளினங்கொண்ட ஆற்றிடைக்காரி.நிலவின் ஒளியை சூரியன் மறைப்பதுபோல் இவளின் முகவொளி அச்சூரியனையே மறைத்துவிடும்.அவ்வளவு கொள்ளையழகு.


            ராஜா அறைந்த அறையில் பூமி தன்னைத்தானே சுழல்வதுப்போல் சுழன்று விழுந்தாள் லாவண்யா.இந்த அறையில் ராஜா அறைந்த அறையின் சத்தத்தில் படுக்கறையில் தூங்கிக்கொண்டிருந்த இவர்களின் காதல் பரிசு விழித்துவிட்டாள்.புயல் வீசி ஓய்ந்த நிசப்தத்தில் வீடுயிருக்க ஓய்ந்த புயலில் காய்ந்த வயிற்றுக்கு உணவுத்தேடும் மக்களைப்போல் அழுதுக்கொண்டிருந்தாள் குழந்தை மகதி.


    அக்ஆ-அக்ஆ-அக்ஆ-அக்ஆ-அக்

    ஆஆஆஆஆ…………………………………………………………………(குழந்தை அழுகிறது)

.அதைக்கேட்டதும் விழுந்திருந்த லாவண்யா விருட்டென எழுந்துத் தட்டுத்தடுமாறி படுக்கறைச்சென்று அழுதுக்கொண்டிருந்த மகதியைத் தூக்கிவாரிக்கொண்டு வெளியில் வந்தாள்.


          வந்தவள் தனது மகிழுந்தின்(car) சாவியை எடுத்துக்கொண்டு வாசற்படியை நோக்கி நடந்தாள்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ராஜா தனது போக்கிற்கு பாய்ந்துவரும் ஆற்றை மனிதன் மடைப்போட்டு தடுப்பதுப்போல் மடையாய் நின்றான்.அதை கண்டதும்

     ஹே தள்ளு………(லாவண்யா)

     இப்போ நீ எங்க போற………………………………….(ராஜா)

     நா எங்கையோ போற

     உனக்கென்ன………………………………………………………………(லாவண்யா)

     ஹே………………………………………………………………………………………..(ராஜா)

     இப்போ தள்றியா இல்லையா………………..(லாவண்யா)

அவ்வாறு கூறி அவனை தள்ளிவிட்டு வெளியேற நினைத்தவளின் கையைப்புடித்து இழுத்தான் ராஜா.இழுத்தவனின் கையை ஒதறிவிட்டு வெளியேறிவிட்டாள்.வெளியேறியவளிடம்

      போடி போ எங்கையாவது

     செத்துப்போ………………………………………………………………………(ராஜா)

அவ்வாறு கூறி அங்கையே சரிந்து அமர்ந்துவிட்டான்.


      மரங்களின் துணையின்றி கோபுரங்களில் வாழ கற்றுக்கொண்ட பறவை ஒன்று தனது குஞ்சுடன் படுத்து இயல்பான இருளை தனது கோபத்தால் ஒலிஒளியைக் கொண்டு இயல்பற்று மாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தது,அப்பொழுது உழைத்து உழைத்து கொடுத்தாலும் போதிய ஊதியம் தராததால் உணவின்றி உயிர்விடும் சாமானியனைப் போல் பெட்ரோலின்றி வாகனம் முக்க ஆரம்பித்து நின்றுவிட்டது.

     கககக………க

     கககக……க

வண்டியை இயக்கப் பார்க்கிறாள்

     கககக……..க

     கககக……..க

இயங்கவில்லை.பின் மகதியை தூக்கிக்கொண்டு மகிழுந்திலிருந்து இறங்கி கதவை வேகமாக சாத்துகிறாள்.

    டம்……….(கதவு மூடும் சத்தம்)

பின்னர் சாவியிலுள்ள பொத்தானை அழுத்தி பூட்டுகிறாள்

    க்விக் க்விக்………………………………………………………………….(பொத்தான் அழுத்தப்பட்டது)

பின்பு தனது மகளுடன் சிறுது மயக்க நிலையில் நடந்து செல்கிறாள்.அவளுக்கெதிரே நாய் ஒன்று பார்த்துக் கொண்டே அவளைத் தாண்டிச் சென்று.திடீரென்று

    டப்ச் ப்ச்………………………………………………………………………….(ஏதோ விழுந்த சத்தம்)

    நாய் பயந்து திரும்பி பார்த்தது.அங்கே லாவண்யா மகதியுடன் மயங்கி கீழே விழுந்து இருக்கிறாள்.பயந்து ஓடிய நாய் சிறிது நேரங்கழித்து அவளின் அருகே சென்று மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தது.

    ஹுஹுஹும் ஹுஹுஹும்…………(மோப்பம்பிடிக்கிறது)


     அதன் அருகாமையிலையே ஒருவன் இருந்தான்.அவன் இல்லறம் துறந்து துறவுப்பூண்ட சித்தனைப்போல் இருந்தான்.ஆனால் என்ன அவன் அணிந்திருந்த ஆடை ஆலமரத்தின் விழுதைப்போல் ஆங்காங்கே கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன.நாயை போலவே சித்தங்கலங்கிய சித்தனாகிய பித்தனும் செய்தான்.அவ்வாறு செய்துக்கொண்டே அழுதுக்கொண்டிருந்த குழந்தையின் அருகில் வந்தவன் விருட்டென்று எழுந்தான்.அழுத குழந்தை சிரிக்க ஆரம்பித்தது

      ஆ………ம்ஹும்ஹு……………………………..(அழுகிறாள்)

      அக்க-அக்க-அக்க-அக்க-அக்க-

      அக்ங்ஞ…………………………………………………………(சிரிக்கிறாள்)


     லாவண்யாவோ மயக்க நிலையிலேயே இருந்தாள்.அவளை தூக்க யாரும் வரவில்லை இந்த சித்தனை தவிர காரணம் கெரோனா எனும் கொடியவன் உலகில் தான்மட்டும் வாழவேண்டும் பிற உயிரினங்கள் வாழத்தகுதியற்றவை என நினைக்கும் கொடியவர்களை கொன்று குவிப்பதால் அரசு பிறப்பித்த ஊரடங்கு சட்டத்தால்.இதையெல்லாம் அங்கே பறந்து கொண்டிருந்த வௌவால் பார்த்துக் கொண்டிருந்தது.ஆனால் அங்கே சித்தனும் இல்லை மகதியும் இல்லை. அப்பொழுது காவல் துறையின் வாகனம் மட்டும் வந்து நின்றது அதிலிருந்து இருகாவலர்கள் லாவண்யாவை எழுப்பி பார்த்துவிட்டு மருத்துவ அவசர ஊர்திக்கு(Ambulance அழைப்புவிடுத்தனர். சில நிமிடங்கழித்து அவ்வாகனம் வரும் சத்தம் கேட்க இருவரும் திரும்பி பார்த்தனர்

    ஓய்ஓய்ஓய்ஓய்ஓய்ஓய்ஓய்……………………(Ambulance sound)


அவ்வாகனம் ஓடியது போல் அந்நாளின் மணித்துளிகளும் கடந்துச் சென்றது.



Rate this content
Log in

Similar tamil story from Drama