CA Manimaran Kathiresan

Drama

4.5  

CA Manimaran Kathiresan

Drama

காதல் போயின் வாழ்தல்

காதல் போயின் வாழ்தல்

3 mins
586


வாசல் கதவு தட்டும் சத்தம் யாரென்று பார்த்தால் ஒருகணம் அதிர்ச்சியில் உரைந்துபோனால். வந்தவனோ அவளின் முதல் காதலன்.

அதிர்ந்து உரைந்துபோனவளின் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் திக்குமுக்காடிப் போய் நிற்கின்றால்.


இப்பொழுது அவளுடைய வீட்டிலும் யார் இல்லை. அவள் மனதில் படித்த நாளிதல் சம்பவங்கள் வந்து சென்றன. அவளுக்கு அச்சம்பவங்கள் மேலும் மேலும் பயத்தை உணர்த்தியது. நாளிதளில் நேற்று கூட முன்னால் காதலன் ஒருவன் முன்னால் காதலியின் வீடுதேடி வந்து கொலை செய்த சம்பவம்.


அவளிடம் எழும் கேள்விக்குப் பதிலும் இல்லை அதேநேரம் அவனிடம் பேசும் தைரியமும் இல்லை. என்ன செய்வதறியாதவளாய் நின்று கொண்டு பத்து நிமிடங்கள் ஆழ்ந்த யோசனையில் அதுவும் அவனை வாசலிலேயே நிற்கவைத்து விட்டு. அவனும் அவளைப் பார்த்துவிட்டு பேசவார்த்தைகள் இல்லாமல் தலைகுனிந்து நின்றான்.


அவளுக்குள் அவளுடைய மனதில் எழுந்த ஐயத்திற்கு பதில் தேடி மனமோ ஊசலாடுகிறது.

அவளும் ஏனோ ஒரு குழப்பத்துடனே வீட்டின் கதவை அடைத்துவிட்டாள் அவனுடைய வருகையை விரும்பாதவலாய்.


அவனோ இரண்டு மூன்று முறை கூப்பிட்டும் அவளிடமிருந்து எந்தவொரு பதிலில்லை. அவ்வீட்டு வாசல் படியிலே உட்கார்ந்து அவளை பிரிந்த தருணத்தை நினைவு கூர்ந்தான்.

சிவா தன்னுடைய ஒருதலைக் காதலி கீர்த்தியை மறுபடியும் தன்னுடைய கல்லூரியிலேயே பார்த்தான். ஆம் அவளும் அக்கல்லூரியிலேயே பொறியியல் படிப்பில் சேர்ந்தாள்.


அச்சம்பவத்தை கண்ட அவனுடைய மனமோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. இனி இருக்கும் இந்த மூன்று வருடத்திலாவது தன் காதலை வெளிப்படுத்திடலாம் என்று உறுதி கொண்டான். அவளுக்கும் அவனுக்குமான நட்பு பள்ளிக் காலத்திலிருந்து தொடர்வதால் அவர்களுக்கு சந்திப்பு என்பது புதியதல்ல.


இருப்பினும் சிவாவுக்கு அவளிடம் பேசுவதற்கு பல போரட்டங்கள் காரணம் அவனுக்கு அவனே எடுத்துக் கொண்ட உறுதியின் வெளிப்பாடு. அவளிடம் பேசுவதையே பல போரட்டங்கள் போல் இரண்டு வருடங்கள் சென்றது.


அவனுடைய இறுதி ஆண்டிலாவது தன்னுடைய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆகவே அவனுடைய இறுதியாண்டில் அவனுக்கு நடந்த வழியனுப்பு விழாவில் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தினான்.


அவளோ அவனிடமிருந்து வந்த அப்படியொரு வார்த்தையை எதிர்பாராதவளாய் , என்ன செய்வதென்று அரியாதவளாய் அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றாள். அவள் அவனை தன்னுடைய சகோதரனாய் பழகிய பழக்கம் எவ்வாறு அவனுக்கு காதல் தோற்றுவிக்க காரணமானது என்பதை நினைத்து குழம்பி சென்றாள். அவள் அவளுடைய பழக்கத்தை என்னி கவலை கொண்டாள்.


இறுதிநாளான கல்லூரித் தினத்தில் அவளைக் கண்டதும் அவளிடமிருந்து அவளுடைய பதிலுக்கு காத்திருந்தான். அவளிடமிருந்து வந்த பதிலோ அவனைத் தூக்கிவாரிப் போட்டது.

அவள் நான் உங்களிடம் என்னுடைய சகோதரனைப் போலவே பழகினேன்.


உங்களை கடந்த பத்து வருடங்களாகத் தெரியும். இதுவரை உங்களிடம் என்னுடைய சகோதரத்துவத்தையே வெளிப்படுத்தினேன் தவிர அவ்வன்பு உங்களை தவறாக நினைக்க வைத்துவிட்டதென்ற கவலை ஆட்கொண்டது. என்தவறுக்கு மன்னியுங்கள். நான் உங்களை மட்டுமல்ல யாரையும் காதலிக்கும் நிலையில் இல்லை என்று கூறி விடைபெற்றாள்.

ஆம் அவ்வாறு சென்றபிறகு கடந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு இருவரும் இன்றுதான் சந்திக்கிறார்கள்.


வீட்டிற்குள் நுழைந்த கீர்திதியோ பலவித குழப்பங்களை மனதில் வைத்துக்கொண்டு அவளுடைய கடந்த காலத்தை சிந்திக்கலானாள் ஆம் அவளுக்கும் சிவாவைத் தெரியும். இருவரும் பள்ளி படித்த காலத்திலிருந்தே நண்பர்கள். இருவருக்குமான நட்பு நட்பெனும் வட்டத்தைத் தாண்டி சகோதரப் பாசம் கொண்டது.


அப்படிப்பட்ட ஒரு மதிப்புமிக்க பாசவட்டத்தில் சிவாவுடைய காதல்மொழி பிடிக்கவில்லை. அதன்பின் அவளோ அவனிடம் பேசுவதையே நிறுத்துவிட்டாள். அவளும் தன் கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு வேலைக்குச் சென்றாள்.


அவளுடைய பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் முடித்தாள். இதுவரை சேலத்தில் வசித்து வந்தவள் தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சென்னையில் கணவனுடன் குடிகொண்டாள். சென்னை வந்து இரண்டு வருடங்கள் ஆயிற்று.


திருமணம் ஆனதும் சென்னைக்கு வந்ததும் சிவாவுக்குத் தெரியாது ஏனெனில் அவனும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக பெங்களூர் சென்றான். அவளும் அவனை திருமணத்திற்கு அழைக்க விரும்பவில்லை. இப்படியிருக்க எப்படி அவனுக்கு தெரிய வாய்ப்புண்டு என்பதில் மிகப்பெரிய குழப்பம்.


தன்மனதைத் தேற்றிக் கொண்டவளாய், தான் எந்த தவறையும் செய்யவில்லை என்பதை உணர்ந்தவளாய் எழுந்து சிவாவை வீட்டிற்கு அழைக்க சென்றாள்.

சிவாண்ணா வீட்டுக்கு வாங்க என்றவள். அவனும் வீட்டு வாசலில் இருந்து எழுந்து வீட்டிற்கு வந்தான்.


வந்ததும் அவளைப் பற்றி எதுவும் விசாரிக்காமல் உங்கள் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி பழுதாகிவிட்டது என்று மனு கொடுத்திருக்கிறீர்கள் அதனை சரிசெய்யவை இங்கு வந்தேன் என்றவன். அவளுக்கு ஒருகணம் தூக்கிவாரிப் போட்டது.


ஒருவரைப் பற்றி தவறாக என்னிவிட்டோமே என்று வருந்தினாள். தன்னுடைய அந்த குழப்பத்தை மறந்து மீண்டும் தன்னுடைய சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தினாள் சிவாவிடம்.


சிவாவும் தன்னுடைய தவறை உணர்ந்தவன் அவளிடம் தங்கை என்றே உறவு கொண்டாடினான் சிவாவும் கீர்த்தியும் நல்ல குடும்ப நண்பர்களாகவே குடும்ப சகிதமாய் தங்கள் சகோதர உறவை சென்னையில் மீட்டனர்.



Rate this content
Log in

Similar tamil story from Drama