Ponnambapalam Kulendiren

Inspirational

4  

Ponnambapalam Kulendiren

Inspirational

குறளும் கதையும் 1 - நேர்முகப் பரீட்சை

குறளும் கதையும் 1 - நேர்முகப் பரீட்சை

3 mins
214


குறளும் கதையும் 1      


 “அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

  இழுக்கா இயன்றது அறம்”     (குறள் எண்:35)

 

“என்ன மோகன் உனக்கு இன்னும் ஒரு கிழமையில் எங்கள் பகுதியின் மனேஜர் ஈஸ்வரன் சென்ற மாதம் ஓய்வு பெற்றதால் அந்த இடத்துக்கு நேர்முகப் பரீட்சை இருக்கிறது அல்லவா?” மோகனுடன் வேலை செய்யும் சிவராமன் கேட்டான் 

 

 “ஆமாம் சிவராமா இந்த நேர்முக பரீடசையில் நான் வெற்றி பெற்று எனக்கு நிச்சயம் மனேஜர் பதவி கிடைத்து விடும்.”

 

“ அதெப்படி நீ சொல்ல முடியும் ? உனக்கு ராகவனிடம் இருந்து பலத்த போட்டி இருக்கிறது

 இருக்கிறதே. அவன் உன்னைவிட கூடிய பட்டங்கள் பெற்றவன் .அனுபவமுள்ளவான் 

அவனுடைய திறமையைப் பற்றி மேல் அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரியும்.”

 

“ தெரிந்து விட்டுப் போகட்டுமே அவன் என்னிலும் பார்க்க பண வசதி குறைந்தவன் . அவனுக்கு அரசியல்வாதிகளுடன் என்னை போல் தொடர்பு இல்லை . அவனால் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன் படுத்தி அதிகாரிகளை தீர்ப்பை முடியாது சிவராமா. அதோடு நான் இந்த நிறுவனத்தில்  வேலைக்கு சசேர்ந்து இரு மாதங்களுக்கு பின் வேலைக்கு சேர்ந்தவன் ராகவன் என்பது உனக்கும் தெரியும் . நான் அவனுக்கு சீனியர் .”

 

“ நீ என்ன சொல்லுகிறாய் நேர்முக பரீட்சையில் வெற்றி பெற அதிகாரிகளுக்கு பணம் கொடுக்ப் போகிறாயா ? அல்லது உனது அரசியல் செல்வாக்கை பயன் படுத்தப் போகிறாயா?

 

 “நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும் பதவி உயர்வு பெற? உனக்கு தெரியும் என்னுடைய தாய் மாமன் வணிகத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்று , அவர் ஒரு வார்த்தை நிறுவன உயர் அதிகாரிகளுக்கு சொன்னால் அது போதும் நான் இந்த பதவியை பெற்றுவி டுவேன் . இந்த நேர்காணல் பரீட் சை எல்லாம் சும்மா சம்பிரதாயதுக்கு நடப்பவை .

 

“ நீ உண்மையை சொல்லுகிறாயா உன் மாமா சொல்லி நீ இந்த நேர்காணலில் வெற்றி பெருவாயா ? இது நடக்குமா?”

 

 “நடக்கப் போவதை இருந்து பாரேன். அவன் ராகவன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவள்

 அதிகம் பேச மாட்டான். அவன் என்னை விட புத்திசாலியாகவும் படித்தவனாகவும் இருக்கலாம் எனக்கு அவனைக் கண்டால் பிடிக்காது. அவன் ஒரு சிடு மூஞ்சி அவன் அதிகம் என்னுடன் பேசுவது குறைவு. ஏன் உன்னோடு கூட அவன் பேசுவது குறைவு”. 

 

” ராகவன் அமைதியானவன் . வசதி குறைந்தவன் தான் ,என்றாலும் அவன் நல்லவன் நான்  வேலையில் உதவி கேட்ட போது எல்லாம் எனக்கு அவன் உதவி செய்து இருக்ரகிறான்.  உண்மையைச் சொல் மோகன் உனக்கு அவனின் திறமை மேல் பொறாமையா?”

 

“ அப்படித்தான் என்று எடுத்துக் கொள்ளேன் .அவன் என் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதை நான் விரும்பவில்லை இந்த மனேஜர் பதவி எனக்கு கிடைத்தே ஆக வேண்டும் அதற்கு என் மாமா கூட நான் ஏற்கனவே பேசி விட்டேன்.”

 

 “அவர் என்ன சொன்னார்?”

 

 “அதை அவர் தான் கவனிப்பதாக   சொல்லி என்னிடம் நேர்க்காணல் பரீட்சை விப ரம் கேட்டார் . கொடுத்தேன். அவர் நிச்சயம் இந்த நிறுவனத்தின் உரிமையாளுருடன் பேசியிருப்பார்.”

 

“நீ போகும் வழி சரியில்லை மோகன் இப்படி குறுக்கு வழியில் போய் நீ ஒரு நாளும் வெற்றி பெற முடியாது,”

 

“ இங்கே பார் சிவராமன் இது எனக்கு ஒரு சவால் . நான் இந்த நேர்முகப் பரீட் சையில் ராகவனை வெற்றி பெற்று. அவனுக்கு நான் மனேஜராக வருவேன் அவன் எனக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் அதன்பின் நடப்பதை இருந்து பார் .”

 

 “நான் சொல்லிவிட்டேன் மோகன் உனக்கு ரகவனின் திறமை  மேல் உள்ள பொறாமைக்கு ஒரு எல்லை உண் டு .எதோ கடவுள் விட்ட வழி.”

 

மோகன் ராகவனுடன் பேசுவது மிக குறைவு . ராகவன் மோகனுடன் பேச முயற்சித்தாலும் அவனை மோகன் உதாசீனப்படுத்தி விட்டு போய் விடுவான் . 

 சில சமயம் தனக்கு அறிக்கைகள் எழுத ராகவன் உதவி இருக்கிறான் என்பதை மோகன் மறந்து 

விட்டான் .நன்றி மறந்தவன் மோகன் .

 

 போட்டி என்று வரும்போது ராகவன் மேல் மோகனுக்கு இருந்த பொறாமை ,தான் வேலை செய்யும் பகுதிக்கு மனேஜராக வந்து ராகவனை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் மோகனுக்குள் இருந்தது


*****

மனேஜர் பதவிக்கான நேர்காணல் முடிந்து அடுத்த நாள் மோகனின் நண்பன் சிவராமன்

 

 “என்ன மோகன் எப்படி நீ நேர்காணல் இருந்தது ?” என்ற கேட்டான் .

 

“ குழுவில் இருந்த டைரக்டர்கள் மூவரும்  கேட்ட கேள்விகளுக்கு எல்லாத்துக்கும் பதில் சொன்னேன். நேர்காணல் குழுவில் இருந்த தலைவர் எனக்கும் வணிகத் துறை அமைச்சருக்கும் என்ன உறவு என்று கேட்டார் .”

 

“ நீ என்ன பதில் சொன்னாய.?”

 

 

“ நான் சொன்னேன் அவர் என்னுடைய அம்மாவின் அண்ணன் என்று .”

 

“ அதற்கு அவர் என்ன சொன்னார்?” 

“ நான் அமைச்சருடன் பேசுவேனா என்று அவர் கேட்டார் .”

“ அதுக்கு நீ என்ன சொன்னாய் ?”

“ அவர் என் அம்மாவை சந்திக்க வரும்போது பேசுவன் என்றேன் .

“ அவர் அதுக்கு என்ன சொன்னார்?”

“ அவர் ஒன்றும் பேசவில்லை . எதையோ அவர் குறித்துக் கொண்டார் . அதன் பின் அவர் கேட்டார் எங்கள் நிறுவனத்தை பற்றி அமைச்சர் ஏதும் கேட்டாரா என்று நன் உண்மையை சொல்லித்தானே ஆகவேண்டும். அதனால் ஆம் என்றேன் ”

 அவர் கேட்ட கேள்விகள் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது அதிலிருந்து எனக்கு புரிந்தது என்னுடைய மாமா அவர்களுடன் பேசி என்னை தேர்ந்தெடுக்கும்படி சொல்லியிருப்பார் என்று

நீ  என்ன நினைகிறாய் சிவராமா ?”

“இருக்கலாம் மோகன், இல்லாவிட்டால் அவர்கள் உன்னிடம் உன் மாமாவை பற்றி ஏன் கேள்வி கேட்பான்?”

 

 “சிவராமன் இந்த உத்தியோகம் பதவி உயர்வு எனக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது நேர்காணல் முடிந்த அன்று இரவு நான் என் மாமாவுடன் தொடர்பு கொண்டு கேட்டேன் அவர் சொன்னார் நீ ஒன்றுக்கும் யோசிக்காதே நான் அவர்களுடன் பேசிவிட்டேன் உனக்குத்தான் அந்த பதவி என்று சொல்லிவிட்டார் .நான் அந்த பதவிக்கு வந்த பின் அவன் ராகவனை நான் எப்படி நடத்துறன் என்று நீ இருந்து பாரேன்”, என்றான் மோகன்

 

நேர்காணல் நடந்து முடிந்து ஒரு கிழமையில் அ மோகனின் மாமாவின் அமைச்சர் பதவி ஊலலழல் குற்றச் சாட்டினால் பறி போயிற்று , அதோடு அவரை போலீஸ்  விசாரணைக்கு கைது  செய்தது .

 

 இது நடக்கும் என்று மோகன் எதிர்பார்க்கவில்லை .ஏற்கனவே நிறுவன அதிகாரிகளுடன் மாமா பேசியதால் தனக்கு பதவி ஊயரவு நிட்சயம் என்ற நம்பிக்கையுடன் மோகன் இருந்தான் 

 

 ஒரு நாள் அலுவலகத்துக்கு மோகன் சென்றபோது எல்லோரும் ராகவனை சூழ்ந்து கொண்டு அவனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்

 

 சிவராமன் நேரடியாக வந்து மோகனிடம் சொன்னான் “ மோகன் உனக்கு தெரியுமா ராகவனுக்கு மனேஜர் பதவி உயர்வு கிடைத்து விட்டது அவனுக்கு கடிதமும் கொடுத்துவிட்டார்கள் நாளை முதல் அவன் தான் எங்கள் பகுதிக்கு மனேஜர். நாங்கள் அவருடைய கட்டளைப்படி தான் இனி நடக்க வேண்டும் .

 

 மோகன் சிவராமன் சொன்னதை நம்பவில்லை நீ என்ன சொல்லுகிறாய் சிவராமா. என் மாமா அவர்களிடம் ஏற்கெனவே பேசிவிட்டார்

 

 இருக்கலாம் அவர் இப்போது அமைச்சர் இல்லை என்பது உனக்கு தெரியும் தானே , அதோடு அவர் ஊழல் செய்த்துக்கு கைது  செய்யப் பட்டிருகிறார் இந்த நிறுவனம் அவருடைய வேண்டுகோளை வேண்டுகோளின் படி நடக்க வேண்டிய அவசியமில்லை அதுவுமன்றி

 உனக்கு தெரியும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அரசியல் தொடர்பை விரும்பாதவர் . அதோடு அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளவர்களை அவதானித்துக் கொண்டிருக்கிறார் ,அதனால்தான் அவர்கள் அந்த நேர்முகப் பரீட்சையில் உன்னிடம் அவ்வளவு கேள்விகள் கேட்டு உன் அரசியல் தொடர்பை அறிந்தார்கள்” .

 

 சிவராமன் சொன்னது மோகனுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தது தன் ஆசனத்தில் பேசாமல் அமர்ந்தான்.சற்று நேரம் கழித்து ராகவன் அவனிடம் வந்தான்

 

 “மோகன் எனக்கு மேனேஜர் பதவி கிடைத்ததை பற்றி நீ அறிந்திருப்பாய் அதனால் உன்னுடைய ஒத்துழைப்பையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் எங்களுக்கு இடையே ஏதாவது கருத்து வேற்றுமை இருந்தால் அதை மறந்து விடு நாங்கள் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் “என்றான்

 

 ரராகவன் சொன்ன வார்த்ததை களை மோகன் எதிர்பார்க்கவில்லை அவ்வளவுக்கு பொறாமை ராகவன் மேல் தான் வைத்திருந்தும் அவன் தன் மேல் நட்பு வைத்திருக்கிறானே என்று நினைத்து மனம் வருந்தினான்.

 

“ராகவன் உனக்கு மனேஜர்பதவி கிடைத்ததையிட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி . உனக்கு கீழ் வேலை செய்வதில் எனக்கு சந்தோசம்..” ராகவனுக்கு கைகொடுத்து மோகன் சொன்னான் , அவன் மனதுக்குள் ராகவன் மீது இருந்த பொறாமை இன்னும் முற்றாக போகவில்லை . 

 

*****

 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational