Arul Prakash

Drama

4  

Arul Prakash

Drama

குடும்பத்தில் நாலு சகுனிகள் 06

குடும்பத்தில் நாலு சகுனிகள் 06

5 mins
387


ரகு to ரகு அம்மா : ஏன் மா விருத திருப்பி கொடுத்துட்டு வந்த.

ரகு அம்மா : ஏன் இத்தனை வருஷம் என்னை தனியா விட்டுட்டு, யாரும் மூஞ்சு கொடுத்து கூட பேசமாட்டாங்க, இப்ப விருது கொடுத்தா பல்ல இளிச்சிட்டு வாங்குவன்னு நினைச்சியா.

ரகு : ஒரு வேல கெழவி திருந்தி இருப்பாளோன்னு நினைச்சேன்.

ரகு அம்மா : அதெல்லாம் திருந்தி இருக்கமாட்டா, அடுத்த எதாவது கஷ்டமான வேலை கொடுக்கரத்துக்கு, இப்படி ஒரு தந்தரத்த பண்ணுவா கிழவி.

ரகு : அதுவும் சரி தான், கெழவி உடும்பு முடியாத காலத்தைலயும், சரியா யோசிக்காது.

ரகு அம்மா : அது மட்டம் இல்லடா, இந்த வீடு என்னை எப்போ ஒதுக்கி வச்சுதோ, நானும் அவங்கள ஒதுக்கி வைக்க ஆரமிச்சிட்டேன்.

ரகு : சரியான விஷயம் தான் நீ பண்ணது.இப்படி ஒரு குடிக்கார மனுஷன உனக்கு கட்டி வச்சதுக்கு அவங்க தான் வெட்க படனும்.

ரகு அம்மா : அவர பத்தி அப்பிடி பேசாதனு ஏற்கனவே சொல்லி இருக்கேன்.

ரகு : சரி அவரு ஏன் அப்பிடி இருக்காருன்னு, அவரு கிட்ட கேட்க சொன்னியே.

ரகு அம்மா : ஆமா கேளு. கேட்டு தெரிஞ்சிக்கோ.

ரகு : அவரு என் கிட்ட பேசுவாரா இத பத்தி.

ரகு அம்மா : அவரு உன் அப்பா தான தைரியமா கேளு.

ரகு அவன் அப்பா கிட்ட பேச போறான்.

ரகு to ரகு அப்பா : அப்பா.

ரகு அப்பா : சொல்லு டா.

ரகு : இப்பவும் குடிச்சி இருக்கியா.

ரகு அப்பா : நான் எப்பவும் குடிச்சு இருப்பேன். ஹா ஹா ஹா.

ரகு : அப்பா என்ன மன்னிச்சிக்கோ.

ரகு அப்பா : எதுக்கு டா.

ரகு ஒரு குடம் தண்ணி எடுத்து, அவன் அப்பா தலைல ஊத்துறான். ரகு அம்மா சிரிக்கிறாங்க.

ரகு அப்பா : டேய் ஏன் டா இப்படி பண்ண.

ரகு : உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். அதனால தான் போதைய தெளிய வச்சேன்

ரகு அப்பா : என்ன பேசணும்.

ரகு : நீ ஏன் இப்படி குடிச்சிட்டே இருக்கணு எனக்கு தெரியணம்.

ரகு அப்பா : எல்லாத்துக்கும் இந்த வீடு தான் காரணம்.

ரகு : நீ லவ் பண்ண பொண்ண, உங்க வீட்ல கட்டி தரளயா.

ரகு அப்பா : நான் லவ் பண்ண விஷயத்தை அழிச்சிட்டாங்க.

ரகு : கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும்.

ரகு அப்பா : நான் சின்ன வயசுல, வீட்டுலயே ரொம்ப கலகலன்னு இருக்குற ஆளு, நல்லா படிச்சேன், வீட்லயே விவசாயம் பத்தி அதிகம் தெரிஞ்சவன் நான் தான். எனக்கு ஒரு திறமை இருந்தது, நான் நல்லா கதை எழுதுவேன்.நான் எழுதுன கதை நிறைய நாளிதழ்கள்ல வந்து இருக்கு. ஊரு full ah காட்டுவேன் என் கதை நாளிதழ்ல வந்தா, எங்க பெரிய அண்ணன் கிட்டவும் காட்டுவேன். அந்த நாளிதழ்ல என் கிட்ட வாங்கிக்குவான், அவன் நண்பர்கள் கிட்ட காற்றதுக்கு. அப்போ நான் ஒரு 200 நாவல் எழுதி வச்சு இருந்தேன். அத ஒரு பெரிய பணக்காரர் பல லட்சம் குடுத்து வாங்கிக்கிறேன்னு சொன்னாரு. நான் சந்தோஷத்துல ஊரு full ah சொன்னேன், என் பெரிய அண்ணன் கிட்டயும் சொன்னேன் நான் எல்லா கதைகளையும் நம்ம தோட்டத்துல இருந்த குடிசை கொட்டால வச்சி இருந்தேன், அத ஒருத்தன் எரிச்சிட்டான். எரிச்சவன் யாரு தெரியுமா.

ரகு : யாரு பா

ரகு அப்பா : உன் பெரிய பெரியப்பன், என் பெரிய அண்ணன். அவனுக்கு அவளோ வயித்தெரிச்சல் இருந்து இருக்குனு அப்போ தான் தெரியும். ஆன கிழவி அவன் தான் என் கதைய எரிச்சான்னு நம்பள.

ரகு : சரி பா. நீங்க அழாதீங்க.

ரகு அப்பா : உங்க சின்ன அத்தை தான், அவன் அந்த கதைகள எரிச்சத பாத்தது. அவ அதுல இருந்து வீட்ல யாருகிட்டயும் பேசுறதே நிரத்திட்டா. அவ கிழவி கிட்ட , எங்க அண்ணன்ன பத்தி தப்பா சொன்னதால ஒரு அரை தான் கிடைச்சித்து எங்க அம்மா கிட்ட. அப்போ அந்த கதையாள எனக்கு காசு கிடைச்சு இருந்தா நான் இப்போ பெரிய பண்ணக்காரனா இருந்து இருப்பேன். இப்போ பெரிய குடிகாரனா இருக்கேன்.

ரகு : உன்ன குடியில இருந்து, வெளிய கொண்டுவர டிரீட்மென்ட் பண்ண காசு கேட்டோம், தர முடியாதுனு சொல்லிட்டாரு.

இன்னும் அவருக்கு வயித்தெரிச்சல் இருக்கு உன் மேல.

ரகு அப்பா : அவன் நாசமா தான் போவான் விடு.

ரகு : நான் கேள்வி கேட்கவா அவர.

ரகு அப்பா : வேணாம் விடு, அவன் ஒரு மோசமானவன்.

கிழவி two பாத்ரூம் போனா சுத்த படுத்த ஒரு ஆளு போட்டு இருந்தாங்க, அவ சில நாளா இந்த வேலைக்கு வந்துக்குட்டு இருக்கா. அவங்க பேரு சகுந்தலா

சகுந்தலா to ஆதித்யா அப்பா : ஐயா.

ஆதித்யா அப்பா : சொல்லுமா.

சகுந்தலா : எனக்கு ஒரு 5000 காசு வேணும். அவசரம்.

ஆதித்யா அப்பா : உனக்கு மாசத்துக்கு சம்பளம் பேசி இருக்கோம், இதுல கேட்ட நேரம் எல்லாம் காசு தர முடியாது போமா.

சகுந்தலா சோகமா வீட்டுக்கு போயிடுறா, அவ போன நேரம் கெழவி வீட்ல டிவி மேல வச்ச ஒரு தங்க மோதிரத்த காணும்.

சகுந்தலாவ ஒரு டிரஸ் கடைல ,கெழவி பொண்ணுங்களோட பொண்ணு, கீதாவும், விஜயாவும் பாக்குறாங்க.

கீதா to சகுந்தலா : நீங்க எப்படி இங்க.

சகுந்தலா : டிரஸ் எடுக்க தான் மா.

கீதா : ஆமா வீட்ல அவசரமா 5000 ரூபா வேணும் கேட்டிங்க இப்போ எப்படி 20,000 ரூபாக்கு டிரஸ் எடுத்து இருக்கீங்க.

சகுந்தலா : அது வந்து.

கீதா : உண்மைய சொல்லுங்க.

சகுந்தலா : அது எப்படி மா உன்கிட்ட சொல்றது.

கீதா : ஓ இப்போ தான் ஞாபகம் வருது, வீட்ல ஒரு தங்க மோதிரத்தை காணும் அத நீங்க தான் எடுத்தீங்களா.

சகுந்தலா : நான் இல்ல மா அது. எப்படி காசு கிடைச்சுதுனு சொல்றேன்

கீதா : சொல்லுங்க.

சகுந்தலா : எங்க வீட்டுக்கு ஒரு நாலு பேரு வந்தாங்க.

கீதா : யாரு அவங்க

சகுந்தலா : ஒருத்தர் ஒருத்தரா சொல்றேன்.

முதல வந்தது ஆதித்யா.

பிளாஷ் பேக் (முன்பு நடந்தது).

சகுந்தலா : வா பா நீ என்ன இந்த பக்கம்.

ஆதித்யா : உங்கள பாக்க தான்.

சகுந்தலா : சொல்லு பா.

ஆதித்யா : உங்களுக்கு பணம் கஷ்டம் இருக்கும்னு உங்க வீட்ட பாத்தாவே தெரியுது.

சகுந்தலா : என்ன பா பண்றது.

ஆதித்யா : இதாங்க அக்கா பணம்.

சகுந்தலா : எதுக்கு தம்பி.

ஆதித்யா : நீங்க ரெண்டு நாள் வேலைக்கு வரலனா நல்லா இருக்கும்.

சகுந்தலா : எதுக்கு பா.

ஆதித்யா : எதுக்குனு கேட்காம நீங்க இத பண்ணனும்.

சகுந்தலா : சரி பா நான் ரெண்டு நாள் வேலைக்கு வரல.

ஆதித்யா : தேங்க்ஸ் கா.

அடுத்தது வீட்டுக்கு வந்தது அசோக்.

சகுந்தலா : வாங்க தம்பி.

அசோக் : உங்க வீட்டு கிட்ட தான் சின்ன வயசுல விளையாடுவோம்,ஞாபகம் இருக்கு.

சகுந்தலா : ஞாபகம் இருக்கு, என்ன விஷயமா வந்த.

அசோக் : நீங்க கஷ்டத்தைல இருக்கீங்க போல, இதாங்க காசு.

சகுந்தலா : நான் என்ன பண்ணனும்னு சேத்து சொல்லிடுபா.

அசோக் : ரெண்டு நாள் வீட்டுக்கு வேலைக்கு வராதீங்க.

சகுந்தலா : சரி பா.

அடுத்து வந்தது ரகு.

ரகு வந்து அதே வசனத்தை சொன்னான்.

அடுத்த வந்தது விசு.

சகுந்தலா : நீயுமா.

விசு : நீயுமா ஏன் சொன்னிங்க.

சகுந்தலா : அது வந்து.

விசு : சொல்லுங்க அக்கா, நீயுமானு நீங்க சொன்னிங்க, அப்போ முன்னாடி யாரோ வந்து இருக்காங்க.

சகுந்தலா : ஆதித்யா, அசோக், ரகு தனி தனியா வந்து, ரெண்டு நாள் வீட்டுக்கு வராதனு சொல்லிட்டு காசு கொடுத்துட்டு போனாங்க.

விசு : சரி தேங்க்ஸ் கா, நான் கிளம்புறேன்.

சகுந்தலா : நீ காசு தரலயா பா.

விசு : அது தான் மூணு பேரு தந்துட்டு போய் இருக்காங்களே.

சகுந்தலா : ஆன உனக்கு அதிகமான தகவல் சொல்லி இருக்கேன்.

விசு : சரி இதா.

பிளாஷ் பேக் முடிந்தது (இன்றைய நாள் )

கீதா to சகுந்தலா : ஏன் அக்கா எல்லாரும் உங்கள வீட்டுக்கு வர வேணாம்னு சொன்னாங்க.

சகுந்தலா : அது தெரியலமா. நான் கிளம்புறேன்.

இப்போ ஆதித்யா, அசோக், ரகு, விசு நாலு பேரும் அவங்க தோட்டத்துல மீட் பன்றாங்க.

ஆதித்யா to விசு : எதுக்கு டா எங்கள கூப்பிட.

விசு : நான் கேட்குற கேள்விக்கு, எல்லாரும் உண்மைய சொல்லிடனும்.

ஆதித்யா : சொல்லு டா.

விசு : எல்லாரும் எதுக்கு சகுந்தலாவ வேலைக்கு வரவேணான்னு சொன்னீங்க.

எல்லாரும் மூஞ்ச மூஞ்ச பாத்துக்கிறாங்க

ஆதித்யா : எல்லாரும் சொன்னீங்களா.

விசு : ஆமா.

ஆதித்யா : நான் ஒத்துக்கிறேன் பா, நான் குடும்பத்தை பிரிக்க தான் பண்ணேன். சகுந்தலா வரலைனா, பாட்டி கக்கூஸ யார் கிளீன் பண்றதுனு ஒரு சண்டை வரும் நினைச்சேன், அதுக்கு தான் பண்ணேன்

அசோக் : நானும் அதுக்கு தான் பண்ணேன்.

ரகு : நானும் குடும்பத்தை பிரிக்க தான் பண்ணேன்.

விசு : நானும் அதுக்கு தான் பண்ணேன்.

எல்லாரும் கட்டி புடிச்சிக்கிறாங்க.

விசு : சரி ஆதித்யா நீ குடும்பத்தை பிரிச்சு என்ன பண்ண போற.

ஆதித்யா : லவ் ஒத்தக்கணும், வீட்ல எல்லாரும் ஒத்துக்க மாட்டாங்க. தனியா போய்ட்டா அம்மா அப்பா மட்டும் ஒத்துக்க வச்சிடலாம்.

விசு : ஓகே. அசோக் நீ.

அசோக் : பிஸ்னஸ் பண்ணனும், சொத்து பிரிச்சா காசு வரும்ல அதான்.

விசு : ரகுவும் நானும் வீட்ல மரியாதை கிடைக்கல, சொத்து வாங்கிட்டு தனியா போறது பிளான்.

ஆதித்யா : இதுல என்னனா எல்லாரும் ஒரே மாதிரி சகுந்தலா வச்சு பிளான் பண்ணோம்ல அது தான் சிறப்பு.

கீதாவும் விஜயாவும் இவங்க நாலு பேரு பேசுனத கேட்டு, அவங்க கிட்ட வராங்க.

கீதா : டேய் உங்களுக்கு வெட்கமா இல்ல குடும்பத்தை பிரிக்க பாக்குறீங்களே.

ஆதித்யா : கீதா வெளிய சொல்லிடாத.

கீதா : சொல்லமாட்டேன் டா ஆன நீங்க எப்படி குடும்பத்தை பிரிக்கிறிங்கனு பார்ப்போம்.

கீதாவும் விஜயாவும் கோபமா அங்க இருந்து போய்ட்டாங்க.

கீதா, சகுந்தலாவுக்கு அதிகமா காசு கொடுத்து, வேலைக்கு வர சொல்றா.

அடுத்த நாள்.

வீட்ல சகுந்தலாவுக்கு எல்லாரும் வெயிட் பன்றாங்க, கிழவிய சுத்த படுத்த. கீதா டைம் பாத்து, சகுந்தலா வராதது நினைச்சு டென்ஷன் ஆகுறா.

ஆதித்யா to கீதா : நேத்து காசு தந்து சகுந்தலாவ வர சொன்னல, நாங்க நைட் 11 மணிக்கு போய் அத விட அதிகமா காசு கொடுத்து வர வேணான்னு சொல்லிட்டோம். இப்போ பாரு நாங்க எப்படி சண்டை மூட்டி விடுறோம்னு.

ஆதித்யா : எல்லா பொம்பளைங்கலும் வாங்க, பேரு எழுதி குலுக்கி போடுறோம், யாரு பேரு வருதோ அவங்க, போய் பாட்டிய சுத்தம் பண்ணனும்.

ஆதித்யா அம்மா : நான் பண்ண மாட்டேன்.

விசு அம்மா : அது எப்படி பண்ணாம போவீங்க.

கீதா : யாரும் சண்டை போடாதீங்க. நானே பாட்டிய சுத்த படுத்துறேன்.

கீதா கிழவிய சுத்த படுத்திட்டா.

ஆதித்யா to கீதா : நீ இவளோ தூரம் இரங்குவனு நான் எதிர் பாக்கல.

கீதா : நான் குடும்பத்துகாக பண்ணுவேன்.

ஆதித்யா சோகமா போயிடுறான்.



Rate this content
Log in

Similar tamil story from Drama