Arul Prakash

Thriller

5  

Arul Prakash

Thriller

மர்ம மரணம் 07

மர்ம மரணம் 07

3 mins
481


காலேஜ் பசங்க சில பேரு, ப்ரீத்தி சாவுக்கு காரணமானவங்கள சீக்கிரம் கண்டு பிடிக்க கோரி போராட்டம் நடத்துறாங்க. அந்த போராட்டதுக்கு கலந்துக்க proffessor கலிங்க மூர்த்திய கூப்பிடுறாங்க காலேஜ் பசங்க.

ராகுல் to கலிங்க மூர்த்தி : மாஸ்டர் நீங்களும் இந்த போராட்டத்துல கலந்துக்கணும், ப்ரீத்தி உங்களுக்கு செல்ல பிள்ள மாதிரி.

கலிங்க மூர்த்தி : நான் கலந்துகிட்டா எனக்கு வேல போக கூட வாய்ப்பு இருக்குடா. நீங்க போங்க.

காலேஜ் பசங்க போராட்டத்து தொடர்ந்து பன்றாங்க. கொஞ்சம் நேரம் கழிச்சு proffessor கலிங்க மூர்த்தி திடிர்னு அந்த போராட்டத்துல கலந்துகிறார். காலேஜ் பசங்க அவர கட்டி பிடிச்சு அழ ஆரமிச்சிடுறாங்க.

டிடெக்டிவ் வீராவும் முத்துவும் பேசிக்கிறாங்க.

வீரா : டேய் கேஸ்காக எதாவது கண்டுபிடினா, போன நோண்டிட்டு இருக்க.

முத்து : நான் உன்ன அதையே கேட்டா.

வீரா : டேய் நான் உன் பாஸ் டா, நீ என் அசிஸ்டன்ட்.

முத்து : இப்படியே சொல்லி சொல்லி என்ன இன்னைக்கு ஆபீஸ பெருக்க வச்சிட்ட.

வீரா : டெய்லி பெருக்க வரவன் இன்னைக்கு வரல, அதனால தான் டா உன்ன பெருக்க சொன்னேன். இவளோ ஏன் சில நாட்கள் நானே பெருக்கி இருக்கேன். நம்ம ஆபீஸ்.

முத்து : டேய் அண்ணா.

வீரா : டேய் ஆபீஸ்ல பாஸுன்னு தான் கூப்பிடனும்னு சொல்லி இருக்கேன்.

முத்து : சாரி பாஸ். ஒரு அதிர்ச்சிகரமான விஷயம்.

வீரா : என்ன அது.

முத்து : செத்துப்போன ப்ரீத்தியோட முகத்தை கலாய்ச்சு யாரோ மீம்ஸ் போட்டு இருக்காங்க.

வீரா : இமேஜ் மீம்ஸா, இல்ல வீடியோ மீம்ஸா.

முத்து : வீடியோ மீம்ஸ்.

வீரா : எந்த youtube சேனல்னு பாரு.

முத்து : funnymeemz.

வீரா : அவங்க காண்டாக்ட் நம்பர் கீழ குடுத்து இருக்காங்களானு பாரு, advertisement காக கண்டிப்பா குடுத்து இருப்பாங்க.

முத்து : இருக்கு

வீரா : ஏன் என் மூஞ்ச பாக்குற, கால் பண்ணு.

கால் பண்ணி location வாங்கி நேர்ல பாக்குறாங்க. அந்த மீம்ஸ் create பண்ண ஆளு ஜானினு ஒரு பையன். அவன் கிட்ட வீரா பேசுறாரு.

ஜானி : சொல்லுங்க சார் என்ன வேணும்.

வீடியோவ காற்றாரு வீரா.

வீரா : இந்த மீம்ஸ் create பண்ணது யாரு.

ஜானி : நான்தான் சார்.

வீரா : அந்த பொண்ணு செத்துட்டான்னு தெரியுமா.

ஜானி : சாரி சார், எங்களுக்கு தெரியாது.

வீரா : இந்த மீம்ஸ யாரு உருவாக்க சொன்னது.

ஜானி : ஒரு பையன் வந்து கேட்டான், அவன் யாருனு எனக்கு தெரியாது. காசு கூட ஆன்லைன் transaction தான்

வீரா : போன் நம்பர் கூட இல்ல.

ஜானி : இல்ல.

வீரா : எப்போ இந்த மீம்ஸ் create பண்ண சொன்னாங்க.

ஜானி : ஒரு வாரம் முன்னாடி பண்ண சொன்ன வேல சார். இப்போ தான் பண்ணோம்.

வீரா : எவளோ வாங்குனீங்க காசு.

ஜானி : 25,000.

வீரா : ஓகே தேங்க்ஸ். அப்பறம் அந்த மீம்ஸ டெலீட் பண்ணிடுங்க. இல்லாட்டி உங்களுக்கு தான் பிரச்னை வரும்.

வீராவும் முத்துவும் பேசிக்குறாங்க.

முத்து : ஒரு மீம்ஸ்க்கு 25,000 மா. பேசாம meme creator ஆகிடலாம் போல தெரியுது.

வீரா : பேசாம போய்டு, நானாவது நிம்மதியா இருப்பேன்.

முத்து : என்ன விரட்டுரதுலே இருப்ப.

வீரா : சரி யாரு இந்த meme create பண்ண சொல்லி இருப்பா

முத்து : அந்த டிரஸ் ஷாப் owner திவாகர்.

வீரா : அவளோ பெரிய ஆளு இந்த மாதிரி சின்ன புள்ள தனமா பண்ணி இருக்க மாட்டான். இது காலேஜ் பசங்க யாரோ பண்ண வேல.

முத்து : ப்ரீத்திக்கு, காலேஜே friends தான், யாரனு தேடுறது.

வீரா : அவளோட கிளோஸ் friends ah first assemble பண்ணு.

வர்ஷினி, ஜானகி,வினய் மூணு பேரையும் விசாரிக்க கூப்பிடுறான் முத்து. வீரா மூணு பேரு கிட்டயும் பேசுறான்.

வீரா : அந்த மீம்ஸ create பண்ணி சொன்னது யாரு.

வினய் : என்ன மீம்ஸ் சார்.

வீரா : ப்ரீத்திய கலாய்ச்சு யாரோ மீம்ஸ் போட சொல்லி இருக்காங்க இந்த காலேஜ் பசங்க.

வினய் : அவளுக்கு ஊரே friends, இதுல யாருனு கண்டு புடிக்கறது.

வீரா : first கிளோஸ் friends உங்க கிட்ட இருந்து ஆரமிக்கலாம். எல்லாரும் உங்க போன குடுங்க.

எல்லாரும் தயங்கி தயங்கி குடுக்கறாங்க.

எல்லாத்தையும் செக் பண்ணிட்டு.வீரா, ஜானகி கிட்ட பேசுறான்.

வீரா to ஜானகி : உன் account ல இருந்து யாருக்கு 25,000 போய் இருக்கு. யாருக்கு போச்சு.

ஜானகி : எப்படி சொல்றிங்க.

வீரா : இந்த மெசேஜ் வச்சு தான் சொல்றேன். யாருக்கு அனுப்புன 25,000.

ஜானகி : அது வந்து.

வீரா : சொல்றியா போலீஸ கூப்பிடவா.

ஜானகி அழ ஆரமிச்சிடுறா.

ஜானகி : நான் தான் பண்ணேன், எனக்கு ப்ரீத்தி மேல பொறாமை அவளுக்கு இவளோ மாஸ் இருக்கறது பாத்து. அதுனால அவள அசிங்க படுத்த இப்படி பண்ணேன்.

வீரா : செத்தவங்கள இப்படி அசிங்க படுத்தரதா.

ஜானகி : இது அவ சாவறதுக்கு ஒரு வாரம் முன்னாடி பண்ணேன். ஆனா அவ சாவணும் நினைச்சது இல்ல.

வீரா : ஒரு வேல போலீஸ் வந்து உன்ன கேட்கலாம், கேட்டா நாங்க ஒன்னும் பண்ண முடியாது.

ஜானகி : சார் என்ன காப்பாத்துங்க.

வீரா : என்னால எதும் பண்ண முடியாது மா, சாரி. இது என் கைல இல்ல.

ஜானகி அழ ஆரமிச்சிடுறா. வினையும், வர்ஷினியும் அங்க இருந்து போயிடுறாங்க.

வீராவும் முத்துவும் பேசிட்டு இருக்காங்க.

முத்து : பாஸ் என்ன இந்த மீம்ஸ் பிரச்னை கேஸ்க்கு எதாவது lead தரும்னு பாத்தா. இப்டி சப்பையா முடிஞ்சு போச்சு.

வீரா : அப்டி தான் இருக்கும், நேரா போய் கொலைகாரண கண்டுபிடிச்சிட முடியுமா.

முத்து : சரி அடுத்து யாரை விசாரிக்கறது.

வீரா : ஆகாஷ். இவன் மேல பெரிய சந்தேகம் இல்ல இருந்தாலும் இவன விசாரிக்கணும்.

வீராவும் ஆகாஷும் பேசிக்குறாங்க.

வீரா to ஆகாஷ் : நீ, ப்ரீத்தி கொலை நடக்கும் போது வீட்ல இல்லனு உன் வீட்டு பக்கத்து வீட்டு காரங்க சொல்லும் போது தெரிஞ்சிகிட்டேன். நீ வீட்ல இருந்து கிளம்பி அரை மணி நேரம் கழிச்சு தான் ப்ரீத்தி வந்தானு தெரியும். நீ கண்டிப்பா இந்த கொலைய பண்ணலனு நான் நம்புறேன். நீ யாரு மேலயாது சந்தேக படுறியா.

ஆகாஷ் : டிரஸ் ஷாப் owner திவாகர் தான்.

சொல்லிட்டு ஆகாஷ் அழ ஆரமிக்குறான்.

வீரா : சரி நீ கிளம்பு.



Rate this content
Log in

Similar tamil story from Thriller